உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு அமலாக்கத்துறை சம்மன்

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு அமலாக்கத்துறை சம்மன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஆன்லைன் சூதாட்ட செயலியுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷிகர் தவானுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.பிரபல ஆன்லைன் சூதாட்ட செயலி ஒன்று சட்டவிரோதமாக செயல்பட்டு, கோடிக்கணக்கான நிதி முறைகேட்டிலும், சூதாட்டத்திலும் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.அதனடிப்படையில், இந்த சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்திய பிரபல நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ராணா டக்குபதி, விஜய் தேவரகொண்டா, நிதி அகர்வால், பிரணிதா உள்பட 25 பேர் மீது தெலங்கானா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.இதனிடையே, இந்த செயலியின் விளம்பரத் தூதராக இருந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் மற்றொரு முன்னாள் வீரர் ஷிகர் தவானுக்கும் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்தியது தொடர்பாக விளக்கம் அளிக்க நேரில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Vasan
செப் 04, 2025 14:01

Will Saurav Ganguly also be summoned? Shubman Gill too.


Perumal Pillai
செப் 04, 2025 13:23

Wherever Prakash Raj shows up, misappropriation, swindling, and shady dealings are never far behind.


வாய்மையே வெல்லும்
செப் 04, 2025 18:40

நீங்கள் கூறுவது உண்மை. திருட்டு பய பிரகாசு .. எங்க இருந்தாலும் திரிசம வேலை தான்.


Arul
செப் 04, 2025 12:28

தமிழ் நாடுவை பாத்து கத்துக்க .... இல்லனா எங்க தலீவரு பூக்க வாங்கி படி... இன்னும் வெவரம் தெரியாமலே இருக்க்க ..


சமீபத்திய செய்தி