உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்களூரில் 1ம் வகுப்புக்கு ரூ.7.35 லட்சம் கட்டணம்

பெங்களூரில் 1ம் வகுப்புக்கு ரூ.7.35 லட்சம் கட்டணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: பெங்களூரில் உள்ள சர்வதேச பள்ளியில், ஒன்றாம் வகுப்பு மாணவருக்கு ஆண்டு கல்வி கட்டணமாக, 7.35 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச பள்ளி கர்நாடக மாநிலம், பெங்களூரில் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரியும் வாலிபர், 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் ஹர்திக் பாண்டியா எனும் பெயரில், அடிக்கடி கருத்துகள் பதிவிடுவது வழக்கம்.

சமீபத்தில் இவர் வெளியிட்ட பதிவு:

பெங்களூரில் உள்ள, 'நீவ் அகாடமி' எனும் சர்வதேச பள்ளியில், ஒன்றாம் வகுப்பு மாணவருக்கு ஆண்டு கல்வி கட்டணமாக, 7.35 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்த தொகையை, இரண்டு தவணையாக வசூலிக்கின்றனர். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் ஆண்டுக்கு, 7.35 லட்சம் ரூபாய், பிளஸ் 2 மாணவருக்கு, 11 லட்சம் ரூபாய் கட்டணம் என குறிப்பிடப்பட்டு உள்ளது. பள்ளியில் சேர்வதற்கான விண்ணப்பம், 1,000 ரூபாயும், அட்மிஷனுக்கு, 1 லட்சம் ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில், முக்கியமான விஷயம் என்னவென்றால், எக்காரணம் கொண்டும் அட்மிஷன் தொகை திருப்பி தரப்படாது என்பதே. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். பெருமை பள்ளி நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்ட கல்வி கட்டணம் குறித்த அட்டவணை படத்தையும் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் பரவி வருகிறது. இதை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். சிலர், 'தங்கள் பிள்ளைகளை அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளில், படிக்க வைப்பதே பெருமை என நினைக்கும் பெற்றோரால் வந்த வினை தான் இது' என, கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

இளந்திரயன், வேலந்தாவளம்
செப் 01, 2025 17:21

ஊட்டியில் உள்ள பள்ளிகளில் 12லட்சம் வரை பல வருடங்களாக வசூல் செய்வது தெரியாதோ?


nisar ahmad
செப் 01, 2025 12:31

இது பெரிய விசயமல்ல.


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 01, 2025 09:36

பெங்களூர் ஜடி நிறுவனத்தில் பணி புரியும் பலரும் இலட்சங்களில் மாத சம்பளம் வாங்குகிறார்கள். வருடம் நாற்பது இலட்சம் ஐம்பது இலட்சம் சம்பளம் வாங்குபவர்கள் இது போன்று பள்ளிகளில் படிக்க வைப்பார்கள். அரசுகள் நினைத்தால் இது போன்று அல்ட்ரா மாடர்ன் ஆக பள்ளிகளை மாற்றி நடுத்தர ஏழை குழந்தைகள் படிக்க வைக்கலாம். ஆனால் அதற்கு மிக முக்கியம் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் தங்களையும் அதற்கு தகுந்தாற்போல் மாற்றி கொள்ள வேண்டும். முக்கியமாக பொறாமை எண்ணத்தை அனைத்து ஆசிரியர்களும் பணியாளர்கள் பள்ளி கல்வி சம்பந்தமான அதிகாரிகள் அனைவரும் முற்றிலும் கை விட வேண்டும்.


V RAMASWAMY
செப் 01, 2025 08:45

பள்ளிகளெல்லாம் அரசுப்பள்ளிகளாகத்தான் இருக்கவேண்டும், எல்லா கல்லூரிகளும் அந்தந்த மாநில அரசுக்கல்லூரிகளாகத்தான் இருக்கவேண்டும் என்ற நிலைமை வந்தால் தான் இம்மாதிரி கொள்ளைகள் தடுக்கப்படும்.


Oviya vijay
செப் 01, 2025 07:27

ஓட்டு திருட்டு பப்பு இதை பற்றி பேசுவாரா? அக்கா அடுத்த கூட்ட தொடருக்கு கைப்பை ரெடி


Raj
செப் 01, 2025 05:25

பந்தாவுக்காக துடங்கப்பட்ட பள்ளிக்கூடம் இது.


Mani . V
செப் 01, 2025 05:10

ஏன் இவ்வளவு செலவு செய்து படிக்க வைக்க வேண்டும்? தமிழ்நாட்டில் மாதிரி குடிக்குப் பழகிக் விட்டால் படிப்புச் செலவு மிச்சம்தானே?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை