உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நம் நாடு எப்படி முன்னேறும்?: மம்தா கேள்வி

நம் நாடு எப்படி முன்னேறும்?: மம்தா கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: 'அடிப்படை உரிமைகளுக்குப் போராடியதற்காக கண்ணீர் புகை குண்டுகளால் விவசாயிகள் தாக்கப்படும் போது நம் நாடு எப்படி முன்னேறும்?' என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பி உள்ளார்.இது குறித்து மம்தா பானர்ஜி கூறியிருப்பதாவது: விவசாயிகளின் எதிர்ப்பை அடக்குவதற்குப் பதிலாக, நமது தேசத்திற்குத் தீங்கு விளைவித்த அதிகார வெறி மற்றும் ஆட்சியின்மை ஆகியவற்றைத் தாழ்த்துவதில் பா.ஜ., கவனம் செலுத்த வேண்டும். அரசின் அடாவடித்தனத்திற்கு எதிராக நமது விவசாயிகளுடன் ஒற்றுமையாக நிற்போம்.விவசாயிகள் மீது பா.ஜ.,வினர் நடத்திய தாக்குதல் கண்டனத்துக்குரியது. அடிப்படை உரிமைகளுக்குப் போராடியதற்காக கண்ணீர் புகை குண்டுகளால் விவசாயிகள் தாக்கப்படும் போது நம் நாடு எப்படி முன்னேறும்?. இவ்வாறு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 43 )

g.s,rajan
பிப் 14, 2024 11:39

நம் நாடு லஞ்சம் மற்றும் ஊழலில் எப்படியாவது முன்னேறிவிடும்.....


vbs manian
பிப் 14, 2024 09:23

டெல்லி கல்கத்தாவாக மாறினால் நாடு முன்னேறி விடும்.


Ramesh Sargam
பிப் 14, 2024 09:07

ஆம், மமதா, ராகுல், சோனியா, ஸ்டாலின் போன்றவர்கள் இந்த நாட்டில் இருக்கும்வரை நாடு மெதுவாகத்தான் முன்னேறும்.


Libra
பிப் 14, 2024 06:30

தீதி நமது நட்பு நாடுகள் முன்னேற்றம் குறித்து பேசுகிறார் போல


J.V. Iyer
பிப் 14, 2024 06:24

தீதி, உங்கள் ஆட்சி இருக்கும்வரை, பெங்கால் வளராது. உண்மை. உங்கள் ஆட்சி காட்டாட்சி அல்லவா? திருட்டு மாடல் ஆட்சி போல


ramani
பிப் 14, 2024 06:23

உங்கள் போன்ற அரசியல்வாதிகள் போராட்டத்தை தூண்டிவிட இருக்கையில் நாடு எப்படி முன்னேறும்


Sathyan
பிப் 14, 2024 05:41

உங்களை போன்றவர்கள் ஒழிந்தால் நாடு நன்றாகத்தான் இருக்கும்.


Ramesh Sargam
பிப் 13, 2024 23:46

நாடு நல்லாத்தான் முன்னேறிட்டு இருக்கு. ஆனால் உங்களை போன்ற தேசதுரோகிகளை மோடி முன்னேற விடவில்லை. முன்னேறவிடவும் மாட்டார். நீங்கள் இப்படியே அழுது, புலம்பி போகவேண்டியதுதான்.


Nagarajan D
பிப் 13, 2024 22:37

சிங்கூரில் என்ன நடந்தது? அதுவே தான் இப்பவும் நடக்கிறது... அது சரியென்றால் இது சரி... அது தவறென்றால் இதுவும் தவறு பதில் சொல்லுங்க மம்தா பேகம்


Govindh Sharma
பிப் 13, 2024 22:21

பிஜேபிக்கு ஓட்டு போட்டதற்காக குண்டர்களை அனுப்பி வைத்த தலைவி பேசும் பேச்சு கேட்டுக் கொள்ளுங்கள்


மேலும் செய்திகள்