உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 50 ஜோடிகளுக்கு இலவச திருமணம்: முகேஷ் அம்பானி நடத்தி வைத்தார்

50 ஜோடிகளுக்கு இலவச திருமணம்: முகேஷ் அம்பானி நடத்தி வைத்தார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: தனது மகன் திருமணத்திற்கு முன்பாக 50 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை இன்று நடத்தி வைத்தார் தொழிலதிபர் முகேஷ் அம்பானி.பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி, நீட்டா அம்பானி தம்பதியரின் மகன் ஆனந்த அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் வரும் ஜூலை 12-ம் தேதி மும்பையில் ஆடம்பரமாக நடக்க உள்ளது. இதில் தொழிலதிபர்கள், சினிமா, அரசியல், பிரபலங்கள் பங்கேற்கின்றனர். இந்நிலையில் மகன் திருமணத்திற்கு முன்பாக மகாராஷ்டிர மாநிலம் பால்கர் பகுதியை சேர்ந்த 50 ஏழை ஜோடிகளுக்கு ரிலையன்ஸ் கார்ப்பரேட் பூங்காவில் இலவச திருமணத்தை இன்று (02.07.2024) அம்பானி குடும்பத்தினர் நடத்தி வைத்தனர்.திருமணத்தின் போது மணமகன் மற்றும் மணமகளுக்கு சீர்வரிசையாக தங்க மோதிரம், வெள்ளி மெட்டி, மூக்குத்தி மற்றும் வீட்டு உபயோக பொருள்களுடன் ரூ.1.01 லட்சம் மதிப்பிலான காசோலையும் பரிசாக தரப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

mindum vasantham
ஜூலை 02, 2024 22:19

இந்தியாவில் பெரும் பணக்காரர்கள் ஜாதி விட்டு தான் கல்யாணம் செய்கின்றனர் , முருகரும் ஆதிவாசி குடியான வள்ளியை திருமணம் செய்துள்ளார் , தமிழர்களும் ஜாதி விட்டு திருமணம் செய்ய வேண்டும் அதற்காக பெரியார் பாணியில் மனம் போன வாழ்க்கையில் ஈடுபட கூடாது


pandi
ஜூலை 03, 2024 02:05

முருகப் பெருமான் சாதி விட்டு திருமணம் செய்யணும் என்று வள்ளியை மணந்துகொள்ளவில்லை. மனதுக்கு பிடித்தவரை திருமணம் செய்துகொண்டனர். தமிழன் சாதி மாறி மணம் முடிக்கணும், அப்புறம் திருமணத்திற்கு வெளியே தொடர்பு இருக்கணும், இன்னும் எத்தனை கட்டுப்பாடுகள் கண்டுபிடிப்பீர்கள்?


மேலும் செய்திகள்