உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசு ஊழியர் மர்மச்சாவு கொலையா; தற்கொலையா?

அரசு ஊழியர் மர்மச்சாவு கொலையா; தற்கொலையா?

ராய்ச்சூர்: ஆசிட் குடித்து அரசு ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். அதிகாரிகள் தொல்லை காரணம் என்று, குடும்பத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர்.ராய்ச்சூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, நில ஆவண காப்பக அலுவலகத்தில் முதல்நிலை உதவியாளராக வேலை செய்தவர் வாசிம் சவுத்ரி, 40. நேற்று முன்தினம் மதியம் வீட்டிற்கு சாப்பிட சென்றவர், மாலை வரை பணிக்கு திரும்பி வரவில்லை.இந்நிலையில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள நீச்சல் குளத்தின் நுழைவு வாயில் முன்பு, வாயில் நுரைதள்ளிய நிலையில், வாசிம் மயங்கி கிடந்தார். அவரை பொதுமக்கள் மீட்டு, ராய்ச்சூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.மேல்சிகிச்சைக்காக ஐதராபாதில் உள்ள, தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல், நேற்று மதியம் இறந்தார். போலீஸ் விசாரணையில் ஆசிட் குடித்து, வாசிம் தற்கொலை செய்தது தெரிந்தது. என்ன காரணம் என்று தெரியவில்லை.உயர் அதிகாரிகள் தொல்லை காரணமாக, வாசிம் தற்கொலை செய்ததாக, அவரது குடும்பத்தினர் குற்றச்சாட்டி உள்ளனர். ஆனால் வாயில் ஆசிட்டை வலுக்கட்டாயமாக ஊற்றி, வாசிமை ஒரு கும்பல் கொலை செய்து இருக்கலாம் என்று சந்தேகம் இருப்பதாக, நண்பர்கள் கூறி உள்ளனர். விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை