வாகனத்தின் மீது ஆம்புலன்ஸ் மோதி ஐந்து பேர் உயிரிழப்பு
புதுடில்லி: டில்லி பூர்வாஞ்சல் விரைவு சாலையில், நின்று கொண்டிருந்த வாகனத்தின் மீது ஆம்புலன்ஸ் மோதியதில் ஐந்து பேர் உயிரிழந்தனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், அஜிசுல் ஹக் என்பவர் இறந்து விட்டார். அவரது சடலத்தை காசிப்பூருக்கு எடுத்து செல்ல குடும்பத்தினர் முடிவு செய்தனர். ராஜஸ்தான் பதிவெண் உடைய ஆம்புலன்ஸ் வாகனத்தில் அஜிசுல் ஹக் சடலம் ஏற்றப்பட்டது. சடலத்துடன், அமினுல் ஹக், 40 மற்றும் அவரது சகோதரர் ரூபிக், 50, உறவினர் மக்பூர்கான், 52, அல்வார் மாவட்டத்தை ஆகியோர் பயணத்தனர். ஆம்புலன்ஸின் முன் பகுதியில், அதன் ஓட்டுனர்கள், அல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரியோம் யோகி, 31 மற்றும் தவுசா மாவட்டத்தைச் சேர்ந்த அஜய், 33 ஆகிய இருவர் இருந்தனர். ஜெய்ப்பூரில் இருந்து புறப்பட்ட ஆம்புலன்ஸ் நேற்று அதிகாலை பூர்வாஞ்சல் விரைவு சாலையில் வந்து கொண்டிருந்தது. கெரவான் அருகே காலை 6:30 இதில் ஆம்புலன்ஸில் வந்த ஐந்து பேரும் உயிரிழந்தனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.