உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்கிரசாருக்கு தோல்வி பயம் எதிர்க்கட்சி தலைவர் தாக்கு

காங்கிரசாருக்கு தோல்வி பயம் எதிர்க்கட்சி தலைவர் தாக்கு

கலபுரகி: ''பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டவர்கள் மீது, காங்கிரஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே காங்கிரசில் போட்டியிட, யாரும் தயாராக இல்லை,'' என, எதிர்க்கட்சித் தலைவர் அசோக் தெரிவித்தார்.கலபுரகியில் நேற்று அவர் கூறியதாவது:காங்கிரஸ் சார்பில் போட்டியிட, எந்த தலைவர்களும் தயாராக இல்லை. யுத்தம் நடப்பதற்கு முன்பே, தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே, நாட்டை காப்பாற்ற முடியும்.மாநில மக்களுக்கு ஒரு பிடி அரிசி கூட முதல்வர் சித்தராமையா கொடுக்கவில்லை. இதைக் கொடுத்தது பிரதமர் மோடி. மக்களுக்கு அன்னமிடுவதற்காக, சித்தராமையா வரவில்லை; கன்னம் வைப்பதற்காக வந்துள்ளார்.சித்தராமையா முதல்வரானதும், வறட்சி பிடித்துள்ளது. எடியூரப்பா முதல்வராக இருந்தபோது, நல்ல மழை பெய்தது. சித்தராமையாவுக்கு மனசாட்சி இருந்தால், வளர்ச்சிப் பணிகளுக்கு ஒரு ரூபாய் கொடுத்துள்ளேன் என கூறட்டும்.விதான்சவுதாவில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டவர்கள் மீது, காங்கிரஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தோல்வி பயத்தால், காங்கிரசில் போட்டியிட யாரும் தயாராக இல்லை.இவ்வாறு அவர்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை