உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குடும்பத்துடன் கண்டு மகிழ சசி ஹித்லு கடற்கரைக்கு போலாம்

குடும்பத்துடன் கண்டு மகிழ சசி ஹித்லு கடற்கரைக்கு போலாம்

தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரின் வடக்கில் சசி ஹித்லு என்ற கடலோர கிராமம் அமைந்துள்ளது. மங்களூரு நகரில் இருந்து, 22 கி.மீ., தொலைவில் உள்ளது. இங்குள்ள கடற்கரையில் அரபி கடலை ரசிப்பதே, தனி சுகத்தைத் தரும்.மிகவும் சுத்தமான கடற்கரையில் ஒன்றாக திகழ்கிறது. வெள்ளை, நீல வண்ணத்தில் கடற்கரை காட்சியளிக்கும். ஒரு புறம் சாம்பவி மற்றும் நந்தினி நதிகளும், மறுபுரம் கடலையும் ஒரே இடத்தில் பார்ப்பது கண்களுக்கு விருந்தளிப்பதாக அமைந்துள்ளது.கடலில் நதிகள் கலக்கும் பகுதியை சுற்றி பச்சை பசேல் என்று பசுமை நிறைந்த காடுகள், பார்வையாளர்களை கொள்ளை கொள்ள செய்கின்றன. இந்த கடற்கரை பெரும்பாலானோருக்கு தெரியாததால், மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்படும். வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். சில மீனவர்கள் படகுகளை நிறுத்தி வைத்திருப்பதை காணலாம்.கடல் அலைகளின் சத்தம், சில்லென்று வீசும் காற்று புதிய உணர்வை தரும். பஸ் வசதி உள்ளது. தனியார் போக்குவரத்து வசதியும் உள்ளது. ஆனாலும், சொந்த வாகனத்தை பயன்படுத்துவது சால சிறந்தது.இங்கு, நீர் விளையாட்டுகள் அடிக்கடி நடத்தப்படுவது வழக்கம். சில ஆண்டுகளுக்கு முன்பு, மாநில அளவில் நீர் விளையாட்டுகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.கர்நாடக அரசு கூடுதல் கவனம் செலுத்தி, சசி ஹித்லு கடற்கரையை மேம்படுத்தினால், சுற்றுலா துறை வருமானம் பெருகும். அப்பகுதி மக்களின் வாழ்வாதாரமும் பெருகும். சுற்றுலா பயணியரும் மகிழ்ச்சி அடைவர்.கடற்கரை ஓரம் வானுயர்ந்த தென்னை மரங்கள் பார்க்கலாம். குழந்தைகள் மணலில் துள்ளி குதித்து விளையாடலாம். சில நாட்களில் பட்டம் விடும் திருவிழாவும் நடக்கும்.குடும்பத்தினருடன் பொழுது போக்கவும், மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு புத்துணர்ச்சியை பெறலாம் என்று அங்கு சென்று வந்தவர்கள் கூறுகின்றனர்.ஒரு நாள் முழுதும் இங்கேயே காலம் கழிக்கலாம். அருகிலேயே வெவ்வேறு கடற்கரைகள் உள்ளன. நேரம் கிடைத்து அங்கும் செல்லலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை