உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குறைந்தது ஐ.பி.எல்., மோகம்; சொத்தை ஆட்டத்தால் சோகத்தில் ரசிகர்கள்; டிக்கெட் விற்பனை மந்தம்!

குறைந்தது ஐ.பி.எல்., மோகம்; சொத்தை ஆட்டத்தால் சோகத்தில் ரசிகர்கள்; டிக்கெட் விற்பனை மந்தம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : கூடுதல் விலைக்கு கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை, வீரர்கள் சொதப்பல் ஆட்டத்தை கண்ட ரசிகர்கள், இந்த முறை சென்னையில் நடக்கும் ஐ.பி.எல்., போட்டியை காண ஆர்வம் காட்டவில்லை. இதனால் டிக்கெட் வாங்க ஆளில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி தொடர் தற்போது நாடு முழுவதும் நடக்கிறது. போட்டிகளுக்கான டிக்கெட் கட்டண நிர்ணயத்தில் முறைகேடு நடப்பதாகவும், கூடுதல் விலைக்கு கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை நடப்பதாகவும் ரசிகர்கள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர்.இவ்வாறு அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்கி போட்டியை காணச் செல்லும் ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் ஆட்டம் எதுவும் சிறப்பாக இல்லை. சென்னை அணி வீரர்கள், அடுத்தடுத்த போட்டிகளில் சொதப்பி வருகின்றனர். தொடர்ந்து 6 போட்டிகளில் தோல்வியை தழுவியதால் ரசிகர்களின் ஆர்வம் குறைந்து விட்டது.இந்நிலையில் வரும் 25ம் தேதி ஐதராபாத்தை எதிர்த்து சென்னை அணி சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட உள்ளது. இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை தொடங்கியது. வழக்கமாக, டிக்கெட் விற்பனை தொடங்கிய ஒரு மணிநேரத்திலேயே அனைத்து டிக்கெட்டுக்களும் விற்று தீர்ந்து விடும். ஆனால், இன்று அப்படி நடக்கவில்லை. டிக்கெட் விற்பனை மிகவும் மந்தமாக நடப்பதாக, ரசிகர்கள் கூறியுள்ளனர்.இதன் மூலம், சென்னை அணியின் ஆட்டம் மீதும், ஒட்டு மொத்தமாக ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி மீதும் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தி வெட்ட வெளிச்சமாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

THIRUMALAI KUMAR
ஏப் 22, 2025 12:29

நல்லது இப்பாவது IPL மோகத்தில் காசை வீண் செய்யாமல் இருங்கள் - டிவில் பாருங்கள் போறும் - அதுவும் அவர்களுக்கு வருமானம்தான்


மீனவ நண்பன்
ஏப் 21, 2025 22:37

தோனி அஸ்வினுக்கு பதில் த்ரிஷா நயன்தாராவை டீமில் சேர்த்திருக்கலாம்


Srinivasan Krishnamoorthy
ஏப் 21, 2025 20:39

total ipl is waste. it won't take to realize this.


HARIHARAN
ஏப் 21, 2025 20:12

தோனி விளையாட்டு முறை இனி எடுபடாது. ப்ளீஸ் change Fleming, Dhoni and Kasi viswanathan.


மீனவ நண்பன்
ஏப் 21, 2025 22:36

காசி விஸ்வநாதரா ..என்னாச்சு உங்களுக்கு ?


Yasararafath
ஏப் 21, 2025 18:38

இந்த வருடம் சென்னை விளையாட்டு படு மோசம். டிக்கெட் பணம் வீண். நேரம் வீண்.


Saai Sundharamurthy AVK
ஏப் 21, 2025 17:58

இந்த ஐ.பி.எல் சீசனில் சி.எஸ்.கே அணிக்கு அதிர்ஷ்டம் இல்லை. அவ்வளவு தானே தவிர மற்றபடி 176, 200 ரன்கள் வரை எடுக்கும் ஆற்றல் இருக்கிறது. ஆனால் மற்ற அணிகள் இதை விட அதிக ரன்கள் எடுத்தால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும் ??? நம்மைப் பொறுத்தவரை நாம் பார்க்க வேண்டியதெல்லாம் இந்திய அணிக்கு நல்ல வீரர்கள் கிடைப்பார்களா என்று தான் பார்க்க வேண்டும். எந்த அணியில் எந்த வீரர்கள் நன்றாக விளையாடுகிறார்கள் என்று தான் பார்க்க வேண்டும். ஆகவே, வெற்றி தோல்வியை பார்க்க கூடாது.....!!!!


Venkatesan Srinivasan
ஏப் 21, 2025 16:40

உபியில் சங்கிகள் மேல் ஏழரை லட்சம் கோடி கடன் இல்லை. இங்கே தமிழ்நாட்டில் மங்கி உபிக்கள் மேல் ஏழரை - ஏழரை லட்சம் கோடி கடன். இதில் புத்திசாலி உபி சங்கியா? மங்கி உபியா? உபி சங்கிகள் ஒரே கும்பமேளாவில் பல லட்சம் கோடி வருமானம் பார்த்து விட்டனர்.


sasidharan
ஏப் 21, 2025 16:32

சென்னை அணித்தேர்வு இம்முறை மிகவும் மோசம் . ஜெயிக்க வேண்டும் என்ற ஆர்வம் துளி கூட இல்லை ஏதோ கடமைக்கு விளையாடி வருகின்றனர் . காசு கொடுத்து பார்ப்பவர்களை அதி முட்டாளாக்கி விட்டார்கள் .


Guna Gkrv
ஏப் 21, 2025 16:03

மரியாதையை யாக டோனி இந்த ஐ பி எல் இருந்து இப்பொழுதே விலகிக்கொள்ளவேண்டு அதுதான் அவருக்கு மரியாதையை இல்லை என்றால் கேவலமாக போயிவிடும் .


naranam
ஏப் 21, 2025 15:32

போதும் இந்த ஐபிஎல் பைத்தியம்! ஐபிஎல் போட்டிகள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டாலும் மக்களுக்கு நல்லது தான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை