உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சொல்வதெல்லாம் பொய்: வயநாடு செலவுக்கணக்கை மறுக்கிறார் பினராயி விஜயன்

சொல்வதெல்லாம் பொய்: வயநாடு செலவுக்கணக்கை மறுக்கிறார் பினராயி விஜயன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: ''வயநாடு நிலச்சரிவு தொடர்பாக வெளியான வரவு, செலவு குறித்த தகவல் அனைத்தும் ஆதாரமற்றவை, '' என கேரள அரசு தெரிவித்து உள்ளது.பேரிடர் நிவாரண நிதியை, மாநிலத்தை ஆளும் இடதுசாரி அரசு முறைகேடு செய்வதாக பாஜ., காங்., கூட்டணி , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை குற்றம்சாட்டின. மீட்பு பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்கள் பெயரில் கோடிக்கணக்கான பணத்தை பினராயி விஜயன் அரசு பெற்றுள்ளதாக பா.ஜ., குற்றம் சாட்டியது.அதை மறுத்து முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பேரிடருக்கு தேவையான அவசர கால நிதி குறித்து மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தோம். அதில், பல்வேறு தலைப்புகளில் தேவைப்படும் நிதி குறித்து குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், அதனை மாநில அரசு செலவு செய்த நிதி என மீடியாக்கள் செய்தி வெளியிடுகின்றன. இது ஆதாரமற்ற செய்தி. பேரிடர் செலவு குறித்து மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தயாரித்த அறிக்கை அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கையை தவறாக சித்தரிக்கின்றனர். மத்திய அரசிடம் நிதி பெறும் மாநில அரசின் முயற்சியை தடுக்கவே இது போன்று தவறான செய்தி பரப்பப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Iyer
செப் 17, 2024 21:07

தலைவிரித்தாடும் ஊழல்களால் சீனா இன்று மூழ்கும் நிலைக்கு சென்றுவிட்டது. Xi Xinping யின் நாற்காலி ஆட்டம் ஆடுகிறது. கம்யூனிஸ்ட்கள் உள்ள எல்லா நாட்டிலும் இதே கத்தி தான். இந்தியாவிலும் இன்னும் 10 வருடங்களில் முழுவதும் ஒழியும்.


Apposthalan samlin
செப் 17, 2024 18:14

ஒன்றிய அரசு பிஜேபி அல்லாத மாநிலங்களில் நிதி கொடுப்பது இல்லை அப்படி இருக்கையில் gst கேட்க கூடாது பிஜேபி அல்லாத மாநிலங்கள் ஓன்று செறிந்து போராட வேண்டும் .


என்றும் இந்தியன்
செப் 17, 2024 17:53

பல்வேறு தலைப்புகளில் தேவைப்படும் நிதி???அப்படின்னா இறந்தவர்களின் உடலை எடுத்து செல்ல, எரிக்க, ஸம்ப்ரதாயா செலவு செய்ய, சாம்பல் சட்டியில் கொடுக்க, டீ கொடுக்க, வந்தவர்களுக்கு சாப்பாடு கொடுக்க ................................... என்று பல்வேறு தலைப்புகளில் கொடுத்திருக்கிறாயா என்ன???


Venkatasubramanian krishnamurthy
செப் 17, 2024 17:06

மத்திய அரசிடம் தேவைப்படும் நிதிக் கணக்காக சமர்ப்பித்த அறிக்கை அதுவென பினராயி கூறுவது இருக்கட்டும். அதற்காக ஒரு உடலை அடக்கம் செய்யும் செலவாக 75000 ரூபாய் எனக் கேட்பது எந்த விதத்தில் ஏற்றுக்கொள்ள முடியும்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை