உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வயநாடு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார் பிரியங்கா!

வயநாடு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார் பிரியங்கா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: கேரளாவின் வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில், போட்டியிட இன்று (அக்.,23) காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா, பேரணியாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.கேரள மாநிலம், வயநாடு லோக்சபா எம்.பி.,யாக வெற்றி பெற்ற ராகுல், ரேபரேலி எம்.பி., பதவியை தக்க வைத்துக் கொண்டு, வயநாடு எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காலியான அத்தொகுதிக்கு, நவம்பர் 13ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா, இடது ஜனநாயக முன்னணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் சத்யன் மொகேரி, பா..ஜ., சார்பில் அக்கட்சியின் மாநில மகளிர் அணி செயலர் நவ்யா ஹரிதாஸ் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், இன்று(அக்.,23) வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட பேரணியாக சென்று பிரியங்கா வேட்புமனு தாக்கல் செய்தார். கல்பெட்டா பஸ் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை பிரியங்கா பேரணியாக சென்றார். பிரியங்காவுக்கு காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் காங்கிரஸ் எம்.பி., ராகுல், சோனியா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

வாய்ப்பு தாருங்கள்!

இதற்கிடையே, வயநாட்டில் தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா பேசியதாவது: பலமுறை கட்சி நிர்வாகிகளுக்கு தேர்தல் பிரசாரம் செய்துள்ளேன். முதன் முறையாக இப்போது எனக்காக தேர்தல் பிரசாரம் செய்கிறேன். 17 வயதில் எனது தந்தைக்காக ஓட்டு சேகரித்தேன். உங்களுக்கு சேவையாற்ற வாய்ப்பு தாருங்கள். மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டத்தில் ஜாதி மத, பேதமின்றி அனைத்து தரப்பினரும் பங்கேற்றனர். இந்த பேரணியிலும், ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

அகிம்சை

வயநாடு மக்களை பிரிந்து சென்றது ராகுலுக்கு மிகப்பெரிய வருத்தத்தை அளித்தது. வயநாடு நிலச்சரிவின் போது, அங்குள்ள மக்களின் உதவும் பண்பு வியப்பளித்தது. அத்தகைய சமூகத்தின் பிரதிநிதியாக நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் அதுவே எனக்கு பெருமை. மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த வயநாட்டில் மருத்துவக் கல்லூரி துவங்கப்படும். உண்மை, அகிம்சை, நீதிக்காக நாம் இன்று போராடி வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

2வது தாய்

வயநாட்டில் தேர்தல் பிரசாரத்தில் ராகுல் பேசியதாவது: என்னை ஏற்றுக் கொண்டதைப் போல் பிரியங்காவையும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். வயநாட்டிற்கு நான் எப்போது வேண்டுமானாலும் சொந்த வீட்டிற்கு வருவது போல் வருவேன். சகோதரி பிரியங்கா தான் எனக்கு இன்னொரு தாயாக இருக்கிறார்.என் அம்மா இங்கே அமர்ந்திருக்கிறார். என் அப்பா இறந்தபோது, ​​என் அம்மாவைக் கவனித்துக்கொண்டது என் சகோதரி. அப்பா இறக்கும் போது அவளுக்கு 17 வயது. எனது சகோதரி தனது குடும்பத்திற்காக எதையும் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறார் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு ராகுல் பேசினார்.

ஒற்றுமை

காங்கிரஸ் தலைவர் கார்கே பேசியதாவது: இன்று, ஒற்றுமையை நோக்கி முன்னேற நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம். ரேபரேலி சோனியாவின் தொகுதி என்பதால் ராகுல் தக்க வைத்து கொள்ள முடிவு செய்தார். என்ன செய்வது என்று ராகுல் யோசித்துக் கொண்டிருந்தார். இருப்பினும், இறுதியில் வயநாட்டில் பிரியங்காவை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று முடிவு செய்தனர். பிரியங்காவுக்கு இன்று டிக்கெட் கொடுத்துள்ளோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

பேசும் தமிழன்
அக் 24, 2024 07:48

இந்த அம்மா கணவன் பெயர் வரத்ரா... ஆனால் காந்தி என்று போலி பெயரை வைத்து கொண்டு நாட்டு மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கிறார்.... எல்லாம் ஓட்டுக்காக !!!


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 23, 2024 21:41

ஹையோ ...... ஹையோ .... ஹையோ ...... நம்பிட்டோம் ...... உத்தம குடும்பம் ........


M Ramachandran
அக் 23, 2024 20:27

ஏமாந்த சோணகிரியான்ங்கள் ஜல்லராக்கள் பல்லக்கு தூக்கிகள் இருக்க மற்றும் கொள்ளையடித்த பணமும் அயல் நாட்டு பணமும் ஆராகா ஓட போகிறது.


Ramesh Sargam
அக் 23, 2024 20:01

இவ்வளவு நாட்கள் ராகுல் வயநாட்டிற்கு என்ன செய்தார்? இனிவரும் நாட்களில் பிரியங்கா என்ன செய்வார்? எதற்கும் உதவாத அந்த குடும்பத்தினரை ஏன் வயநாட்டு மக்கள் திரும்ப திரும்ப ஆதரிக்கிறார்கள்?


பேசும் தமிழன்
அக் 23, 2024 19:38

ஆஹா.... இத்தாலி போலி காந்தி கும்பல் நாடகம் ஆரம்பம்.... இனி என்னவெல்லாம் மக்கள் காண வேண்டுமோ ???


ram
அக் 23, 2024 18:10

இதன்மூலம் இவர்களுக்கு தொடர்ந்து வோட்டு போடும் மக்களுக்கு ........ இல்லை என்று சொல்லுகிறார் போல


என்றும் இந்தியன்
அக் 23, 2024 17:13

உண்மை, அகிம்சை, நீதிக்காக நாம் இன்று போராடி வருகிறோம் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா வாக்குறுதி அளித்தார். அதை இப்படி படியுங்கள் "உன்னை ஹிம்சை நிதிக்காக" நாம் இன்று போராடி வருகின்றோம் என காங்கிரஸ் பொத்தாம் பொது செயலாளர் பிரியங்கா வாக்குறுதி


ஆரூர் ரங்
அக் 23, 2024 16:35

பாவம் முஸ்லிம் மெஜாரிட்டி வயநாடு. பிரியங்கா எனும் இன்னொரு பார்லிமென்ட் கேண்டீன் பஜ்ஜி போண்டா டோக்கன் எம்பியைத் தேர்ந்தெடுத்து வளமாகப் போகிறதாம். இப்படிப்பட்ட பாவம் செய்தால் நிலச்சரிவை விட மோசமான நிலை ஏற்படும்.


ஆரூர் ரங்
அக் 23, 2024 16:31

மத்தியிலும் ஆட்சியிலில்லை.. மாநிலத்திலும் எதிர்கட்சியான இவர் அரசு மருத்துவக் கல்லூரி அமைப்பாராம். டெக்கான் ஹெரால்டில் சாப்பிட்ட 5000 கோடியிலா?


sundarsvpr
அக் 23, 2024 16:28

காங்கிரஸ் பெரிய தவறு செய்துவிட்டது. பிரியங்காவின் கணவரை ஏன் நினைக்க தவறிவிட்டது. அவரிடம் இல்லாத சொத்தா . மருத்துவ கல்லூரி மட்டும் அல்ல நாடு முழுவதும் மருத்துவமனை கட்ட இயலும். இவ்வளவு செலவையும் மீளசம்பாதிக்க அவரால் முடியும். கேரளா மக்கள் புத்திசாலிகள். பி ஜெ பி யை ஜெயிக்க வைப்பார்கள். இது தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை உண்டாக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை