உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரளாவில் கோர விபத்து; தமிழர்கள் 5 பேர் பரிதாப பலி!

கேரளாவில் கோர விபத்து; தமிழர்கள் 5 பேர் பரிதாப பலி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: திருச்சூரில் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை உள்ளிட்ட தமிழர்கள் மீது லாரி ஏறியதில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.கேரள மாநிலம் திருச்சூர் திரப்பரையார் பகுதியில் சாலையோரம் தமிழர்கள் சிலர் கூடாரம் அமைத்து தூங்கி கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மரக்கட்டைகள் ஏற்றிய லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில், அந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலைதடுப்பில் மோதியது. அதே வேகத்தில் அங்கு சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீதும் ஏறியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ye2td6bx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த விபத்தில் அங்கு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த 4 வயது குழந்தை உள்பட தமிழர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். 11 பேர் பலத்த காயம் அடைந்தனர். விபத்தையடுத்து, அவர்களை மீட்ட அங்குள்ளோர், திருச்சூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று தெரிகிறது. சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது லாரி ஓட்டுநர் அசந்து தூங்கியதால் விபத்து நேரிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, ஓட்டுநர் அலெக்ஸ், அவருடன் இருந்த க்ளீனர் ஜோஸ் இருவரையும் கைது செய்தனர்.தொடர் விசாரணையில், பலியானவர்கள் யார் என்ற விவரம் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு: காளியப்பன்(50), ஜீவன் (4), நாகம்மா(39), பங்காசி(20) மற்றும் 2 வயது குழந்தை. இவர்களில் குழந்தையும் பெயர் விவரம் எதுவும் வெளியாகவில்லை. இந்த விபத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Hari
நவ 27, 2024 00:09

அங்காடிதெரு படத்தில் நடந்த மாதிரி இச்சம்பவம்., மிகவும் வருத்தம் அளிக்கிறது.


Hari
நவ 27, 2024 00:09

அங்காடிதெரு படத்தில் நடந்த மாதிரி இச்சம்பவம்... மிகவும் வருத்தம் அளிக்கிறது.


Hari
நவ 27, 2024 00:07

அங்காடிதெரு படம் ஞாபகம் வருகிறது…


அப்பாவி
நவ 26, 2024 10:45

சாலையோரம் படுக்கை. அல்லாருக்கும் வூடு குடுத்தாச்சா?


Pats, Kongunadu, Bharat, Hindustan
நவ 26, 2024 11:09

கூலி வேலைக்கு வெளியூர் செல்லும் தமிழர்களுக்கு குடும்பத்துடன் தங்குவதற்கு கலைஞர் இலவச தங்குமிடம் திட்டம் உடனடியாக மா - டல் அரசு செய்யுமா?


Mohan
நவ 26, 2024 11:40

ஏன் உங்க டுமிழ்நாட்டுல தான் வேலை கொட்டி கிடக்குதே அவுங்கள ஏன் வேலைக்கு அங்க அனுப்பினாக ..முதல் மாநிலம் எல்லாரும் இங்க தான் வேலைக்கு வாரங்கனு மார்தட்டுறீங்க அப்பறோம் என்ன ....க்கு அங்க போனாங்க .. ஊற பூரா சுரண்டி ஹின்னுட்டு ஏழைகளை காயவிட்டுட்டு உனக்கு வீடு கட்டிக்குடுக்கலேன்னு இளக்காரம் வேற ஏன் ..???


Premanathan Sambandam
நவ 26, 2024 10:07

மனது வலிக்கிறது . ஆத்ம சாந்திக்கு இறைவனை வேண்டுவோம்.


BALACHANDRAN
நவ 26, 2024 08:40

ஆழ்ந்த அனுதாபங்கள். சாலையோரம் படுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இப்படி ஒரு சங்கடம் மனிதனுடைய பிறப்பு எந்த மாதிரியான இறப்பு ஆண்டவனால் மட்டும் கணிக்க முடியும். இருக்கும் போது மனிதநேயத்தோடு கஷ்டங்களையும் உதவிகளையும் பரிமாறி கொள்ள வேண்டும் நாளை விடியும் என்று எதிர்பார்ப்புகள் அவர்களுடைய கனவு இரவோடு முடிந்தது கண்ணீருடன் சமர்ப்பிக்கிறேன்


அப்பாவி
நவ 26, 2024 11:32

ஆண்டவன் கணிச்சு உன்னிடம் சொன்னாரா? தெரியாத விஷயம். இல்லே வேண்டிக்கிட்டா தப்பிக்ஜ முடியுமா?


சமீபத்திய செய்தி