வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தங்கம் விலை உயர்வு நினைச்சு பார்க்க முடியாத இடத்தில் உள்ளது
சென்னை: சென்னையில் இன்று (ஆகஸ்ட் 27) 22 காரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.75,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 25), 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 9,305 ரூபாய்க்கும், சவரன் 74,440 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று (ஆகஸ்ட் 26) தங்கம் விலை கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து, 9,355 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து, 74,840 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 27) 22 காரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.75,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,390க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.75 ஆயிரத்தை கடந்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தங்கம் விலை உயர்வு நினைச்சு பார்க்க முடியாத இடத்தில் உள்ளது