உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 100 ஆண்டுகள் ஆனாலும் ஆர்ஜேடியின் காட்டாட்சியை மக்கள் மறக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி

100 ஆண்டுகள் ஆனாலும் ஆர்ஜேடியின் காட்டாட்சியை மக்கள் மறக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' எதிர்க்கட்சிகள் எவ்வளவு மறைத்தாலும், பீஹாரில் ஆர்ஜேடியின் காட்டாட்சியை மக்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள்,'' எனப் பிரதமர் மோடி கூறியுள்ளார்.பீஹார் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பாஜவினருடன் கலந்துரையாடிய மோடி கூறியதாவது: ஜனநாயகத்தின் திருவிழாவை பீஹார் கொண்டாட உள்ளது. மாநிலத்தின் வளர்ச்சிக்கு புது அத்தியாயம் எழுதுவதற்காக நடக்கும் தேர்தல் ஆகும். இதில் பீஹார் இளைஞர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. எதிர்க்கட்சிகள் எவ்வளவு மறைத்தாலும், பீஹாரில் நடந்த காட்டாட்சியை 100 ஆண்டுகள் ஆனாலும் மக்கள் மறக்க மாட்டார்கள். காட்டாட்சி நடந்ததை இளைஞர்களுக்கு முதியவர்கள் எடுத்து சொல்ல வேண்டும். இதனை பாஜவினர் உறுதி செய்ய வேண்டும். ஸ்திரத்தன்மை இருக்கும் போது வளர்ச்சி வேகம் பெறும். இது தான் பீஹாரில் தேஜ அரசின் பலம். இதனால் தான் பீஹார் வேகம் எடுத்துள்ளது. மீண்டும் தேஜ கூட்டணி அரசு வேண்டும் என இளைஞர்கள் உற்சாகமாக சொல்கின்றனர்.ஒரு ஓட்டில் அனைத்து சக்திகளும் அடங்கி உள்ளன. ராமர் கோயில் கட்டுவதற்கான சூழ்நிலையை மக்கள் அளித்த ஓட்டு தான் ஏற்படுத்தியது. ஆப்பரேஷன் சிந்தூர் எடுக்கப்பட்டதுடன், நக்சல் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு நாடு வேகமாக வளர்ச்சி பெறுகிறது. இதுதான் ஓட்டின் வலிமை மாநிலத்தில் காட்டாட்சியை அகற்றிய மக்கள், மீண்டும் எந்த சூழ்நிலையிலும் அந்த ஆட்சி மீண்டும் வருவதை விரும்பவில்லை. இவ்வாறு பிரதமர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Mario
அக் 23, 2025 20:04

100 ஆண்டுகள் ஆனாலும் காட்டாட்சியை மக்கள் மறக்க மாட்டார்கள்


ராமகிருஷ்ணன்
அக் 23, 2025 19:58

தமிழகத்தில் நடக்கிற திருட்டு ஊழல் ஆட்சியை பற்றியும் சொல்லுங்க ஜீ


ஆரூர் ரங்
அக் 23, 2025 19:46

ஊழல்வாதி எனக்கூறி ஜெயாவை எதிர்த்த திமுக பலமுறை தண்டிக்கப்பட்ட குற்றவாளியான லாலு வை ஆதரிக்கிறது. ஸ்டாலினும் அங்கு சென்று பிரச்சாரம் செய்யப் போகிறாராம்.


ஆரூர் ரங்
அக் 23, 2025 19:43

பல ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்ட ஒருவர் ( லாலு) தலைமயிலான கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளிக்கும் அநியாயம் வேறெந்த ஜனநாயக நாட்டிலும் நடக்க முடியாது.


T.Senthilsigamani
அக் 23, 2025 19:41

சபாஷ் மோடிஜி லாலுவின் காட்டாட்சியால் தான் இந்தியாவில் பின்தங்கிய மாநிலமாக பிஹார் உள்ளது


GoK
அக் 23, 2025 19:04

மன்னிக்கவும் இரண்டே ஆண்டுகளில் அவசரநிலை பிரகடனத்தை மறந்து அந்த அம்மையாரையும் அவர் குடும்பத்தினரையும் இந்த மக்கள் தலையில் வைத்து தாங்குகின்றனரே. அதை விடுங்கள் இங்கே ஊழல் குடும்பம் என்னும் ஆட்சி செய்கிறதே


KOVAIKARAN
அக் 23, 2025 18:54

உண்மை. லல்லு பிரசாத் யாதவ் முதலமைச்சராக இருந்தபோது நடந்த அக்கிரம, அநியாயங்கள் இந்தியாவில் வேறு எந்த மாநிலங்களிலும் நடைபெறவில்லை, லல்லு பிரசாத் மாட்டு தீவன வழக்கில் சிறைக்குச் சென்றவுடன், ஆறாம் வகுப்பு வரை படித்த அவரது மனைவி ரபிரி தேவி அவர்களை முதலமைச்சராக்கிவிட்டு சிறை சென்றார். அதன்பின்பும் அக்கிரமங்கள் தொடர்ந்தன.


SANKAR AND SANKAR
அக் 23, 2025 19:03

what about Modis accusations against Nitish ? He became clean after going thro bjp s washing machine process?!


தாமரை மலர்கிறது
அக் 23, 2025 18:52

தேஜஸ்வி கனவில் கூட முதல்வர் ஆகமுடியாது.


புதிய வீடியோ