உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 10 ஆண்டு கால அனுபவம் மூலம் மீண்டும் சிறப்பான ஆட்சி வழங்குவேன் : மோடி உறுதி

10 ஆண்டு கால அனுபவம் மூலம் மீண்டும் சிறப்பான ஆட்சி வழங்குவேன் : மோடி உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 10 ஆண்டு கால ஆட்சி அனுபவத்தின் மூலம் மீண்டும் சிறப்பான ஆட்சி வழங்குவேன் என மோடி தெரிவித்தார்.மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உரிமை கோரி ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து ஆதரவு கடிதம் வழங்கிய மோடி ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு மோடி அளித்த பேட்டி,ஆட்சி அமைக்க எனக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி கூறுகிறேன். 18-வது லோக்சபா புதிதாக துவங்குகிறது. 18வது லோக்சபா புதிய ஆற்றலும், இளம் ஆற்றலும், ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணமும் கொண்ட மக்களவை. மத்தியில் தே.ஜ. கூட்டணி மீண்டும் வலுவான அரசை அமைக்கும். எந்த வேகத்தில் நாடு முன்னேறி கொண்டிருக்கிறதோ, அந்த மாற்றங்கள் நாடு முழுதும் தெரிந்து கொண்டிருக்கிறது.என்.டி.ஏ. கூட்டத்தில்ஒரு மித்த முழு மனதோடு என்னை பார்லிமென்ட் குழு தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்களின் ஆதரவு கடிதத்தை ஜனாதிபதியிடம் வழங்கினேன். அவரும் ஆட்சி அமைக்க அழைத்துள்ளார். பதவி ஏற்பு விழா குறித்து ஜனாதிபதி மாளிகை முறைப்படி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். வருங்காலத்தில் வேகம், உத்வேகத்துடன் மத்திய அரசு செயல்படும்.25 கோடி மக்கள் வறுமையில் இருந்து விடுபட்டுள்ளனர். நிலையான அரசு அமைந்திருந்ததால் இந்தியாவின் வளர்ச்சி மிக வேகமாக இருந்தது அதன் பலன்கள் பல்வேறு மாநிலங்களுக்கும் கிடைத்தன. 2047-ல் இந்தியா 100-வது சுதந்திர தினத்தின் போது மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய தேவை உள்ளது. 10 ஆண்டு கால ஆட்சி அனுபவத்தை கொண்டு மீண்டும் சிறப்பான ஆட்சி வழங்குவேன். இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Sureshkumar
ஜூன் 08, 2024 17:02

நல்லாட்சி புரிய வாழ்த்துக்கள் .


sangarapandi
ஜூன் 08, 2024 09:53

தங்களுக்கு கிடைத்துள்ள இந்த நல்ல வாய்ப்பை நன்றக பயன்படுத்தி ஆட்சி நடத்த வேண்டும் . அதற்கு உங்கள் அரசு உடனடியாக விசயங்களில் கவனம் செலுத்த வேண்டும். முதலில் தற்போது உள்ள வரி விகிதத்தை 10% கீழ் எல்லா பொருட்களுக்கும் விதிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். எல்லா தரப்பு மக்களும் குறைத்த பட்சம் 8 மணி நேரமாவது உழைப்பதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்க வேண்டும். மத விஷயங்களில் பிரச்சனை ஏற்படும் கருத்துக்களை பேசக்கூடாது என தங்களது கட்சி சார்த்தவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இதனை செய்தால் மட்டுமே நீங்கள் தொடர்ந்து ஆட்சி செய்ய முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன் .


சேர்மக்கனிநாடார்,ஆறுமுகநேரி
ஜூன் 08, 2024 06:19

முதலில் உச்சநீதிமன்ற கொலீஜியத்தை கலைத்து புதிய சட்ட நடைமுறையை அமல் படுத்துங்கள. சந்திர சூட்டை பதிவியில் இருந்து நீக்குங்கள்.


Easwar Kamal
ஜூன் 07, 2024 22:34

கண்டிப்பாக சிறந்த அரசை கொடுப்பர்கள். அனல் இந்த கோல்டி கூட்டம் கூடவே இருக்குது. எல்லா திருட்டு கபோதிகள். ஒருத்தன் உள்ள வச்சு இப்போதான் வெளியில விட்ருக்கானுவ மற்றொருத்தன் ரெண்டு மூணு பொண்டாட்டி வச்சிருக்கிறவன். இவனுங்க எல்லா ஒரு லிமிட்டோட வச்சுக்கோங்க இல்லாவிட்டால் பேரை கெடுத்துருவானுவ .


Srprd
ஜூன் 07, 2024 21:00

He completely failed to take action against those involved in various scams from 2004-14. The message is never underestimate the strength of your enemy.


சிவம்
ஜூன் 07, 2024 20:00

பிரதமர் மோடிஜி அவர்களே, 10 வருடம் வெறும் trial என்று சொன்னீர்கள். அடுத்த 5 அல்லது 10 வருடங்கள் அடித்து விளையாடுங்கள். வட இந்திய மாநிலங்களில் சிறு சிறு தொய்வு இருந்தாலும், அடுத்த முறை clean sweep உறுதி. தென் மாநிலங்களும் உங்களுக்கு வாக்களிக்க தயாராகி வருவதை பார்க்கிறோம். ஜெய் ஹிந்த்.


spr
ஜூன் 07, 2024 19:33

ஊழலை ஒழிக்க முழு அதிகாரமும் வாய்ப்பும் இருந்த காலத்திலேயே குறைந்த பட்சம் ஊழல் செய்தவர்களை கூட்டணியில் சேர்க்காமலிருந்திருக்கலாம். விசாரணையை விரைவாக முடித்து குற்றவாளிகளைத் தண்டித்திருக்கலாம் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலிருப்பவர் அமைச்சகராக பதவி வகுக்கும் சட்ட ஓட்டைகளை சரி செய்திருக்கலாம் ஆனால் எதுவுமே செய்யாமல் அகந்தையால் தேவையற்ற பேச்சுக்களை பேசியதால் இவருக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் அதிக வேறுபாடில்லை என மக்கள் தீர்மானித்து, இதுவரை செய்த நல்ல சாதனைகளுக்காக இவருக்கு "கண்டிஷனல் பாஸ்" கொடுத்திருக்கிறார்கள் இனி நிதிஷும் பாபுவும் இவருக்கு ஆதரவு தருவதால் ஊழலைப் பற்றி இனி இவர் பேச முடியாது பாபு மற்றும் நிதிஷ் விரும்பிய வகையில் அவர்கள் துணையுடன் குறைந்த பட்சம் தொழித்துறையை வளப்படுத்தி நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைக்க வழி காணலாம். அவர்களை "அனுசரித்து" மன்மோகன் சிங்கைப் போல இருந்தால் மூன்றாம் முறை பிரதமரானவர் என்ற பேருடன் பணி ஒய்வு பெறலாம்


Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 07, 2024 22:28

மோடிஜி அவர்களின் முயற்சிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்துழைக்கவில்லையே, உதாரணமாக உச்ச நீதிமன்றம் சொல்லி பொன்முடியின் வழக்கு மறுபடியும் விசாரித்து தண்டனை வழங்கப்பட்டது ஆனால் அந்த தண்டனையையே அதே உச்சநீதிமன்றம் நிறுத்தி ஊழல் வாதியான பொன்முடி மறுபடியும் அமைச்சர் ஆக உறுதுணை போனது. இது போல பல விஷயங்களின் உச்சநீதிமன்றம் இடையூறு மற்றும் காலதாமதம் செய்தும் தேவையில்லாத எதிர் கருத்துக்களை அரசியல் போல பொதுவெளியில் பேசியும் இடையூறுகளை செய்கிறார்கள்.


Ramesh Sargam
ஜூன் 07, 2024 19:29

அறுபது ஆண்டுகால ஊழல் ஆட்சி கொடுத்த அனுபவத்தின் மூலம் நாங்கள் அந்த சிறப்பான ஆட்சியை அழிப்போம், என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறினாலும் வியப்பில்லை.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ