மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
6 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
12 hour(s) ago
டேராடூன்:உத்தரகண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்த ஒருவர், அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனில் ஒரு புகார் அளித்தார்.அதில் பேஸ்புக் வாயிலாக பங்கு சந்தையில் முதலீடு செய்வதாக கூறி, தன்னிடம் இருந்து 80 லட்சம் ரூபாயை மர்ம கும்பல் மோசடி செய்ததாக தெரிவித்திருந்தார்.இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கடந்த 20ம் தேதி முடாசிர் மிர்சா என்ற முக்கிய குற்றவாளியை டில்லியில் கைது செய்தனர்.அவரிடம் இருந்து 3,000 போலி சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரி கூறியதாவது:போலி சிம்கார்டுகளை பயன்படுத்தி மிர்சா தலைமையிலான கும்பல் பணமோசடியில் ஈடுபட்டுள்ளது. போலி நிறுவனத்தின் பெயரில் அந்த கும்பல் 29,000 ஏர்டெல் சிம்கார்டுகளையும், 16,000 வோடாபோன், ஐடியா சிம்கார்டுகளையும் வினியோகித்துள்ளனர். இணையதளம் வாயிலாக முதலீடு செய்ய விரும்பும் நபர்களிடம் மோசடியில் ஈடுபட, இந்த போலி சிம்கார்டுகள் பயன்படுத்தப்பட் டுள்ளன.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
6 hour(s) ago | 2
12 hour(s) ago