உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கன்னட கொடி ஏற்றுவது கட்டாயம் வர்த்தக நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு

கன்னட கொடி ஏற்றுவது கட்டாயம் வர்த்தக நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு

பெங்களூரு :“கர்நாடக மாநிலம் உதயமான தினமான, நவ., 1ம் தேதியன்று, அனைத்து கல்வி மற்றும் வர்த்தக நிலையங்கள், தொழிற்சாலைகளில் கன்னட கொடி கட்டாயம் பறக்கவிடப்பட வேண்டும்,” என, மாநில துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.மைசூரு மாநிலம் என்ற பெயர், கர்நாடகா என பெயர் மாற்றம் பெற்று, 50 ஆண்டுகள் நிறைவடைய உள்ளன. கர்நாடக மாநிலம் உதயமான தினம் நவ., 1ல் கொண்டாடப்பட உள்ளது.இதுகுறித்து, மாநில துணை முதல்வர் சிவகுமார் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:கர்நாடகா உதயமான நவ.,1ம் தேதி, மாநிலத்தில் உள்ள அனைத்து அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்கள், கன்னட கொடியை கட்டாயம் ஏற்ற வேண்டும்.இந்த தினத்தை கொண்டாடும் வகையில் அரசு ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சி ஒரு இடத்தில் நடத்தப்பட்டாலும், கன்னட மொழியின் மீது மாணவர்களுக்கு பற்று ஏற்படும் நோக்கில் அனைத்து தனியார் மற்றும் அரசு கல்வி நிறுவனங்கள் கொண்டாட்டங்களை கட்டாயம் நடத்த வேண்டும்.பெங்களூரில் வசிக்கும் 50 சதவீத மக்கள், பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கன்னட மொழியை பயில முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கன்னட மொழி தெரியாமல் கர்நாடகாவில் வாழ முடியாது என்பதை, அனைவரும் உணர வேண்டும்.சுதந்திர தினம், குடியரசு தினத்தைப் போல, நவ., 1ல் கன்னட கொடியை ஏற்றி கலாசார நிகழ்ச்சிகளை கல்வி நிறுவனங்கள் நடத்த வேண்டும். வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் கலாசார நிகழ்ச்சிகள் நடத்தத் தேவையில்லை. ஆனால், கன்னட கொடி கட்டாயம் ஏற்றப்பட வேண்டும்; மீறினால் அபராதம் விதிக்கப்படும்.இதை அனைவரும் தன்னார்வத்துடன் செய்வர் என நம்புகிறேன். இதை காரணமாக வைத்து, வர்த்தக மற்றும் கல்வி நிறுவனங்களை மிரட்டும் கன்னட ஆதரவு அமைப்புகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

நிக்கோல்தாம்சன்
அக் 13, 2024 07:59

தமிழகத்தில் திராவிட என்றொரு வைரஸ் , கருநாடகத்தில் இப்படி ஒரு வைரஸ்


Krishna Gurumoorthy
அக் 12, 2024 12:31

அதுதான் நானே மிரட்டி விட்டேனே?? மற்ற ரவுடிகள் அடக்கி வாசிக்க வேண்டும் ?


sankar
அக் 12, 2024 10:41

இந்த பிரிவினைவாதிகளை விரட்டி அடியுங்கள் மக்களே


Subash BV
அக் 12, 2024 09:48

Shameless guys. 69 yrs passed. They are unable to protect their own KANNADA language. Still holding english tails. Kannada medium govt schools are getting converted to english. HOW CAN THEY PROTECT KANNADA FLAG. STANDARD INC UNPATRIOTIC SHOW OFFS. KANNADIGAS BE ALERT.


jayvee
அக் 12, 2024 08:16

இந்த சிவகுமார் திருமாவின் கன்னட பாதிப்பு.. வாயால் வடை சுடுவது சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது பணத்தை சுடுவது


Jysenn
அக் 12, 2024 08:11

Komaaligal Rajyam. This diravida model disease of the neighborhood has caught up with the Karnataka State too.


Amruta Putran
அக் 12, 2024 07:55

One country one flag that is national flag. Khan cross always involve in separatism


chennai sivakumar
அக் 12, 2024 07:30

இப்போது தேசிய கொடியையே எவனும் கண்டுக்க மாட்டேன் என்கிறான். இந்த லட்சணத்தில் இது வேறு. நடத்துங்க உங்கள் ராஜ்ஜியத்தை.


sankaranarayanan
அக் 12, 2024 07:15

ஆதென்னய்யா கன்னட கொடி அப்போ இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் பேசும் மொழிக்கு ஏற்ப மொழிக்கொடிகள் உள்ளனவா காங்கிரஸு ஏற்கனவே மொழிவாரி மாகாணம் பிரித்து இந்தியாவே படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறது இதே இப்போ இவர் கன்னட கொடி ஏற்ற வேண்டும் என்றால் ஒவ்வொரு மாநிலமும் இனி இதையே பின் பற்றும் பிரிவினைக்கைக்கே அடிபோடும்படி ஆகிவிடும் இது நாட்டின் ஒற்றுமையையை அடியோடு குலைத்துவிடும்


Svs Yaadum oore
அக் 12, 2024 07:02

கன்னட மொழி தெரியாமல் கர்நாடகாவில் வாழ முடியாது என்பதை, அனைவரும் உணர வேண்டுமாம் .....இதற்கு டெல்லி இத்தாலி வடக்கன் காங்கிரஸ் , சமூக நீதி மத சார்பின்மையாக ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி இந்த கொள்கைக்கு ஆதரவு கொடுக்கும் ....அதற்கு சமத்துவம் சகோதரத்துவமாக இங்குள்ள விடியல் திராவிடனுங்க ஆதரவு கொடுப்பார்கள் ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை