உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எத்னால் தொழிற்சாலைக்கு பூட்டு: கர்நாடக உயர்நீதிமன்றம் தடை

எத்னால் தொழிற்சாலைக்கு பூட்டு: கர்நாடக உயர்நீதிமன்றம் தடை

பெங்களூரு : பா.ஜ., -- எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னாலின் தொழிற்சாலைக்கு பூட்டு போடும், மாசு கட்டுப்பாட்டு வாரிய உத்தரவுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.கலபுரகி, சிஞ்சோலியின், சிம்மாயிதலாயி கிராமத்தில், விஜயபுரா பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னாலுக்கு சொந்தமான சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் கலந்து, நீர் நிலைகள் அசுத்தமடைவதாக, குற்றச்சாட்டு எழுந்தது.இதுகுறித்து, நடவடிக்கை எடுத்த கர்நாடக மாசு கட்டுப்பாடு ஆணையம், ஜலம் மற்றும் வாயு சட்டத்தை மீறியதால், சர்க்கரை ஆலைக்கு சீல் வைக்கும்படி நோட்டீஸ் அளித்தது. ஆலைக்கு அளிக்கப்பட்ட மின்சாரம், குடிநீர் இணைப்பை துண்டிக்கும்படி உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து, கர்நாடக உயர்நீதிமன்றத்தில், எத்னால் மனுத் தாக்கல் செய்தார். இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிமன்றம், சர்க்கரை ஆலையை மூட, மாடு கட்டுப்பாடு வாரியம் பிறப்பித்த உத்தரவுக்கு நேற்று தடை விதித்தது.இதுகுறித்து, எத்னால் கூறுகையில், ''என் சர்க்கரை ஆலையை மூடும் சதித் திட்டத்துக்கு, கர்நாடக உயர்நீதிமன்றம் தடை போட்டுள்ளது. இது உண்மைக்கு கிடைத்த வெற்றியாகும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ