உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மீண்டும் உற்பத்தியை துவங்குமா போர்டு நிறுவனம்: நிர்வாகிகளுடன் அமெரிக்காவில் ஸ்டாலின் சந்திப்பு

மீண்டும் உற்பத்தியை துவங்குமா போர்டு நிறுவனம்: நிர்வாகிகளுடன் அமெரிக்காவில் ஸ்டாலின் சந்திப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: 'போர்டு நிறுவனம் மீண்டும் தொழில் தொடங்க அமெரிக்காவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு முதலீட்டாளர்களை சந்தித்து அழைப்பு விடுத்து வருகிறார். பல்வேறு நிறுவனங்கள் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டு வருகின்றன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ok7m58hn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் இன்று (செப்.,11) சமூகவலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், 'போர்டு நிறுவனத்தை கொண்டு வர அமெரிக்காவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. போர்டு உடனான 30 ஆண்டு கால கூட்டணியை மீண்டும் புதுப்பிக்கும் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தோம். அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை பயன் உள்ளதாக அமைந்தது' என குறிப்பிட்டுள்ளார். உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான போர்டு, சென்னை அடுத்த மறைமலை நகரில், 1996ல் தொடங்கப்பட்டது. இங்கிருந்து ஆண்டுக்கு 2.50 லட்சம் கார் இன்ஜின்கள் தயார் செய்யப்பட்டன. 32 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், நஷ்டத்தை கருத்தில் கொண்டு 2 ஆண்டுக்கு முன், இந்தியாவில் தன் கார் உற்பத்தியை போர்டு நிறுவனம் நிறுத்தியது. குஜராத்தில் சனந்த், தமிழகத்தில் சென்னை மறைமலை நகர் என 2 ஆலைகளும் மூடப்பட்டன.குஜராத்தில் செயல்பட்ட போர்டு உற்பத்தி ஆலை, டாடா நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டு விட்டது. ஆனால், சென்னை மறைமலை நகரில் 360 ஏக்கரில் அமைந்துள்ள போர்டு உற்பத்தி ஆலை, இன்னும் அந்த நிறுவனம் வசமே உள்ளது. அங்கு எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்புக்கு போர்டு நிறுவனம் திட்டமிட்டு வருவதாக சில மாதங்களுக்கு முன் தகவல்கள் வெளியாகின.இந்நிலையில் தான், போர்டு நிறுவன அதிகாரிகளுடன், முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவில் பேச்சு நடத்தியுள்ளார். இதற்கு என்ன விதமான பலன் கிடைக்கும் என்பது போகப் போகத்தெரியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

xyzabc
செப் 13, 2024 21:32

Ford went through lots of troubles to be operational in TN. Its the question of time before it ceases to operate. While I appreciate the efforts of CM, the reality of the achievement is less than 50%.


Karthik
செப் 11, 2024 14:15

காகம் அமர்ந்து பனம்பழம் விழுந்த கதைதான் இங்கே அரங்கேறியிருக்கின்றது. Ford நிறுவனம் ஆலையை மீண்டும் தொடுங்குவதற்கு முடிவெடுத்துவிட்டது. இப்போது நமது முதல்வர் பேரம் பேச சென்றுள்ளார் போல.


Karthik
செப் 11, 2024 13:33

Ford Frodஉடன் சேரப்போகுதா?


சமூக நல விரும்பி
செப் 11, 2024 12:11

திமுக அரசு செய்யும் தொழில் அனைத்தும் அவர்கள் குடும்பத்தின் நலனை கருத்தில் கொண்டு தான் ஆரம்பிக்க படும். பொது மக்களுக்கு எந்த விதத்திலும் வருமானம் கிடைக்காது


இசக்கிமுத்து,தூத்துக்குடி
செப் 11, 2024 13:34

ஹலோ மிஸ்டர் Joseph Robinette Biden இந்தியாவுல இருந்து ஏதோ ஒரு மாநில Chief minister ஆம் உங்களோட சேர்ந்து ஒரு நாலஞ்சு Photo எடுத்துக்கலாமான்னு கேக்குறாரு அவர்ட்ட என்ன சொல்றது நீங்க பிசியா இருக்கீங்கன்னு சொல்லி விடவா?


Barakat Ali
செப் 11, 2024 10:48

ஒரு நிறுவனம் உற்பத்தியை நிறுத்த பல்வேறு காரணங்கள் உண்டு ..... போட்டி கம்பெனிகளின் ஆதிக்கம், நுகர்வோர் வெகுவாகக் குறைந்து விடுதல், முதலாளிகளோ அல்லது நிர்வாகமோ லாபத்தை வீணடிப்பது ..... இப்படி பல காரணங்கள் இருக்கலாம் ..... எங்க துக்ளக் மன்னர் வேண்டுகோள் விடுத்தா Ford தொடங்குவாங்கலாமா ???? ஒரு உருட்டை அடுத்த உருட்டு அமுக்கிடுது ....


கூமூட்டை
செப் 11, 2024 10:42

Already company going to start production of electrical வெஹிகிள் இது தான் கூமூட்டை திராவிட மாடல் RSB ஜால்ரா மேள தாளம் ஊசிப்போன சுண்டல் வாழ்க வளமுடன் ஊழல் வாதிதக்காளி


Kumar Kumzi
செப் 11, 2024 10:00

விடியல் ஐயா போர்டு கார் கம்பெனிக்காரனுக்கு துண்டுசீட்ட வாசிச்சு காட்டி அசைத்துனியா


முக்கிய வீடியோ