உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு

டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்க கூடாது என உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜாமின் வழங்குவது குறித்து உச்சநீதிமன்றம் நாளை முடிவு செய்ய உள்ள நிலையில் அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக, கெஜ்ரிவால் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் நாளை (மே 10) விசாரித்து இடைக்கால ஜாமின் அளிப்பது குறித்து உத்தரவு பிறப்பிக்க உள்ளது. இதற்கிடையே, டில்லி கெஜ்ரிவால் மீது டில்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் நாளை அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறது.

அமலாக்கத்துறை எதிர்ப்பு

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இன்று (மே 09) அமலாக்கத்துறை பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது. அப்போது உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில்,‛‛ டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்க கூடாது. கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்குவது தவறான முன்னுதாரணத்தை உருவாக்கும். தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டும் எனக் கூறி விசாரணையை தவிர்க்க வழிவகை செய்யும்'' என தெரிவிக்கப்பட்டது. ஜாமின் வழங்குவது குறித்து உச்சநீதிமன்றம் நாளை முடிவு செய்ய உள்ள நிலையில் அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கெஜ்ரிவாலுக்கு ஜாமின் கிடைக்குமா? அல்லது கிடைக்காதா? என ஆம்ஆத்மியினர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

rao
மே 10, 2024 10:43

SC will be setting a wrong precedent if Kejriwal is given interim bail, it will show SC in a poorly and in common man perception law is only for mighty and not too common people of this country.


தாமரை மலர்கிறது
மே 09, 2024 21:51

தேர்தல் முடியும்வரை, கெஜ்ரிக்கு ஜாமீன் கொடுக்கக்கூடாது அப்படி கொடுத்தால் உத்தமபுத்திரன் போன்று பேசி மக்களை திசைதிருப்புவார்


SP
மே 09, 2024 19:53

அமலாக்கத்துறையா?நீதிமன்றமா? என்று சென்றுகொண்டுள்ளது இது நல்லதல்ல.


அப்புசாமி
மே 09, 2024 17:45

ஆதாரம் இல்லாம கைது பண்ணிட்டு இன்னிக்கி விசாரணைக்கு ஒத்துழைக்கலை. ஜாமீன் தரமுடியாது


Rajagiri Apparswamy
மே 09, 2024 18:05

டெல்லி நீதிமன்றம் ஆதாரம் ill


GMM
மே 09, 2024 17:09

கேஜ்ரிவால் ஜாமின் கூடாது ஏற்கனவே பல அமலாக்க துறை சம்மனுக்கு ஆஜர் இல்லை பெரும் குற்றம் மறைந்து விடும் ஐ போன் உடைக்க வேண்டிய அவசியம்? அரசியல் குற்றம் நிரூபிப்பது கடினம் இருந்தும் அமலாக்க துறை ஆதாரம் திரட்டியுள்ளது வெளிநாட்டு ஆதரவு தெரிகிறது ஜாமீன் கொடுத்தால், சாட்சி கலையும்


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ