உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 7- வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதி அமைச்சர்: சாதனை படைக்கிறார் நிர்மலா

7- வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதி அமைச்சர்: சாதனை படைக்கிறார் நிர்மலா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : வரும் 23-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில் 7 வது முறையாக தாக்கல் செய்யும் நிதியமைச்சர் என்ற சாதனைக்கு உரித்தாகிறார் நிர்மலா சீதாராமன்.1959-ம் ஆண்டு முதல் 1964 வரையில் நாட்டின் நிதி அமைச்சராக இருந்த மொரார்ஜி தேசாய் தொடர்ந்து ஆறு பட்ஜெட்களை தாக்கல் செய்துள்ளார். இதில் ஐந்து முழு பட்ஜெட்டும், ஒன்று இடைக்கால பட்ஜெட்டும் அடங்கும்.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலமாக ஆட்சி அமைத்த பா.ஜ., சார்பில் நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமன் 7 வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். இதனையடுத்து முந்தைய தேசாய் சாதனையை முறியடித்து தொடர்ந்து 7 முறை பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர் என்ற புதிய சாதனையை அவர் படைக்க உள்ளார்.மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பிப்1-ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அதன் பிறகு ஜூலை மாதம் புதிய அரசாங்கத்தால் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும். அதன் அடிப்படையில் வரும் 22-ம் தேதி பார்லி., மழைக்காலகூட்டத்தொடர் துவங்குகிறது. 23 ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

राज्ञा
ஜூலை 22, 2024 11:23

என்ன பிரயோஜனம் பணம் படைத்தவர்களை தவிர மற்றவர்களுக்கு வாழ வழி இல்லை. இந்த அம்மா இன்னும் வரி போடாத ஐட்டம் தெருவில் விற்கும் துடைப்பம் ஐஸ் வண்டிக்காரன் கோலமாவு இட்லி மாவு சைக்கிள் பால்காரர் கீரை விற்பவன் சோடா விற்பவன் பூ விற்பவர்கள் லோக்கல் ட்ரைன்களில் வரும் சமோசா விற்பவர்கள் சாராயக்கடை வாசலில் விற்கும் பஜ்ஜி பிரியாணி இத்யாதி.


வரி செலுத்துபவன்
ஜூலை 22, 2024 12:36

வரி இல்லாத நாட்டுக்கு சீக்கிரம் இடம் பெயரவும்


kulandai kannan
ஜூலை 22, 2024 07:33

நம்மூர் சந்துருக்களுக்கு வயிறு எரியும்.


N Sasikumar Yadhav
ஜூலை 22, 2024 07:30

இங்கே மத்திய நிதியமைச்சரை திட்டி பதிவிட்டவர்களுக்கு திராவிட களவானிங்க மாதிரி இலவசங்கள் அறிவித்தால் அடங்கிவிடுவர் அந்தளவுக்கு திருட்டு திராவிடம் இவர்களின் மூளையை மழுங்கடித்து விட்டிருக்கிறது. தமிழக நிதியமைச்சர் மட்டும் என்னவோ அவரே தயாரித்ததை போல பேசுகிறார்கள். இங்க மேடையில் பேசக்கூட அடுத்தவர் எழுதி கொடுத்தும் தப்புதப்பாக பேசுகிறார்கள்


Kalyanaraman Andhukuru.R.
ஜூலை 22, 2024 07:16

தமிழக வீரப்பெண்மணியின் வீர சாதனை யாத்திரை..வெற்றியுடன் தொடர இறைவனை ப்ரார்த்தித்து நல்வாழ்த்துக்கள்.


Venkatasubramanian Iyer
ஜூலை 21, 2024 23:13

அவர்கள் தன் கடமையை நன்றாக திறமையாக செய்கிறார்கள். நிர்மலா அவர்களே நல் வாழ்த்துக்கள்.


இவன்
ஜூலை 22, 2024 05:02

அதான் கொத்தடிமை ஒருத்தன் பட்ஜெட் போட்டானே ?? யாரு நிதி அமைச்சர் னு தெரியாம ஒரு ஆட்சி. Ias எழுதி கொடுக்குறாங்க அத வாசிக்கிறங்கலம் உபிஸ் னு நெனச்சிட்டாங்க


தேச நேசன்
ஜூலை 21, 2024 23:08

வாழ்த்துக்கள் அம்மா, உங்களால் நமது நாடு 5 வது பெரிய பொருளாதார நாடாக, நம்மை அடிமை படுத்தி வைத்திருந்த பிரிட்டிஷ் நாட்டை பின்னுக்கு தள்ளி உயர்ந்தது. உங்கள் முயற்சியால் நாம் அடுத்து 4 வந்து பெரிய பொருளாதார நாடாக மாறுவோம். சுதந்திரம் வேண்டாம் என்று கூறியவர்களுக்கு இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை.


Anantharaman Srinivasan
ஜூலை 21, 2024 23:02

IAS அதிகாரிகள் Prepare செய்து கொடுத்த பட்ஜெட் டை ஏழாவது முறையாக படித்து காட்டப்போகிறார். அதில் பெருமைபட என்னயிருக்கு? நிதி நிர்வாகம் பற்றி ஒன்றும் தெரியாதவரென்று பாஜக தலைவர் சுப்ரமணியசாமி சொல்லியுள்ளது உண்மை.


முருகன்
ஜூலை 21, 2024 22:40

மக்களை தேர்தலில் சந்திக்க முடியாத ஒருவர் எப்படி மக்களை பற்றி சிந்திப்பர்


Vijayakumar Srinivasan
ஜூலை 22, 2024 05:05

இதற்கு முன் மக்களை சந்திக்காமல் பிரதமர் மற்றும் நிதி அமைச்சர்கள் ஆக பலர் பணி புரிந்துள்ளனர். இவரும் பொருளாதாரம் தொடர்பாக படித்தவர்தான்.


N Sasikumar Yadhav
ஜூலை 22, 2024 07:25

நீங்க எப்படி ஓட்டு போடுறீங்கனு உண்மையை சொல்லுங்க ஓசியும் இலவசமும் வாங்கிக் கொண்டு விஞ்ஞானரீதியான ஊழல்வாதிகளுக்கு ஓட்டுப்போட்டு ஆட்சியில் அமர்த்தி இப்போது ஏறக்குறைய 9 லட்சம் கோடி ரூபாயில் தமிழகத்தை கடன்கார மாநிலமாக நிறுத்தியிருக்கிறீர்கள்


jeyamurugan.P
ஜூலை 22, 2024 08:07

Prime minister Mr Manmohansingh?


ديفيد رافائيل
ஜூலை 21, 2024 22:16

எவனோ ஒருத்தன் prepare பண்ணி கொடுக்குறான் ஆளுங்கட்சி தேவைக்கேற்ப. Just ? பண்றது மட்டும் தான் பொழப்பு. அதுக்கு இப்படியா?,


ஆரூர் ரங்
ஜூலை 21, 2024 22:03

பட்ஜெட் என்பது வரவு செலவு கணக்கு மட்டுமே. பட்ஜெட்டால் மட்டுமே நாடு முன்னேற அல்லது பின்னேறிவிடாது. பட்ஜெட் என்பது கூட்டு முயற்சி. பெண் என்பதால் நிர்மலா ஜி அதிகமாக அளவுக்கு மீறி கண்டிக்கப்படுகிறாரோ என்னவோ.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி