உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பூதாகரமாகும் ஜார்ஜ் சோரோஸ் விவகாரம்; பார்லிமென்டில் விவாதம் நடத்த மத்திய அரசு முடிவு

பூதாகரமாகும் ஜார்ஜ் சோரோஸ் விவகாரம்; பார்லிமென்டில் விவாதம் நடத்த மத்திய அரசு முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஜார்ஜ் சோரோஸ் விவகாரத்தில் அரசியல் செய்ய மாட்டோம் என்று பார்லிமென்ட் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ தெரிவித்துள்ளார். சோனியா இணைத் தலைவராக உள்ள FDL - AP என்ற தொண்டு நிறுவனத்திற்கு, அமெரிக்க தொழிலதிபரும், பிற நாடுகளின் பிரச்னைகளில் தலையிடுபவராக அறியப்படும் ஜார்ஜ் சோரஸின் தொண்டு நிறுவனம் நிதியுதவி செய்வதாக பா.ஜ., குற்றம்சாட்டியுள்ளது. மேலும், காஷ்மீரை தனி நாடாக கருத வேண்டும் என FDL - AP விருப்பம் தெரிவித்து உள்ளதாகவும் கூறியிருந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=n532gh9t&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த விவகாரம் தற்போது பூதாகரமாகியுள்ள நிலையில், ஜார்ஜ் சோரோஸ் விவகாரம் தொடர்பாக பார்லிமென்டில் விவாதம் நடத்த முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: நாட்டின் முன் உள்ள சில பிரச்னைகளை அரசியல் லென்ஸ் வைத்து பார்க்க முடியாது. ஜார்ஜ் சோரோஸ் மற்றும் அவர் தொடர்புடைய நபர்கள் யார் யார் என்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது காங்கிரஸ் மற்றும் ராகுல் தொடர்புடைய பிரச்னையாக மட்டும் நாங்கள் பார்க்கவில்லை. இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய மாட்டோம். நாட்டுக்கு எதிரான பிரச்னையாக இருக்கும்பட்சத்தில், தீவிரமாக எடுத்துக் கொள்வோம். டிச.,13 மற்றும் 14ம் தேதிகளில் லோக்சபாவிலும், டிச.,16 மற்றும் 17ம் தேதிகளில் ராஜ்ய சபாவிலும் இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்தலாம் என்றும் காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகளிடம் கூறியுள்ளோம். நாட்டுக்கு எதிரான அமைப்புகளுடன் காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு தொடர்பு இருக்கும்பட்சத்தில், இந்த பிரச்னையில் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் கேட்டுக் கொள்கிறேன், எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

SUPERMAN
டிச 09, 2024 21:18

அப்படியே அதானி அமெரிக்கா விவகாரத்தையும் விவாதியிங்கள்.


Sivagiri
டிச 09, 2024 19:47

பார்லிமென்ட் குழு அமைத்து , இது குறித்து சம்மன் அனுப்பி , விஜாரிக்க வேண்டும் . ..


sankaranarayanan
டிச 09, 2024 18:38

பிறகு இவர்களுக்கும் நமது நாடு பிடி வாறண்டு அனுப்புமா நிறைவேற்றி வைக்குமா நல்ல வாதமய்யா இது வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பது முற்றிலும் நிரூபணமாகிவிட்டதே சபாஷ்


J.V. Iyer
டிச 09, 2024 18:23

தேச துரோகிகளை தோலுரித்துக் காட்டுங்கள். அவர்களுக்கு தண்டனை வழங்கப்படவேண்டும். பெரிய பணக்கார, அதிகார குடும்பத்திலிருந்து வந்தாலும் குற்றம் குற்றமே.


Subramanian Srinivasan
டிச 09, 2024 17:29

அப்படியே அதானி அமெரிக்கா விவகாரத்தையும் விவாதியிங்கள்.


Anonymous
டிச 10, 2024 10:08

அமெரிக்காவில் லாபி மூலமாக பணம் கொடுத்து வேலை பார்ப்பது அந்த நாட்டில் ஒரு சட்டபூர்வமான செயல், லாபியிங் செய்ய சட்டபூர்வ கம்பெனிகள் ஏராளமாக உள்ளன, எனவே ஆதானி அமெரிக்கா விவகாரத்தை அந்த நாடும் , ஆதானியும் பார்த்து கொள்ளும், ஆதானியை கைது செய்ய அமெரிக்கா விழைந்தால், அது நேரடியாக இந்தியா அரசின் உதவியை கோர வேண்டும், இந்திய அரசின் உதவியுடன் ஆதானியை அமெரிக்கா கைது செய்யலாம், எனவே இந்த விவகாரத்தில் இந்திய அரசு செய்ய வேண்டியது எதுவும் இல்லை, அமெரிக்கா அரசு , ஆதானி இடையே உள்ள விவகாரத்தை , கையில் எடுத்து பூதாகரமாக செய்தி ஆக்க முயற்சிப்பது ராகுல் மற்றும் காங்கிரஸ் தான், ஆட்டு மந்தை போல நம் நாட்டு மக்களை எப்போதும் திசை திருப்பி , வெட்டியாக அரசியல் செய்வதும் ராகுலும் காங்கிரஸும் தான். அவர்கள் வலையில் விழாமல் உங்களை நீங்கள் காத்து கொள்வது உங்கள் கையில் மட்டுமே உள்ளது.


Krishna
டிச 09, 2024 17:26

ஸோரோசுக்கும் கனடா ஜஸ்டின் டுரூடோவுக்கும் உள்ள தொடர்பை துப்பறிய வேண்டும்


Srinivasan Krishnamoorthi
டிச 09, 2024 15:02

சோர்ஸ் ஒரு பன்னாட்டு எச்சிலை தூக்கி போடுவதற்கு பதில் விவாதம் எதற்கு ?


Dharmavaan
டிச 09, 2024 14:54

தீர்மானம் கொண்டுவந்து தேச விரோத குடும்பத்தை தண்டிக்க வேண்டும்


தமிழ்வேள்
டிச 09, 2024 13:59

பாரத உளவு ஏஜென்சி கள் வெளியே உள்ள துரோகிகளை மட்டுமின்றி உள்ளே இருந்து குழி பறிக்கும் அயோக்கிய குடும்பம் கும்பல் தனிமனிதர்களையும் போட்டு தள்ளி விட வேண்டும்...அவுத்துவிட்ட ஜனநாயகம் இந்த நாட்டின் சாபக்கேடு...


Rajan
டிச 09, 2024 13:59

எப்படியும் வெளிநடப்பு செய்து இதை புதைத்து விடுவார்கள். இப்ப பெரியக்கா வேற.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை