உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அவங்க பிரேக் இல்லாத வண்டி; பிரதமர் மோடி கிண்டல்

அவங்க பிரேக் இல்லாத வண்டி; பிரதமர் மோடி கிண்டல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: 'மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிகள் பிரேக் இல்லாத வாகனம். அங்குள்ள அனைவரும் டிரைவர் இருக்கையில் அமர போராடுகிறார்கள்' என பிரதமர் மோடி கடுமையாக சாடியுள்ளார்.மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக, வரும் நவ.,20ம் தேதி நடக்கிறது. துலே மாவட்டத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: காங்கிரஸ் ஆட்சியில் மராத்தி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கவில்லை. சட்டசபை தேர்தலில் பா.ஜ., தலைமையிலான கூட்டணி கட்சிக்கு மக்கள் ஓட்டளிப்பார்கள். மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிகள் சக்கரங்கள் மற்றும் பிரேக் இல்லாத வாகனம். அங்குள்ள அனைவரும் டிரைவர் இருக்கையில் அமர போராடுகிறார்கள்.

நல்லாட்சி

மஹாராஷ்டிரா மாநில வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. எங்கள் கூட்டணி ஆட்சி மாநிலத்தில் வளர்ச்சியை உறுதி செய்யும். நாங்கள் மக்களை கடவுளின் இன்னொரு வடிவமாக கருதுகிறோம். ஆனால் சிலர் மக்களிடம் இருந்து கொள்ளையடிப்பதற்காக அரசியலில் உள்ளனர். மஹாராஷ்டிரா மக்கள் எனக்கு முழு மனதுடன் ஆதரவு தருகிறார்கள். மஹாராஷ்டிராவில் பா.ஜ., தலைமையிலான கூட்டணி ஆட்சியில் மட்டுமே நல்லாட்சி வழங்க முடியும்.

அதிகாரம்

தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் முன்னேறும் போது காங்கிரசால் பொறுத்து கொள்ள முடியாது. ஒவ்வொரு பெண்ணும் விழிப்புடன் இருக்க வேண்டும். பெண்கள் அதிகாரம் பெறுவதை காங்கிரஸ் கூட்டணி ஆட்சிகள் விரும்புவதில்லை. காங்கிரஸ் இப்போது பழங்குடியினர் மற்றும் பிற சமூகத்தை சேர்ந்தவர்களை ஒருவரையொருவர் மோத வைக்க முயற்சி செய்கிறார்கள். இது மிகப்பெரிய சதி. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

அரசு
நவ 09, 2024 11:49

மற்ற கட்சிகளை உடைத்து கூட்டணி ஆட்சி நடத்திக் கொண்டு இருக்கும் நீங்கள் இவ்வாறு சொல்வது வேடிக்கை.


Dharma
நவ 08, 2024 17:22

பிரேக் மட்டுமா? டயரே இல்ல .


Mario
நவ 08, 2024 16:58

இதெல்லாம் சரி, மணிப்பூர் எப்ப போறீங்க


Nagendran,Erode
நவ 08, 2024 17:37

திராவிட விடியல் முதல்வர் வேங்கைவயலுக்கு போன பின்னாடி...


hari
நவ 08, 2024 18:06

உனக்கு 200 டாலர் முட்டு காசு வரும்போது


என்றும் இந்தியன்
நவ 08, 2024 16:32

இதன் ஆக்கபூர்வமான அர்த்தம் இது தான் "மனதில் என்ன வேண்டுமானலும் நினைக்கலாம் ஆனால் வார்த்தையாக வாயிலிருந்து ஓசையாக வரும்போது அல்லது எழுத்தில் வரும் போது அது அறிவு சார்ந்த சொல்லாக / எழுத்தாக இல்லாத பட்சத்தில்" பிரேக் இல்லாத வண்டி என்று சொல்லப்படுகின்றது. இதற்கு முழு முதல் உதாரணம் இங்கு கருத்து என்ற பெயரில் முட்டு கொடுக்கும் ரூ 200 உபிஸ், ராகுல் காந்தி, ஸ்டாலின், மறைநிதி, மாசு, ஷேக் பாபர்....முஸ்லீம் நேரு காங்கிரஸ் , திராவிட அறிவிலி மடியல் அரசியல் வியாதிகள்..............


jaya
நவ 08, 2024 14:47

என்ஜின் இல்லமே எப்படி வண்டி ஓடுது ?


ஆராவமுதன்,சின்னசேலம்
நவ 08, 2024 15:24

மேலும் கீழும் உள்ள இந்த இரண்டு அறிவாலய திமுக அடிமைகளுக்கும் உள்ள IQ எவ்வளவு இருக்கும் என்று வாசகர்கள் கணித்துக் கொள்ளலாம்.


Sampath Kumar
நவ 08, 2024 14:32

அவர்களாவது பிரேக்கு இல்லை உங்க வண்டிக்கு என்ஜின் நே இல்லை


hari
நவ 08, 2024 16:09

ஏய்... சம்பத் சாமியோவ் சோக் சொள்ளிட்டரமா....... எல்லாரும் சிரிங்கப்ப


Kumar Kumzi
நவ 08, 2024 16:21

உன்னை போன்ற ஓசிகோட்டர் கொத்தடிமைக்கு அறிவே இருக்காதே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை