உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முன்னாள் டி.ஜி.பி., வீட்டில் கொள்ளையர் கைவரிசை

முன்னாள் டி.ஜி.பி., வீட்டில் கொள்ளையர் கைவரிசை

நொய்டா:உத்தரப் பிரதேச முன்னாள் டி.ஜி.பி., வீட்டில் கொள்ளையர் நகைகளை அபகரித்துச் சென்றனர்.உ.பி., மாநில டி.ஜி.பி.,யாக பதவி வகித்தவர் விபுதி நரேன் ராய். பணி ஓய்வுக்குப் பின், புதுடில்லி அருகே நொய்டா 128வது செக்டார் கலிப்சோ கோர்ட் குடியிருப்பில் வசிக்கிறார்.சிங்கப்பூரில் உள்ள மகன் வீட்டுக்கு டிசம்பர் 7ம் தேதி சென்றார். அவரது வீட்டு வேலைக்காரரும் அதே நாளில் தன் சொந்த ஊருக்கு சென்று விட்டார். நேற்று முன் தினம் ராய் டில்லி திரும்பினார். ஒரு நாள் முன்னதாக 28ம் தேதி வந்த வேலைக்காரர் சந்தோஷ், கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வந்து ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.படுக்கை அறையில் இருந்த லாக்கரை திருடு போயிருந்தது. அந்த லாக்கரில் மருமகளின் நகைகள் இருந்தன என ராய் கூறினார்.இதுகுறித்து, நொய்டா 126வது செக்டார் போலீசார் வழக்குப் பதிவு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை