உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / செராடு வனதுர்க்கை கோவிலில் உற்சவம்

செராடு வனதுர்க்கை கோவிலில் உற்சவம்

பாலக்காடு ; பாலக்காடு, மலம்புழா அருகே உள்ள, செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவம், இன்று முதல் 23ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மலம்புழா அருகே உள்ளது செராடு வனதுர்க்கை அம்மன் கோவில். இங்கு எல்லா ஆண்டும் மாசி மாதம் உற்சவம் நடக்கிறது. நடப்பாண்டு உற்சவம், இன்று முதல் 23ம் தேதி வரை நடைபெற உள்ளது.இன்று மாலை, 6:30 மணிக்கு பக்தி சொற்பொழிவு, இரவு 8:00 மணிக்கு கேரளா பாரம்பரிய நடனமான ஓட்டன் துள்ளல் ஆகியவை நடக்கிறது. 21ம் தேதி காலை சிறப்பு பூஜைகளுக்கு பின், காலை, 7:30 மணிக்கு உற்சவத்தையொட்டி கொடியேற்றம் நடக்கிறது. அதன்பின், அம்மனுக்கு பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபடுதல், கலச பூஜை, பொங்கல் பூஜை, காழ்ச்சீவேவி ஆகியவை நடக்கிறது. 22ம் தேதி காலை பல்வேறு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.உற்சவ நாளான, 23ம் தேதி காலை 9:00 மணிக்கு செண்டை மேளம் முழங்க யானை அணிவகுப்புடன் காழ்ச்சீவேலி நடக்கும். மதியம், 12:00 மணிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். மாலை 5:00 மணிக்கு செண்டைமேளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க, யானை மீது அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வைபவம் நடக்கிறது. இரவு நடக்கும் காழ்ச்சீவேவியோடு உற்சவம் நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி