உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புதிய உச்சத்தை நோக்கி இந்திய பொருளாதாரம்: செப்டம்பரில் ஜி.எஸ்.டி., வசூல் 1.73 லட்சம் கோடி ரூபாய்!

புதிய உச்சத்தை நோக்கி இந்திய பொருளாதாரம்: செப்டம்பரில் ஜி.எஸ்.டி., வசூல் 1.73 லட்சம் கோடி ரூபாய்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: செப்., மாதம் ஜி.எஸ்.டி., மூலம் 1.73 லட்சம் கோடி ரூபாய் வசூல் ஆகி உள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 6.5 சதவீதம் அதிகம் ஆகும்.சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி., 2017 ஜூலை 1 முதல் அமல்படுத்தப்பட்டது. மத்திய நிதியமைச்சர் தலைமையிலான இக்குழுவில் மாநில நிதி அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். ஒவ்வொரு மாதம் ஒன்றாம் தேதி அன்று, அதற்கு முந்தைய மாத வசூல் நிலவரத்தை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டு வருகிறது.அந்த வகையில், செப்., மாதம் ரூ.1.73 லட்சம் கோடி ரூபாய் வசூல் ஆகி உள்ளது.அதில்,சிஜிஎஸ்டி -ரூ.31,400 கோடிஎஸ்ஜிஎஸ்ட -ரூ.39,300 கோடிஐஜிஎஸ்டி- ரூ.90,600 கோடிசெஸ் ரூ.11,900 கோடி வசூல் ஆகி உள்ளது.கடந்த ஆண்டு செப்., மாதம் ஜிஎஸ்டி மூலம் ரூ.1.62 லட்சம் கோடி வசூல் ஆகி உள்ளது.

9 மாதங்களில்

இந்தாண்டு கடந்த 9 மாதங்களில் ஜிஎஸ்டி மூலம் மொத்தம் ரூ.10.9 லட்சம் கோடி வசூல் ஆனது. இது கடந்த ஆண்டு காலகட்டத்தை காட்டிலும் 9.5 சதவீதம் அதிகம். அப்போது ரூ.9.9 லட்சம் கோடி தான் வசூல் ஆகி உள்ளது.2023 - 24 நிதியாண்டில் ஜி.எஸ்.டி., மூலம் மொத்தம் ரூ.20.18 லட்சம் கோடி வசூல் ஆகி உள்ளது. அதில் ஏப்., மாதம் அதிகபட்சமாக ரூ.2.10 லட்சம் கோடி கிடைத்துள்ளது. மாதந்தோறும் சராசரியாக ரூ.1.68 லட்சம் கோடி வசூலானது.

பொருளாதார வளர்ச்சி

ஜி.எஸ்.டி., வசூல் அதிகரிப்பு என்பது, சர்வதேச அளவிலான சூழ்நிலை ஸ்திரமற்று இருக்கும் நிலையில், இந்தியாவின் நிதிநிலைமை மற்றும் பொருளாதாரம் வளர்ந்து வருவதை பிரதிபலிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Lion Drsekar
அக் 02, 2024 13:52

பாராட்டுக்கள், மனிதன் இலவசமாக மூச்சு விடுகிறான் ஆகவே பிராணவாயு வரி போடலாம், சிறுநீர் மலத்துக்கு கழிவு நீர் துறை பில் போடுகிறார்களே அதுபோல் இதற்கும் போடலாம், இலவசமாக இயற்கையை ரசிக்கிறான் அதற்கும் வரி போடலாம், விஷன் வரி, பார்வை வரி, காதில் பறைவளின் மற்றும் இயற்கையின் சத்தங்கள் அனுபவிக்கிறான் அதற்கும் ஹியரிங் வரி போடலாம், இறந்தவர்கள் அடக்கம் செய்தபின்பு பல நூறு முதல் பல லட்சம் கோடி மக்கள் வரிப்பணத்தில் சமாதி, பாதுகாப்பு, மின்சாரம் என்று செலவு செய்வது போல் அதற்கும் சாவு வரி என்று போடலாம் , இவைகளையும் போட்டால் திரும்பும் இடமெல்லாம் வரி மையமாக இருக்கும், இன்றைக்கு உட்கார்ந்தாள் வரி சினிமா , தின்றால் வரி உணவகம், பொருள் வாங்கினால் வரி, இயற்க்கையாக வரும் மால ஜலத்துக்கு வரி, குடிநீருக்கு வரி, எதற்கு வரி இல்லை இந்த திருநாட்டில் . விளையாட்டாக நினைக்கலாம், வீட்டு வாசலில் ஒரே ஒரு போர்டு வைத்து பாருங்கள் ஏதாவது ஒரு வியாபார நடத்தும் பலகை, மறுநாள் முதல் எத்தினை துறைகள் கதவைத்தட்டி , சொத்து வரி, ஆரம்பித்து ஒவ்வொரு துறையும் கணக்கிலடங்கா நோட்டீஸ் அனுப்புவார்கள், வியாபாரம் நடக்கிறதோ இல்லையோ போர்டு வைத்தாலே வரிகட்டவேண்டும், இதுதான் இன்றைய நிலை,


முக்கிய வீடியோ