உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குழந்தைகள் கண்முன் தந்தை சுட்டுக்கொலை

குழந்தைகள் கண்முன் தந்தை சுட்டுக்கொலை

மீரட்: குழந்தைகள் கண் முன் தந்தை சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் உ.பி.யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உ.பி. மாநிலம் மீரட் நகரைச் சேர்ந்தவர் அர்ஷாத் 32, அதே பகுதியைச் சேர்ந்த பிலால் இவருக்கும் ஏற்கனவே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் முன் விரோதம் இருந்துள்ளது.இந்நிலையில் அர்ஷாத், மீரட்டில் உள்ள கிளப் ஒன்றில் தனது மைனர் குழந்தைகளான இரு பெண்கள், ஒரு ஆண் என மூன்று குழந்தைகளுடன் அங்குள்ள நீச்சல் குளத்திற்கு வந்துள்ளார்.அங்கு வந்த பிலால் என்பவர், அர்ஷாத்துடன் வாக்குவாதம் செய்தார். அப்போது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்ட நிலையில் பிலால் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அர்ஷாத் தலையில் சுட்டதில் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்தார். இச்சம்பவம் மூன்று குழந்தைகள் கண்முன் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

S. Neelakanta Pillai
ஜூன் 06, 2024 12:43

அற்ப காரணங்களுக்காக பொது இடத்தில் இது போன்று கொடிய குற்றம் செய்பவர்களை தயவு தாட்சண்யம் இன்றி தூக்கு தண்டனை வழங்க வேண்டும்.


Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 06, 2024 02:23

லோக்சபா தேர்தல் முடிவின் விளைவு இவ்வளவு சீக்கிரம் ? இப்போது தெரியும் ஜாதி அடிப்படையில், முஸ்லீம்களின் காலை தழுவும் அகிலேஷ்கு வோட்டை போட்ட அறிவாளி ஹிந்துக்களுக்கு


தத்வமசி
ஜூன் 05, 2024 22:48

உத்திர பிரதேசத்தின் டைம் லைன் பத்து வருடங்களுக்கு முன் நடத்தபடி / இருந்தபடி திருப்பி விடப்படும். கட்டபஞ்சாயத்து, ஆள் கடத்தல், இத்யாதி இத்யாதி.... இனி ஸ்டார்ட்.....


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை