உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முன்னாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் மருத்துவமனையில் அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புனே: முன்னாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுக்கு திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நம் நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் பிரதிபா பாட்டீல், 89. இவர் கடந்த 2007 முதல் 2012 வரை இந்த பதவியை வகித்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவருக்கு திடீரென உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதை தொடர்ந்து, மஹாராஷ்டிராவின் புனே நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறியதாவது:காய்ச்சல் மற்றும் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல் நிலை தற்போது சீராக உள்ளது. தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.இவ்வாறு அது கூறியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Bhakt
மார் 16, 2024 01:41

Will face twice the shame meted out to PVNR. Bharat Mata Ki Jai.


aaruthirumalai
மார் 15, 2024 19:47

கருத்து தெரிவித்த ஒருவர்கூட அனுதாபம் தெரிவிக்கவில்லை. ஒரு மனிதர் எப்படி இருக்க கூடாது என்பதற்கு இவர் ஒரு உதாரணம்.


g.s,rajan
மார் 15, 2024 11:14

ஒரு ஜனாதிபதி எப்படி எல்லாம் இருக்கக்கூடாது என்கிற ஒரு உதாரணத்துக்குத்தான், சும்மா இருக்கட்டுமே....


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 15, 2024 09:58

சுரண்டல் திலகம்.... மாஜி ஜனாதிபதி... காங்கிரசும் திமுகவும் சேர்ந்து கொடுத்த நல்முத்து.....


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 15, 2024 11:57

சகோதரர் (தம்பி) செய்த கொலையில் அவரைக் காப்பாற்றியவரும் கூட .....


g.s,rajan
மார் 15, 2024 07:56

எப்படியாவது இவரைக் காப்பாத்துங்க ....


ஆரூர் ரங்
மார் 15, 2024 10:36

எதுக்கு?


suresh
மார் 15, 2024 11:05

அவரிடம் சென்று நீங்கள் தான் மீண்டும் ஜனாதிபதி என்று சொன்னால் காப்பற்றி விடலாம். நீங்கள் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகும் சமயம் நீங்கள் எடுத்து சென்ற அணைத்து பொருட்களையும் திருமபி கொடுக்க வேண்டும் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள் யாரும்


Bye Pass
மார் 15, 2024 06:31

ப்ரோடோகால் என்ன சொல்லுது ...


suresh
மார் 15, 2024 11:14

மக்களின் வரிப்பணத்தில் செலவு செய்யுங்கள் என


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை