உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசியல் தாக்குதலுக்கு இலக்காக மாறிய கவர்னர்கள்: துணை ஜனாதிபதி வேதனை!

அரசியல் தாக்குதலுக்கு இலக்காக மாறிய கவர்னர்கள்: துணை ஜனாதிபதி வேதனை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெய்ப்பூர்: ''மத்திய அரசும், மாநில அரசும் வெவ்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தோரால் நடத்தப்படும்போது, தாக்குதலுக்கான எளிதான இலக்காக கவர்னர்கள் மாறி விடுகின்றனர். ஜனாதிபதி, துணை ஜனாதிபதியும் கூட தாக்குதலுக்கு ஆளாகும் நிலை உள்ளது,'' என்று துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கவலை தெரிவித்தார்.ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் நடந்தநிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பேசியதாவது:இன்றைய அரசியல் சூழல், ஜனநாயகத்திற்கு உகந்ததாகவோ, நமது பண்டைய கலாசார மரபுகளுக்கு ஏற்றதாகவோ இல்லை. அரசியல் போட்டியாளர் என்பவர் நமது எதிரி இல்லை. எதிரிகள் எல்லைகளுக்கு அப்பால் இருக்கலாம், ஆனால் நாட்டிற்குள் யாரும் இருக்கக்கூடாது.சட்டசபை, பார்லிமென்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், கண்ணியத்தை காப்பாற்ற வேண்டும். அப்படி காப்பாற்றத் தவறும்போது ஜனநாயக அமைப்புகளின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவர்.ஜனநாயகத்தின் கோவில்களான சட்டசபை, பார்லிமென்டில் நடப்பது கவலை அளிக்கிறது. இந்த அமைப்புகளின் புனிதம் காப்பாற்றப்படாதபோது, மக்கள் வேறு மாற்று ஏற்பாடுகளை தேடிச்சென்று விடுவர்.மாநில மற்றும் மத்திய அரசுகள் வெவ்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவையாக இருக்கும்போது, அரசியல் சட்டத்தை பின்பற்ற வேண்டியவர்கள் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகின்றனர். இத்தகைய மாநிலங்களில் இருக்கும் கவர்னர்கள் தாக்குதலுக்கு எளிதான இலக்காக மாறி விடுகின்றனர்.இப்போது, துணை ஜனாதிபதி, ஜனாதிபதியும் கூட தாக்குதலில் இருந்து தப்பிக்க முடிவதில்லை. இது நியாயம் இல்லை. என்னைப் பொறுத்தவரை, நான் எந்த அழுத்தத்திற்கும் ஆளாகவில்லை; யாருக்கும் நிர்பந்தம் கொடுப்பதும் இல்லை.லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவும் பாரபட்சம் இன்றி செயல்படுகிறார். அவரை யாரும் நிர்பந்தம் செய்ய முடியாது. நான் அவருடன் நெருங்கி பணியாற்றி இருக்கிறேன். எதிர்க்கட்சி ஆக்கபூர்வமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். அந்த வகையில், எதிர்க்கட்சி என்பது ஜனநாயகத்தின் ஒரு முக்கிய உறுப்பாகும்.இவ்வாறு ஜக்தீப் தன்கர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Mario
ஜூன் 30, 2025 22:14

அரசியலுக்காக மாறிய கவர்னர்கள்: மக்கள் வேதனை


தாமரை மலர்கிறது
ஜூன் 30, 2025 21:59

முதல்வரை விட கவர்னருக்கு தான் அதிக அதிகாரம் என்று பாராளுமன்றத்தில் மத்திய அரசு சட்டம் இயற்றவேண்டும். இதன் மூலம் ஸ்டாலின் நேரடியாக கவர்னருக்கு ரிப்போர்ட் செய்யும் நிலைக்கு தள்ளபடுவார். இந்திய தேச ஒற்றுமைக்கு அது பயனளிக்கும்.


ஆரூர் ரங்
ஜூன் 30, 2025 21:57

மாநிலத்தை ஆளும் கட்சிகள் வரைமுறையே இல்லாமல் கவர்னர் ஜனாதிபதி பற்றி எது வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் அப்போதும் ஜனாதிபதி, கவர்னர் தங்களது பதவியின் நாகரீகம் கருதி அமுக்கி வாசிக்க வேண்டிய கட்டாயமுள்ளது. . கவர்னர் பதிலடி கொடுக்கமாட்டார் எனும் வீக்னஸ் தெரிந்தே அவர்மீது தாக்குதல் நடத்துவது கொழைத்தனம். அநாகரீகம்.


Iyer
ஜூன் 30, 2025 21:17

*. GOVERNOR ஆளுநர் விழிப்போடு இருந்ததால்தான் டெல்லியில் LIQUOR SCAM வெளிச்சத்துக்கு வந்தது. * கர்நாடக மூடா ஊழலும் ஆளுனரால்தான் EXPOSE ஆனது * மேற்குவங்கத்தில் ஆளுநர் உதவியால்தான் 3-4 பெரிய ஊழல்கள் வெளிப்பட்டன * தமிழ்நாட்டு டாஸ்மாக் ஊழல் வெளியானதில் கவர்னர் பங்கும் உண்டு * கேரளத்தில் தங்கம் கடத்தல் செய்யும் அரசியல் வாதிகளும் ஆளுநர் உதவியால் தான் பிடிபட்டனர் *மாநில அரசு ஊழல் இல்லாமல் நேர்மையாக இருந்தால் - முதல்வர் ஆளுநரை கண்டு பேடிக்கவேண்டியதில்லை


அப்பாவி
ஜூன் 30, 2025 21:13

கெவுனர்கள் மத்திய அரசுக்கு உளவாளிகளாகவும், துதி பாடுபவர்களாகவும் மாறிட்டாங்க. இவரே மே.வங்காளத்தில் இதையேதான செஞ்சுக்கிட்டிருந்தாரு.


முருகன்
ஜூன் 30, 2025 20:59

அரசியலில் இருந்து வந்த இவருக்கு துணை ஜனாதிபதி பதவி என்பது இவர் கட்சி பதவி கிடையாது என ஞாபகம் படுத்த வேண்டும் இவருக்கு


spr
ஜூன் 30, 2025 20:12

ஆளுநர்கள் மத்திய அரசின் பணியாளர்களாக பணி புரிவதில் தவறில்லை ஆனால் ஆளும் கட்சிக்கு ஜால்றா அடிப்பவர்களாக இருப்பது சரியல்ல. மத்திய அரசு மாநில மக்களுக்கு வழங்கும் நிதி முறையாகச் செலவழிக்கப்படுகிறதா போட்ட திட்டங்கள் காலத்தில் முடிகிறதா அதில் முறைகேடுகள் உள்ளனவா என்று கண்காணிப்பது நியாயமே ஆனால் பிரச்சைனைக்குரிய வகையில் பேசுவது, மக்களின் உணர்வுகளைத் தூண்டுவது தவிர்க்கப்பட வேண்டும் தனிப்பட்ட முறையில் அவருக்கு கருத்து சொல்லும் உரிமையுண்டு ஆனால், தன்னை ஆளுநர் என்று தனது பதவியை முன்னிறுத்தி மதிப்பளிக்கப்படும் கூட்டங்களில் அப்படிப் பேசாமல் இருக்க வேண்டும். இது தனது தனிப்பட்ட கருத்து என்று சொல்லி ஆளுநராக இல்லாமல் எந்தவித அரசு மரியாதைகளுமின்றி பங்கேற்கலாம் அரசியலமைப்புச் சட்டப்படி ஆளுநர்கள் சட்டசபையின் கருத்துப்படிதான் நடக்க வேண்டும் முன்வைக்கப்படும் மசோதாக்களில் தவறு இருக்குமானால் சுட்டிக் காட்டலாம் ஆனால் தவறு செய்வோம் என்று அவர்கள் மசோதாவை சட்டமாக்க முயன்றால் வேறு வழியில்லை சில மாற்றங்கள் மட்டும் செய்யச் சொல்லியாவது அவற்றுக்கு ஒப்புதல் அளிக்கத்தான் வேண்டும் முடிந்தால் குடியரசுத் தலைவர் சட்டத்துறை நீதிமன்றம் மூலம் அத்தகு குறைகள் இல்லாதபடி சட்ட அமைப்பைச் சீர் செய்ய முயற்சிக்கலாம் இப்படி நடந்து கொள்ளும் ஆளுநர்கள் பிரச்சினைக்கு ஆளாவதில்லை குடியரசுத் தலைவர்களும் உதவித் தலைவருக்கும் ஆளுநர்கள் எதிர்கொள்ளும் சட்டத் சிக்கல்கள் ,பிரச்சினைகள் தெரியாதா? தீர்ப்பதற்கு ஏன் முயற்சி எடுக்கவில்லை? ஆளுநர்கள் அவர்களின் பிரதிநிதிகள்தானே


V Venkatachalam
ஜூன் 30, 2025 21:10

எஸ் பி ஆர் அண்ணே ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி திரு சோ அவர்கள் நீங்க சொன்ன இவ்வளவும் சேர்த்து ஒரு வாக்கியத்தில் சொன்னார். சப்போர்ட் டிஎம்கே அண்ட் ஸீ த வோர்ல்ட். டி எம் கே வை எவனாவது தட்டி கேக்க முடியுமா? ங்கிற விஷயத்தை நீங்க விஸ்தாரமா சொல்லிப்புட்டீக.


J.Isaac
ஜூன் 30, 2025 19:55

கவர்னர்கள் அரசியல்வாதிகளாக மாறிவிட்டார்கள்


புதிய வீடியோ