உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கவர்னர் ரவிக்கு நாளை வரை மட்டுமே அவகாசம்: பொன்முடி பதவியேற்பு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் "கெடு"

கவர்னர் ரவிக்கு நாளை வரை மட்டுமே அவகாசம்: பொன்முடி பதவியேற்பு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் "கெடு"

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது குறித்து பதிலளிக்க கவர்வர் ஆர்.என்.ரவிக்கு நாளை வரை உச்சநீதிமன்றம் அவகாசம் விடுத்துள்ளது. கவர்னர் ரவி என்ன செய்து கொண்டிருக்கிறார்? என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சிக்கு உயா்நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இதையடுத்து எம்.எல்.ஏ., பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டு அமைச்சர் பதவியையும் பொன்முடி இழந்தார். இவரது தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது.பின்னர், பொன்முடிக்கு மீண்டும் எம்.எல்.ஏ. பதவி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.இதையடுத்து அவரை மீண்டும் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கக் கோரி முதல்வர் ஸ்டாலின், கவர்னருக்கு கடிதம் அனுப்பி இருந்தார். பதவி பிரமாணம் செய்து வைக்க கவர்னர் ரவி மறுப்பு தெரிவித்து விட்டார். இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று(மார்ச்21) விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியதாவது: கவர்னர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?. கவர்னர் ரவி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறியுள்ளார். பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியாது என்று சொல்வது அவருடைய வேலை அல்ல.உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்த பிறகும் பொன்முடிக்கு பதவியேற்பு நடத்தி வைக்க கவர்னர் மறுப்பது ஏன்? நீதிமன்ற உத்தரவை மீறி பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியாது என எப்படி கூறமுடியும். அவர் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும். நாங்கள் கண்ணை மூடிக்கொண்டு இருக்கவில்லை. கவர்னரின் செயல் அரசியல் சாசனத்துக்கு எதிரானது. அரசியல் சாசனத்தை கவர்னர் பின்பற்றவில்லை என்றால் மாநில அரசு என்ன செய்யும். பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது குறித்து கவர்னர் ரவி நாளைக்குள் பதில் அளிக்க வேண்டும். கவர்னர் தரப்பில் விளக்கம் கேட்டு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும். இவ்வாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

panneer selvam
மார் 21, 2024 23:34

It is bit confusing scenarios A person convicted by lower courts but on appeal , its judgement is restrained so that an appeal could be heard , how we consider that person as an innocent ? he is not innocent unless higher court rejects the judgement and exonerate him Will anyone could explain in indian legal point ?


Rajesh Kanna
மார் 21, 2024 22:42

Is anybody mis-guiding Governor? why he is repeatedly taking wrong decision and get into trouble This will hit BJP too


Unmai Vilambi
மார் 21, 2024 21:29

Gov should appeal against this judgement in SC


Palanisamy Sekar
மார் 21, 2024 20:21

குற்றவாளிக்கு இப்படி ஒரு மரியாதையும்பொறுப்பாக நடந்துகொண்ட ஆளுநருக்கு மிரட்டும் தொனியும்கலிகாலம் என்றுதான் சொல்லணும் தண்டனையை நிறுத்திவைத்தால் அது குற்றவாளி விடுவிப்பு என்கிற அர்த்தம் என்கிறாரே நீதிபதி அவருக்கு மட்டும் அந்த அர்த்தம் தெரிந்தால் போதுமா? தீர்ப்பின் போது அதனை விவரமாக சொல்லி இருக்கணும் ஆளுநர் பொறுப்பாக இருப்பதால்தான் குற்றவாளிக்கு அப்படி ஒரு அரசு பொறுப்பை வழங்கக்கூடாது என்கிற தேசபக்தியால் தான் நிறுத்தி வைத்துள்ளார் ஆளுநரை பற்றிய விமர்சனம் நீதிபதி அவர்கள் இவ்வளவு கொடூரமாக தாக்கி அறிக்கை விட கூடாது நீதிமன்றத்தை காட்டிலும் ஜனாதிபதியின் பொறுப்பில் இருப்பவர் ஆளுநர் தேசபக்தியில் ஆளுநரை விட நீதிபதி ஒன்றும் ஈடானவர் அல்ல குற்றத்தை ஒப்புக்கொண்ட குற்றவாளிக்கு உச்சநீதிமன்றம் செய்வது விலைக்கு போன நீதியாகவே மக்கள் பேசிக்கொள்வது நல்லதல்ல


Nachiar
மார் 21, 2024 17:57

sathiya sothanai sattam thotraalum dharmam vendrea theerum


Annamalai Radhakrishnan
மார் 21, 2024 17:52

The chief justice says we are for the common man, But when there are plenty of cases pending in the court, They take an appeal case of a convicted person in one day and without hearing the merits of the case they stay the conviction order of the lower court, now without acquittal the convicted person can become a minister again Great Justice tem we have


Velan Iyengaar
மார் 21, 2024 17:01

thevayaa?? ithu thevayaa?


RAMAKRISHNAN NATESAN
மார் 21, 2024 16:56

Many had already been saying that BJP-DMK alliance shall take place


YESPEE
மார் 21, 2024 16:55

nalla sammati adi for bjp and governor


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ