உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துணைவேந்தர் நியமன குழுவில் முதல்வரை நீக்க கவர்னர் வழக்கு

துணைவேந்தர் நியமன குழுவில் முதல்வரை நீக்க கவர்னர் வழக்கு

கேரளாவில், பல்கலை துணைவேந்தர்கள் நியமனத்தில், கேரள முதல்வரின் தலையீடு இருப்பதால் அவரை அக்குழுவில் இருந்து நீக்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் கேரள கவர்னர் ராஜேந்திர அர்லேகர் மனு தாக்கல் செய்துள்ளார். கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநில பல்கலைகளின் துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் கடந்த 18ல் உத்தரவு பிறப்பித்தது. அதில், 'துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான குழுவில் கேரள அரசு மற்றும் பல்கலை வேந்தர் பரிந்துரைக்கும் நபர்கள் இடம் பெறலாம்' என, தெரிவித்து இருந்தது. இந்நிலையில் கேரள கவர்னர் ராஜேந்தர் அர்லேகர் உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த மனு: கேரளா டிஜிட்டல் பல்கலை மற்றும் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைகளுக்கு துணைவேந்தர்களை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகளில் கேரள முதல்வர் தலையிடுகிறார். அவ்வாறு தலையிடுவது பல்கலைக்கழக மானிய குழுவின் நெறிமுறைகளின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது. தனக்கு எதிரான வழக்கை அவரே விசாரித்து தீர்ப்பு வழங்குவது போல, பல்கலை துணைவேந்தர்கள் நியமனத்தில் கேரள முதல்வரின் தலையீடு உள்ளது. துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக கடந்த 18ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். பல்கலை துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அமைச்சரவையின் அறிவுரைகளின் படி கவர்னர் செயல்பட வேண்டியதில்லை. எனவே இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கோரப்பட்டுள்ளது. - டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

ஜெய்ஹிந்த்புரம்
செப் 03, 2025 19:14

கவர்னருக்கு ஜாடா ஒரு குட்டு தீர்க்பாக வரும்


Sridhar
செப் 03, 2025 14:56

ஊழல் செய்யும் ஒவ்வொரு அரசியல்வாதியும் இந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் மருத்துவ கல்லூரிகள் மீது குறி வைக்கிறார்கள். இதற்கான காரணங்களை யாராவது அலசி ஆராய்ந்து ஒரு அறிக்கை வெளியிட்டால், அவர்களின் நோக்கங்கள் பற்றிய தெளிவான புரிதல் மக்களுக்கு கிடைக்கும். பல்கலைக்கழகங்களில் புகுற நினைப்பது அங்குள்ள பதவிகளை விற்று சிலநூறு கோடிகள் ஆட்டை போடுவதற்காக மட்டும்தான் என்று நினைத்தால் அது நம் தவறு. பாடப்புத்தகங்களில் அவர்கள் சித்தாந்த கருத்துக்களை புகுத்துவது, ஆராய்ச்சி விஷயங்களில் அவர்களுக்கு வேண்டிய முடிவுகள் வருமாறு பார்த்துக்கொள்வது போன்றவை அடுத்த தலைமுறையையும் பாதிக்கும் விஷயங்கள். அதேபோல், மருத்துவ கல்லூரிகளில் மனித உடல் பாகங்கள் விற்பனை, பிறக்காத குழந்தைகள் மற்றும் இத்தியாதிகள் மிக பெரிய வியாபாரமாக இருக்கலாம். இவையெல்லாம் மத்திய அரசில் இருக்கும் விசாரணை அமைப்புகளுக்கு தெரியாமலா இருக்கும்? இதுபோன்ற விசயங்கள் ஏன் தோலுரிக்கப்படாமல் இருக்கின்றன?


ஆரூர் ரங்
செப் 03, 2025 14:11

தலைமை நீதிபதி கவாயின் தந்தை இதே கேரளாவின் ஆளுநராக இருந்தார். கம்யூனிஸ்டு LDF அமைச்சரவையின் விருப்பத்திற்கு மாறாக பினராயி விஜயன் மீது ஊழல் விசாரணை செய்ய சிபிஐ க்கு உத்தரவிட்டார்..,(எதிர்கட்சியாக இருந்த காங்கிரசு ஆட்கள் மகிழ்ச்சியடைந்தனர்.). இப்போது தலைமை நீதிபதி இவ்வழக்கில் அதனடிப்படையில் விசாரிக்க வேண்டும்.


ஆரூர் ரங்
செப் 03, 2025 14:04

முதல்வரே வேந்தர் பதவி வகிக்க கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்தார். ஏனெனில் அப்போது ஜெயலலிதா ஆட்சி.


ஆரூர் ரங்
செப் 03, 2025 14:01

சட்டசபை கலைக்கப்பட்டு முதல்வர் யாருமில்லாத நிலையில் ஜனாதிபதியின் ஆட்சி நடந்தால் யார் துணை வேந்தர்கள் நியமனத்தை நடத்துவார்கள்? கல்வியில் அரசியலைக் கலப்பது ஆபத்து. மூன்று தலைமுறையாக தவறான தேசவரலாறு கற்பிக்கப்படுகிறது.


Venugopal S
செப் 03, 2025 13:59

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகள் மட்டுமே தலையிடக்கூடாது, மற்றபடி ஆர் எஸ் எஸ்,ஏ பி வி பி,ஹிந்து முண்ணனி போன்ற பாஜகவின் அல்லக்கைகள் தலையிடலாம் என்கிறாரோ!


BALAJI
செப் 03, 2025 10:46

பேசாமல் மாநில கவர்னர்களுக்கு பாஜகவில் தலைவர் செயலர் பொருளாளர் என்று பதவி கொடுத்து விடலாம்


Lakshmanan
செப் 03, 2025 10:58

மாணவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்த்து விடலாமா


நிக்கோல்தாம்சன்
செப் 03, 2025 12:26

காப்பியடித்ததை தடுத்த பேராசியர் மீது போக்ஸோ சட்டத்தை எப்படி பாய்ச்சலாம் என்று செய்து காட்டிய கம்னாட்டி பெண்களுக்கு என்ன பதவி கொடுக்கலாம்


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 03, 2025 14:31

திராவிட மாடல் மாவட்டங்கள் வட்டங்களை துணை வேந்தர் ஆக்கி விடலாம்.


KRISHNAN R
செப் 03, 2025 10:20

உதவி பெறும் பள்ளிகள் பல.. மாணவர் இல்லாமல் இருக்கும்


Minimole P C
செப் 03, 2025 10:16

All due to corruption in appointing VCs post. It is the SC sumoto approved the bill of TN Govt. which is not correct as university education is funded by UGC and according to its norms, CM cannot be a chancellor of the university. That is the reason the HC, Chennai gave stay in appointing CM as chancellor. But it is the ego of the SC, or biased view approved the bill of state Govt. All judges are not passing orders according to the constitution of India, but to the ideologies they believe or according to their connivence.


ஜெய்ஹிந்த்புரம்
செப் 03, 2025 09:19

நீதிமன்றம் வழக்கை வீசி எறிந்து விட்டு வழக்கு போட்டதற்கு கவர்னருக்கு அபராதம் போடும்.


புதிய வீடியோ