உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆக்ஸ்போர்டு பல்கலை செல்லும் மம்தா: பெருமைக்குரிய விஷயம் என்கிறார் கவர்னர்

ஆக்ஸ்போர்டு பல்கலை செல்லும் மம்தா: பெருமைக்குரிய விஷயம் என்கிறார் கவர்னர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: முதல்வர் மம்தா பானர்ஜி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சொற்பொழிவு ஆற்றச்செல்வது பெருமைக்குரிய விஷயம் என்று மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் கூறினார்.மார்ச் 24ம் தேதி லண்டன் செல்லும் முதல்வர் மம்தா பானர்ஜி, இந்திய தூதரகத்தால் நடத்தப்படும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அதன் பிறகு, மார்ச் 25ம் தேதி வர்த்தகர்களை சந்திக்க உள்ளார். 26ம் தேதி வர்த்தக கூட்டத்தில் கலந்து கொள்வதுடன், 27ம் தேதி ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற உள்ளார். 28ம் தேதி லண்டனில் இருந்து கோல்கட்டாவுக்கு திரும்புவார்.கடந்த 2015ம் ஆண்டு மம்தா பானர்ஜி பிரிட்டன் சென்ற நிலையில், தற்போது மீண்டும் செல்ல இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், கோல்கட்டாவில் சிஐஐ கூட்டத்தில் கலந்து கொண்ட கவர்னர் ஆனந்த போஸ் அளித்த பேட்டி:வங்கத்திற்கு ஏதாவது நல்லது நடந்தால், அது எங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. முதல்வர் ஆக்ஸ்போர்டுக்குச் செல்வதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.மம்தா ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்குச் செல்வது பெருமைக்குரிய விஷயம். மாநிலத்திற்கு நல்லது நடக்கும் போதெல்லாம், அது என்னை மகிழ்ச்சியடையச் செய்கிறது.இவ்வாறு கவர்னர் ஆனந்த போஸ் கூறினார்.மேற்குவங்க முதல்வரும், கவர்னரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டு வந்த நிலையில், இப்போது கவர்னர் இப்படி கூறியிருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Bhakt
மார் 22, 2025 22:43

இந்த பாட்டை பாட தான் ட்ரூப்போடு போறாரு


ஆரூர் ரங்
மார் 22, 2025 21:42

அடுத்து யுனஸ்கோ வில் பேசி விருது வாங்குவீர்கள். பாராட்டுகள்.


கல்யாணராமன் மறைமலை நகர்
மார் 22, 2025 21:06

என்னடா இது, ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்துக்கு வந்த சோதனை!


sridhar
மார் 22, 2025 20:52

என்ன வச்சி காமெடி எதுவும் பண்ணலியே ?


Karthik
மார் 22, 2025 23:21

பண்ணிட்டாரே.. கவர்னர் பண்ணிட்டாரே.. மம்தாவையும் ஆக்ஸ்போர்டையும் வச்சி காமெடி பண்ணிட்டாரே.


Nandakumar Naidu.
மார் 22, 2025 20:22

அங்கு போய் தேச, சமூக மற்றும் ஹிந்து விரோத சொற்பொழிவு ஆற்றுவாளா இவர்


Appa V
மார் 22, 2025 20:20

பிரிட்டன் ...... கட்டுப்பாட்டில் இயங்குகிறது ..க்ரூமிங் கேங் பற்றி ஆக்ஸ்போர்டில் அம்மணி பேச வேண்டும்


Ramesh Sargam
மார் 22, 2025 19:58

Oxford பல்கலையின் தரம் வீழும்.


முக்கிய வீடியோ