உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரபல தாதா சுட்டுக்கொலை

பிரபல தாதா சுட்டுக்கொலை

புனே, மஹாராஷ்டிராவில் நிகழ்ந்த பல்வேறு கொலை, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களில் சரத் மோஹல், 60, மற்றும் அவரது கூட்டாளிகள் ஈடுபட்டு வந்தனர். இந்திய முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய முஹமது கத்தீல் சித்திக் என்பவரை, சரத் மோஹல் கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் சரத் மோஹல், தன்னிடம் உள்ள நிலம் மற்றும் பணத்தை தன் கூட்டாளிகளுடன் நேற்று பங்கீடும்போது, அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. அப்போது, சரத் மோஹலை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அக்கும்பல் தப்பிச் சென்றது.துப்பாக்கிச் சூட்டில் சரத் மோஹல் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை