உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடகா முன்னாள் அமைச்சருக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை

கர்நாடகா முன்னாள் அமைச்சருக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை

ஹைதராபாத்: சட்டவிரோத சுரங்க வழக்கில், கர்நாடகா முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ.,வுமான, பா.ஜ.,வைச் சேர்ந்த ஜனார்த்தன ரெட்டி மற்றும் மூன்று பேருக்கு ஹைதராபாத் சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம், ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.கர்நாடகா பா.ஜ.,வில் செல்வாக்கு பெற்றவராக வலம் வந்தவர் ஜனார்த்தன ரெட்டி. இவரும், இவரது சகோதரர் கருணாகர ரெட்டியும் சுரங்கத் தொழிலில் கொடிகட்டி பறந்தனர்.

குற்றப்பத்திரிகை

பா.ஜ., மூத்த தலைவர் எடியூரப்பா முதல்வராக பதவி வகித்தபோது, சுற்றுலா துறை அமைச்சராக இருந்தவர் ஜனார்த்தன ரெட்டி.கர்நாடகா - ஆந்திரா எல்லையில் உள்ள கர்நாடகாவின் பெல்லாரி பகுதியில், இரும்புத்தாது எடுக்க சட்ட விரோதமாக சுரங்கம் தோண்டிய வழக்கில், ஆதாரங்களை மறைத்ததாக, ஜனார்த்தன ரெட்டி மற்றும் பிறர் மீது, 14 ஆண்டுகளுக்கு முன், ஹைதராபாதில், சி.பி.ஐ., சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. கடந்த 2007 - 2009 வரை நடந்த சட்டவிரோத சுரங்கத்தால், அரசுக்கு, 884 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.இந்த வழக்கில் சி.பி.ஐ., சிறப்பு முதன்மை நீதிபதி டி.ரகுராம் நேற்று அளித்த தீர்ப்பு: கர்நாடகா முன்னாள் அமைச்சரும், தற்போதைய, கங்காவதி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.,வுமான, பா.ஜ.,வைச் சேர்ந்த ஜனார்த்தன ரெட்டி, அவரது மைத்துனர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி, முந்தைய சுரங்கத்துறை துணை இயக்குநர் வி.டி.ராஜகோபால்.ஜனார்த்தன ரெட்டியின் தனிச்செயலர் மெகபுஸ் அலிகான் உள்ளிட்ட நான்கு பேருக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.

சிறையில் அடைப்பு

அதேநேரம், முன்னாள் அதிகாரி பி.கிருபானந்தம் மற்றும் முன்னாள் அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டி ஆகியோர் வழக்கிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர். இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து, ஜனார்த்த ரெட்டி உள்ளிட்ட நான்கு பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த தீர்ப்பால் ஜனார்த்தன ரெட்டியின் எம்.எல்.ஏ., பதவி பறிபோகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

venugopal s
மே 07, 2025 09:37

இதன் மூலம் மற்ற கட்சிகளின் ஊழல் பற்றி பேசுவதற்கான தகுதியை பாஜகவினர் இழந்து விட்டனர்!


ஆரூர் ரங்
மே 07, 2025 10:38

பொன்முடி தண்டிக்கப்பட்டது அதற்குள் மறந்து விட்டதா? செம்மண் கடத்தல் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.


V Venkatachalam
மே 07, 2025 11:35

பாஜாகாவினர் சுப்ரீம் கோர்ட்டில் போய் எனக்கு கூன் விழுந்து விட்டது. என்னால் நடக்க முடியாது ன்னு சொல்லி சலுகை தீர்ப்பு வாங்கிட்டு வந்து மந்திரியா பதவியில் உட்கார்ந்து கொண்டு ஆட்டம் போடுகிறார்களா? தான் விஷயம்னா வாய அரால்டைட் பசை போட்டு ஒட்டிப்போம்.


நிக்கோல்தாம்சன்
மே 07, 2025 08:55

இவருக்கு உதவிய ராஜசேகர ரெட்டி கதை ?


Padmasridharan
மே 07, 2025 08:55

முன்னாள் அதிகாரிகள் செய்யும் ஊழல் வெளியில் வரவேண்டுமென்றால் இந்த நாட்டிலும் புது கட்சி விஜயம் செய்யவேண்டும். வருக வருக வரவேற்கிறோம்


தத்வமசி
மே 07, 2025 08:41

இதே திராவிட கட்சியாக இருந்தால் வழக்கு இன்னும் பத்து பதினைந்து ஆண்டுகள் நீடிக்கலாம். தீர்ப்பு கொடுத்தாலும் தண்டனையை அனுபவிக்காமல் அமைச்சராக அரசாளலாம். இவருக்கு கொடுத்து வைக்கவில்லை. பிஜேபியில் இருக்கிறார்.


அப்பாவி
மே 07, 2025 07:53

பா.ஜ ஆளுங்க சொக்கத் தங்கம் ஹை.


V Venkatachalam
மே 07, 2025 09:18

திருட்டு தீயமுக முந்திரிங்க ரொம்ப ரொம்ப சொக்க தங்கம் ஹை.. ஈயத்த பாத்து இளித்ததாம் பித்தளை ஹை.. நமக்கு இன்றைக்கு ரூ 200 உண்டு ஹை ஹை ஹை.


பல்லவி
மே 07, 2025 07:26

ஆளைப்பார்த்தால இநதப்பூனையும் பால் குடிக்குமா என்றே தோன்றுகிறது


Kasimani Baskaran
மே 07, 2025 04:03

சிறப்பு. பிறர் என்று குறிப்பிடுவது யார் என்று போட்டு இருக்கலாம். காங்கிரஸ் மீடியா போல செய்து போடுவது மகா மோசம். தமிழகம் என்றால் மண்ணள்ளியவர்களின் தண்டனையை வயதைக்காட்டி சட்டத்துக்கு புறம்பாக பஞ்சாயத்தார் நிறுத்தி வைப்பார். இதெயெல்லாம் ஒரு வகை அரசியல் தாக்குதல் போல ஆகிவிட்டது. செய்தி போடுபவர்கள், நீதித்துறை, காவல்துறை போன்றவைகளுக்கு தேவையானதை போட்டால் என்ன செய்தாலும் தப்பிக்கலாம் என்பது இந்த பாஜகவினர்களுக்கு தெரியவில்லை போலும்.


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
மே 07, 2025 02:52

பா ஜ க ஆளுக்கே 7 ஆண்டுகள் சிறை என்றால் திராவிட ஊழல் தலைவர்கள் வாழ் நாள் பூரா கம்பி எண்ண வேண்டும் போல இருக்கே . இங்கேயும் ஒரு நாள் நடக்கும்.


தாமரை மலர்கிறது
மே 07, 2025 02:26

மிக தவறான தீர்ப்பு. கர்நாடகாவை மைனிங் மாநிலமாக மாற்றியபெருமை இவருக்கு உண்டு. பலகோடி மக்கள் இவரால் பலன் பெறுகிறார்கள். மிகுந்த தேசப்பற்றாளர். திறமையாக சம்பாரிக்கிறார் என்ற வயித்தெரிச்சலில் சிலர் செய்த அக்கப்போர் விளைவால், இவருக்கு தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் சுப்ரிம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்து, விரைவில் விடுவிக்க படுவார். நீதி காக்கப்படும்.


சமீபத்திய செய்தி