உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 440 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மாசுபாடு; வெளியானது அதிர்ச்சி தகவல்

440 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மாசுபாடு; வெளியானது அதிர்ச்சி தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நாடு முழுவதும் 440 மாவட்டங்களில் உள்ள நிலத்தடி நீர் மாசடைந்துள்ளதாக மத்திய நிலத்தடி நீர் வாரியம் தெரிவித்துள்ளது. 2023ம் ஆண்டு நிலவரப்படி, 440 மாவட்டங்களிவ் நிலத்தடி நீரில் நைட்ரேட் அளவு பாதுகாப்பு அளவை விட கூடுதலாக இருப்பது தெரிய வந்துள்ளது. இது கடந்த 2017ம் ஆண்டு 359 மாவட்டங்களில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 7 ஆண்டுகளில் 80 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்துள்ளது. தரவுகளின் அடிப்படையில் பார்க்கும் போது, இந்தியாவில் உள்ள 56 சதவீதம் மாவட்டங்களில், ஒரு லிட்டர் தண்ணீரில் 45 மில்லி கிராமுக்கு அதிகமான நைட்ரேட் அமிலம் இருப்பது தெரிய வந்துள்ளது. இது குழந்தைகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு மோசமானது என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். அதிகபட்சமாக ராஜஸ்தானில் 49 சதவீதமும், கர்நாடகாவில் 48 சதவீதம் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தமிழகத்தில் 37 சதவீத நிலத்தடி நீரில் பாதுகாப்புக்குரிய அளவை விட, நைட்ரேட் நச்சு கூடுதலாக இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. விவசாயத்துக்கு பயன்படுத்தக்கூடிய நைட்ரேட் உரம் காரணமாக நிலத்தடிநீரில் நைட்ரேட் அதிகரிக்கிறது.30.77 சதவீதம் இருந்த நைட்ரேட் பாதிப்பு, பருவமழைக்குப் பிறகு 32.66 சதவீதமாக அதிகரித்ததும் ஆய்வில் பெரியவந்துள்ளது.நைட்ரேட்டை போன்று ப்ளோரைடு மற்றும் யுரேனியம் ஆகியவையும் நிலத்தடி நீரை அதிகம் பாதிக்கின்றன. ராஜஸ்தான், ஹரியானா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளில், 100 ppm (parts per billion) யுரேனியம் அதிகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 30 PPBக்கு அதிகமாக யுரேனியம் இருந்தாலே அது பாதுகாப்பற்றது என்கின்றனர் நிபுணர்கள். எனவே, நிலத்தடி நீரை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Yuvaraj
ஜன 04, 2025 16:02

விரைவில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நிலத்தடி நீர் கெட்டுவிடும் காரணம் மாசுகாசுகட்டுப்பாட்டு வாரியம்


venugopal s
ஜன 02, 2025 19:44

நான் முதன் முதலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கான்பூர் நகரில் கங்கையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். நம் கூவம் ஆறு போல் இருந்தது.


MUTHU
ஜன 02, 2025 17:39

44 மாவட்டங்கள் வேண்டுமானால் நன்றாயிருக்கும். அதுவும் மக்கள் அடர்த்தியற்ற மலை, லடாக் மற்றும் ராஜஸ்தான் பாலைவன மாவட்டங்கள். மற்ற மாவட்டங்கள் எல்லாம் முற்றிலும் மாசுபட்டிருக்கும்.


Nandakumar Naidu.
ஜன 02, 2025 11:21

மத்திய அரசு வயல்களில் உரத்தை உபயோகிப்பது தடை செய்ய வேண்டும்.


MUTHU
ஜன 02, 2025 17:42

அப்புறம் ஒவ்வொருவீட்டிற்கும் ஒரு கைப்பிடி உருண்டை சோறு மட்டுமே ரேஷன் கொடுக்க முடியும். பசுமை புரட்சி இல்லையென்றால் இங்க பில்லர் வைத்து நாக்கில் சொட்டு சொட்டாய் தான் பால் வைத்து கொள்ள முடியும். அவ்வளவு மக்கள் தொகை.


sundarsvpr
ஜன 02, 2025 10:51

முதலில் இயற்கையை ஒட்டி வாழ பழகவேண்டும். வயிறார உண்ணுவதைவிட அளவோடு உண்ணுவது முக்கியம். அப்போதுதான் உணவுப்பொருள்கள் தேவை குறையும். இதனால் நிலத்திற்கு ஓய்வு கிடைக்கும் ரசாயன உரத்தின் தேவை குறையும். ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன் ஒவ்வொரு வீட்டிலும் உர குழி இருக்கும் ஆடு மாடுகள் சாணங்கள் கிடைக்கும். நிலத்திற்கு உபயோகப்படும். நிலத்தில் கிடைக்கும் பயிர்கள் ருசியாய் சத்துள்ளதாய் இருக்கும். இப்போது ரசாயன உர விளைச்சல் சக்கையை தான் சாப்பிடுகிறோம் என்பதனை மறக்கக்கூடாது. சத்துள்ள உணவு பொருள்கள் அரைவயிற்றிக்கு சாப்பிட்டால் போதுமானது.


அப்பாவி
ஜன 02, 2025 10:41

இதுல அதிர்ச்சியடைய என்ன இருக்கு? தொழிற்சாலை கழிவுகள், சாக்கடையெல்லாம் டைரக்டா ஆத்துல கலக்குது. நுரையா பொங்குது. மக்களின் சோப், ஷாம்பு, டிடர்ஜெண்ட் உபயோகம் அதிகமாயிடுச்சு. தொழிற்புரட்சி நடந்த நாம வல்லரசாயிட்டோம். எப்புடி சாவறோம்னு தெரியாமலேயே மர்மநோய் வந்து மக்கள் சாவுறாங்க.


முருகேசன்.ஆ
ஜன 02, 2025 11:43

தன் வினை தன்னைச் சுடுகிறது!!


புதிய வீடியோ