உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சமைக்காத கோழிக்கறி சாப்பிட கொடுத்த பெற்றோர்: 2 வயது குழந்தை உயிரிழப்பு

சமைக்காத கோழிக்கறி சாப்பிட கொடுத்த பெற்றோர்: 2 வயது குழந்தை உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விஜயவாடா: ஆந்திராவில் இரண்டு வயது பெண் குழந்தையின் பெற்றோர், சமைக்காத சிக்கன் துண்டை சாப்பிடக் கொடுத்ததால், பறவைக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.ஆந்திராவில் பல்நாடு மாவட்டத்தில் உள்ள நரசராவ் பேட்டையை சேர்ந்த 2 வயது பெண் குழந்தைக்கு கடந்த பிப்ரவரி 28ம் தேதி, அவரது பெற்றோர் ஒரு சிறிய துண்டு பச்சை சிக்கனை ஊட்டி உள்ளர். குழந்தையின் தந்தை ஒரு தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். அவரது தாயார் ஒரு இல்லத்தரசி.சிக்கன் சாப்பிட்ட சிறிது நேரத்திற்கு பிறகு, குழந்தைக்கு மூச்சுத் திணறல் மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட கடுமையான உடல்நல சிக்கல்கள் ஏற்பட்டன. பெற்றோர் முதலில் சிறுமியை உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்ததால், உயர் சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.மார்ச் 4ம் தேதி பறவைக் காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் குழந்தை, மார்ச் 16ம் தேதி இறந்தார். மருத்துவ பரிசோதனையில் குழந்தை பறவைக் காய்ச்சலால் உயிரிழந்தது தெரியவந்தது. புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் மற்றும் குண்டூரில் உள்ள வைரஸ் ஆராய்ச்சி நிறுவனம் குழந்தைக்கு பறவை காய்ச்சல் இருந்ததை உறுதி செய்தது.அனைத்து மாவட்ட மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் காய்ச்சல் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டது. இது குறித்து சுகாதார அதிகாரிகள் கூறியதாவது: பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம். சமைத்த கோழியை சாப்பிட்ட மற்ற குடும்ப உறுப்பினர்கள் ஆரோக்கியமாக உள்ளனர். குழந்தை சாப்பிட்ட சிக்கன் கடையில் இருந்து, சிக்கன் வாங்கி உண்கொண்ட மற்றவர்களின் ரத்த மாதிரியை சோதனை செய்தோம். யாருக்கும் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார். கோழி மற்றும் முட்டைகளை நன்கு சமைத்த பின்னரே சாப்பிட வேண்டும் என கால்நடை டாக்டர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Sampath Kumar
ஏப் 03, 2025 16:55

வங்கியில் வேலை சேயும் சங்கி போல அதான் இப்படி காய கறிகளில் உள்ள இரசாயன கலவை போக ஐயர் உப்பு கலந்த நீரில் கழுவி பின்னப்பு பயன் படுத்த கிறார் . அனால் உங்க கும்பல் பண்ணி உள்ள சமூக கேடுகளை எந்த தண்ணீரில் கழுவ சொல்கிறாய் கொஞ்சம் சொல்லு பார்க்கலாம்


theruvasagan
ஏப் 03, 2025 17:33

அப்ப ராம்சாமி வகையறா உங்களுக்கு எதுவுமே செய்யலையா. என்னன்னவோ செஞ்சுட்டதா சொல்லிக்கொண்டு திரியாறானுகளே. அங்கே போய் கேக்கமாட்டியா.


வாய்மையே வெல்லும்
ஏப் 03, 2025 19:17

சம்பத்து மத்தியானம் நல்ல சாராய பாட்டில் அடித்துவிட்டு பின்பு உளறுவது போல உள்ளது உங்கள் கூற்று .. உங்கள் எழுத்தே உங்களின் புத்தியை திரையிட்டு காட்டுகிறது .. குல்லாவை மறைக்கவும் .அசட்டு சம்பத்து


Iyer
ஏப் 03, 2025 14:26

காய்கறிகளை நறுக்கும் முன் உப்பு கலந்த தண்ணீரில் 10 நிமிடங்கள் முழுக்கி வையுங்கள். இதனால் ரசாயனங்களின் தீய விளைவு நமக்கு வராது


nathan
ஏப் 03, 2025 13:44

காய்கறிகளில், பழங்களில் அடிக்கப்படும் பூச்சி கொல்லிகளை நினைத்தால் எதனை சாப்பிடுவது என்றே தெரியவில்லை.


Barakat Ali
ஏப் 03, 2025 13:39

2 வயது பெண் குழந்தைக்கு....


Haja Kuthubdeen
ஏப் 03, 2025 12:41

குழந்தையின் பெற்றோருக்கு அறிவு மழுங்கி விட்டதா???


தமிழன்
ஏப் 03, 2025 11:53

இந்த மாதிரி பதருகளை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்??


Tiruchanur
ஏப் 03, 2025 11:37

கோழியை சாகடிச்சீங்க. அது பழி தீர்த்துக்கிச்சு.


Shankar
ஏப் 03, 2025 16:13

நீங்கள் சொல்லுவது ஒன்றுதான் மிகவும் சரி. 20 வருடத்துக்கு முன்பு குவைத் வந்த விசு இப்படித்தான்பேசினார் , முன்பு திண்டுக்கல் அருகில் அரங்கத்தில் அவர் வர மிகவும் தாமதமாதனால் நூற்றுக்கணக்கான காடை,பறவைகளை சமைத்துக்கொண்டு வந்தவனின் உழைப்பு எல்லாம் வீணாகி விட்டதே என்று சீன்போட்டு கையிலிருந்த துண்டால் கண்ணீரை துடைத்தானே தவிர அத்தனை ஜீவன்களும் கழுத்தறுபட்டு கதரி-மாண்டுப்போக தான் கரணம் ஆனோமே என்பதை உணராத பாசாங்குகளை காண பிரியமில்லாது எழுந்து வந்துவிட்டேன்.


CBE CTZN
ஏப் 03, 2025 11:29

மாமிச உணவுகளை நன்கு சமைத்தே உண்ணவேண்டும் .. பகுதி மட்டுமே வேகவைத்த முட்டை, பச்சை முட்டை, கலக்கி இவையெல்லாமே ஆபத்து தான்... விபரீதம் ஏற்படாமல் தவிர்த்து உறவுகளோடு மகிழ்ச்சியாக வாழுங்கள் .. முடிந்தால் மாமிச உணவுகளை குறைத்து சாப்டிடுங்கள் அல்லது தவிர்க்க பழகுங்கள்..


Iyer
ஏப் 03, 2025 12:44

மாமிச உணவு கான்செர், இதயநோய் மற்றும் தோல்நோய்களை உண்டாக்கும் - சமைத்தோ சமைக்காமலோ எப்படி உண்டாலும். ஆகையால் மரக்கறி உணவு மட்டும் உண்பது நோயற்ற நீண்ட வாழ்வு கொடுக்கும்.


Ganapathy
ஏப் 03, 2025 11:27

இது கொலை கேசு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை