உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ‛எங்க மானம் மரியாத போச்சு : தோனி மீது தொழில் பங்குதாரர்கள் அவதூறு வழக்கு

‛எங்க மானம் மரியாத போச்சு : தோனி மீது தொழில் பங்குதாரர்கள் அவதூறு வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராஞ்சி: தங்கள் மீது ரூ. 15 கோடி மோசடி செய்து விட்டதாக கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த வழக்கினை எதிர்த்து இரு தொழில் பங்குதாரர்கள் தோனி மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளனர்.கிரிக்கெட் அகாடமி துவங்குவது தொடர்பாக 2017-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தபடி தன்னிடம் ரூ. 15 கோடி பெற்று ஒப்பந்தத்தை நிறைவேற்றாமல் மோசடி செய்து விட்டதாக தனது தொழில்முறை பங்குதாரர்களான மிஹிர் திவாகர், சவுமியா விஷ்வா ஆகிய இருவர் மீது இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் தோனி ராஞ்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 5-ம் தேதி கிரிமினல் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாணைக்கு வரவுள்ள நிலையில் தொழில் பங்கு தாரர்ளான மிஹிர் திவாகர், சவுமியா விஷ்வா ஆகிய இருவரும் தோனி மீது டில்லி உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளனர்.தங்கள் மீது தோனி தொடர்ந்துள்ள வழக்கு விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது, தோனியால் எங்களுக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டதாகஅவர் மீது இந்திய தண்டனை சட்டம் 1860 பிரிவு 499-ன் கீழ் டில்லி ஐகோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு வரும் 29-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்புசாமி
ஜன 19, 2024 11:28

பாஞ்சி லட்சம் மாதிரி ...


katharika viyabari
ஜன 18, 2024 22:53

...வழக்கறிஞர்கள் இருக்கும் வரை, நல்லவன் இங்கே வாழ முடியாது.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை