உ.பி.,யில் காஸ் சிலிண்டர் ஏற்றி சென்ற லாரியில் தீ; சிலிண்டர்கள் வெடிப்பதால் அச்சம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
லக்னோ: உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் காஸ் சிலிண்டர் ஏற்றி சென்ற லாரியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டனர்.உத்தரபிரதேசம் மாநிலம், காசியாபாத் மாவட்டத்தின் டில்லி வஜிராபாத் சாலையில் உள்ள போபுரா சவுக்கில் காஸ் சிலிண்டர்கள் ஏற்றி சென்ற லாரியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். விபத்து குறித்து தலைமை தீயணைப்பு அதிகாரி ராகுல் கூறியதாவது: தீயணைப்புத் துறை அதிகாரிகள் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்தில் உள்ளனர். சிலிண்டர் வெடிக்கும் சத்தம் அப்பகுதியில் பல கிலோ மீட்டர்களுக்கு கேட்டது. அருகே உள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.தீ விபத்து நடந்த இடத்தில் வசித்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. உயிரிழப்புகள் ஏதும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.