உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாதி ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த தாமதமாக வாய்ப்பு; காரணம் இதுதான்!

பயங்கரவாதி ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த தாமதமாக வாய்ப்பு; காரணம் இதுதான்!

புதுடில்லி: மனிதாபிமான அடிப்படையில், பயங்கரவாதி ராணா நாடு கடத்தலுக்கு எதிராக அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளான். இதனால் அவனை நாடு கடத்துவது சில வாரங்கள் தாமதம் ஏற்படும் என சட்ட வல்லுநர்கள் தெரிவித்தனர். மஹாராஷ்டிராவின் மும்பையில், 2008ம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், ஆறு அமெரிக்கர்கள் உட்பட 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர் - இ - தொய்பா அமைப்புக்கு உதவியதாக பாக்., வம்சாவளியைச் சேர்ந்த தஹாவூர் ராணா மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. கடந்த 2013ல் ராணாவுக்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.இதற்கிடையே ராணாவை நாடு கடத்தக் கோரி அமெரிக்காவிடம் நம் நாட்டு அரசு கோரிக்கை வைத்தது. இதையேற்று, நாடு கடத்த நீதிமன்றம் 2023ல் உத்தரவு பிறப்பித்தது. நாடு கடத்தலுக்கு தடை கோரி அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் ராணா மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தான். இந்த மனுவை நிராகரித்த சுப்ரீம் கோர்ட், இந்தியாவுக்கு நாடு கடத்த அனுமதி வழங்கியது.ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சூழலில், ராணாவை நாடு கடத்த, இந்திய அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. இந்நிலையில், மனிதாபிமான அடிப்படையில், நாடு கடத்தலுக்கு எதிராக பயங்கரவாதி ராணா மேல்முறையீடு செய்துள்ளான். இந்த மனுவை அந்நாட்டு உச்சநீதிமன்றம் விரைவில் விசாரிக்க உள்ளது.இதனால் அவனை நாடு கடத்த சில வாரங்கள் கால தாமதம் ஏற்படும் என சட்ட வல்லுநர்கள் தெரிவித்தனர். அதேநேரத்தில், ராணாவின் மேல்முறையீட்டு மனுவை அந்நாட்டு உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிடும். இதனால் ராணாவின் கடைசி முயற்சியும் தோல்வியில் தான் முடியும் என இந்தியாவை சட்ட வல்லுநர்கள் கூறி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Oru Indiyan
பிப் 16, 2025 13:10

இவனை போர் தியாகி என்பார்கள் ...


Ramesh Sargam
பிப் 16, 2025 12:52

பயங்கரவாதி ராணா குண்டு வைத்து மக்களை கொள்வான். அது மனிதாபிமான செயலா? ஆனால் அவன் மனிதாபிமான அடிப்படையில், அவனை நாடு கடத்தக்கூடாது என்று நீதிமன்றத்திற்கு முறையிடுவான். அவன் உயிர் அவனுக்கு முக்கியம். ஆனால் பொது மக்களின் உயிர்...


venugopal s
பிப் 16, 2025 12:51

அப்படி என்றால் இவரை நாடு கடத்த அமெரிக்கா ஒப்புக் கொண்டதற்கும் அமெரிக்க உச்சநீதி மன்றத் தீர்ப்பு தான் காரணம், இந்தியப் பிரதமரின் முயற்சி அல்ல!


M Ramachandran
பிப் 16, 2025 11:51

மனிதாபிமான அடிப்படையில், பயங்கரவாதி ராணா நாடு கடத்தலுக்கு எதிராக அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளான். கேட்டு கெட்ட முண்டாம். மற்றவர்களை இவ்விரக்கமின்றி கொன்ற போது இந்த மனிதாபிமானம் உன்னை ....


Tetra
பிப் 16, 2025 12:07

நம் உச்ச நீதிமன்றத்துக்கு இல்லாத மனிதாபிமானமா? கபில் சிபலும் அபிஷேக் மனு ஸிங்வியும் இந்த தீவிரவாதி அமெரிக்க சிறையில் ஏற்கனவே தண்டனை அனுபவித்து விட்டார் . ஆகவே அவரைவிடுதலை செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். உச்ச நீதிமன்றமும் மனிதாபிமான உணர்வுடன் இவனை விடுவிப்பார்கள். செத்தவர்கள். ?அரசியலமைப்பு சட்டத்தில் தான் மோதிக்கொள்ள வேண்டும்


Sivagiri
பிப் 16, 2025 11:35

எதுவும் நடக்காது, இதெல்லாம் அமெரிக்காவின் பிளாக்மெயில் தான், ஒன்னு ரஷ்யாவை விட்டு விலகுவது, ட்ரம்மிடம் மோடி சொன்ன படி எப்35 போர் விமானிகளுக்கு பணத்தை கட்டுவது


சலபதி
பிப் 16, 2025 11:04

அமெரிக்காவுக்கு கப்பம் கட்டணும்.


தமிழன்
பிப் 16, 2025 09:44

இந்த எழவெடுத்த கேடுகெட்ட ஈனப்பிறவியை இங்கு கொண்டு வருவதற்குள் ஆவன் ஆயுசே முடிஞ்சிறும் அப்படியே இவனை இங்கு கொண்டு வந்தால் முதலில் 20 நகத்தையும் பிடுங்கி எறிய வேண்டும் பின்பு உடலை கட்டி படுக்கவைத்து மர அறுவை மெசினில் முதலில் பாதம் முட்டி முழங்கால் கை தொடை என கொஞ்சம் கொஞ்சமாக அறுத்து எறிய வேண்டும் பின்பு ஒரு வாரம் கழித்து கழுத்தை அறுத்தெறிய வேண்டும் அப்போதுதான் உயிர் வலி தெரியும் சும்மா ஆயுள் தண்டனை தூக்கு தண்டனை இதெல்லாம் தண்டனையே கிடையாது


Sudha
பிப் 16, 2025 09:35

அவன் வரமாட்டான், என்ன பெட்டு


subramanian
பிப் 16, 2025 11:21

அவனை இந்தியா கொண்டு வந்து விட்டால் நீ நாட்டைவிட்டு ஒட வேண்டும் அதுதான் பெட்


குமரன்
பிப் 16, 2025 08:06

மனிதாபிமான இல்லாதவன் அதை மற்றவர்களிடம் எப்படி எதிர்பார்க்கிறான் தார்மீக உரிமை இல்லை தன்னை பாதுகாக்க நினைப்பவன் பிறர் உயிரை எப்படி எடுக்கலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை