உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சாதனை படைக்கும் வரி வசூல்: பிரதமர் மோடி

சாதனை படைக்கும் வரி வசூல்: பிரதமர் மோடி

விஜயவாடா: மத்திய அரசின் சீர்திருத்தங்களினால், நாட்டில் வரி வசூல் சாதனை படைக்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.ஆந்திரா சென்றுள்ள பிரதமர் மோடி, ஸ்ரீசத்யசாய் மாவட்டத்தில் தேசிய சுங்கம், மறைமுக வரிகள் மற்றும் போதைப்பொருள் அகாடமியை திறந்து வைத்தார்.இதன் பிறகு மோடி பேசியதாவது: வாழ்க்கையில், ஆட்சி மற்றும் நல்லாட்சிக்கு அடையாளமாக கடவுள் ராமர் இருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் வரி அமைப்பில் ஏராளமான சீர்திருத்தம் கொண்டு வந்தோம். முன்பு இருந்த வரி அமைப்பு சாமானிய மக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. போதிய வழிகாட்டுதல் இல்லாததால், நேர்மையாக வரி செலுத்துபவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் பாதிக்கப்பட்டனர். ஜிஎஸ்டி வடிவில், நவீன வரி அமைப்பை கொண்டு வந்தோம். வருமான வரி அமைப்பையும் அரசு சீர்படுத்தியது. இது போன்ற சீர்திருத்தங்களினால், நாட்டில் வரி வசூல் சாதனை படைக்கிறது. அரசு தொடர்ந்து போதுமான வருவாய் பெறுவதில் மக்களுக்கு பங்குள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

Sampath Kumar
ஜன 17, 2024 09:50

வரிவசூல் சாதனை ??? நடுத்தர மக்களுக்கு மிச்சம் பண்ணக்காரன் பேரும் பணக்காரன் ஆகி விட்டார்........ ஏழை பரம ஏழையாகவே வள்ளிக்கின்றம் இந்த நடுத்தரம் நட்ட நாடு வீதியில் அளிக்கின்றார்...


N SASIKUMAR YADHAV
ஜன 17, 2024 01:48

இந்த திராவிட மாடல் கொத்தடிமைகளுக்கு ஜிஎஸ்டிக்கு முன் பலவகை வரியிருந்ததை திராவிட மாடல் அரசின் சாராயத்தை குடித்து வசதியாக மறந்துவிட்டார்கள். இவர்களுக்கு அம்பானி அதானி மட்டும்தான் தொழிலதிபர்கள். மாறன் சகோதரர்கள் பலதொழில் மன்னர் ஜெகத்ரட்சகன் டிப்பர் டிரைவர் பாலு பஸ்கண்டக்டர் வேலு இன்னும் பலபேர் பெட்டிக்கடை நடத்தி பிழைப்பவர்கள் . ஜிஎஸ்டி வந்ததால் வரி ஏய்ப்பு செய்யமுடியாததால் வரிவருவாய் அதிகமாகியிருக்கிறது இதெல்லாம் புரிந்துக்கொள்ள முடியாமல் திராவிட மாடல் சாராயத்தை குடித்து மூளை மழுங்கடித்துவிட்டார்கள்


தாமரை மலர்கிறது
ஜன 17, 2024 01:31

ஒரு நாட்டில் வசூலாகும் வரி அந்த நாட்டின் நிதிநிலைமையை விளக்குகிறது. சோமாலியாவில் வரி வசூல் ஆகாது. அமெரிக்காவை போன்று இந்தியாவிலும் அதிக வசூல் கிடைக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை. இந்தியாவின் பொருளாதாரம் சூப்பராக உள்ளதால், இன்னும் அதிக வரி வசூலிக்க முடியும். அணைத்து பொருள்களுக்கும் இருபத்தெட்டு சதவீத வரி கொண்டுவந்தால், பொருளாதார வளர்ச்சிக்கு நல்லது.


g.s,rajan
ஜன 16, 2024 23:14

இந்தியாவில் குறிப்பாக கொரோனா வைரஸ் தாக்குதலுக்குப் பிறகு பொருளாதாரம் தலை தூக்கவே இல்லை.பலருடைய வேலை பறி போனது,தொழில்கள் முடங்கின ,பல்வேறு தொழில்கள் படிப்படியாக நசிந்தன மற்றும் மூடப்பட்டன .சுற்றுலாத் துறை முடங்கியது இதுவரை மீளவில்லை ,ஹோட்டல்கள் பல மூடப்பட்டன ,விலைவாசி உயர்வு ,வேலை ஆட்களின் கூலி உயர்வு ,கடைகளுக்கு கொடுக்கும் வாடகை,மற்றும் வாடகை ,முன் பண உ யர்வு போன்றவற்றால் பாதிக்கப்பட்டு வருமானமே இல்லாமல் நஷ்டத்தில் இயங்கிப் பிறகு முற்றிலும் மூடப்பட்டுவிட்டன.வாடகை வாகனத் தொழில் எரிபொருள் விலை உயர்வால் முடங்கியது ,வீடுகளில் இருந்து பணிபுரியும் முறையால் பலர் வேலையை ,தொழிலை வாழ்வாதாரத்தை இழந்தனர் ,இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்ப கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாவது ஆகும் .... ,


இவன்
ஜன 17, 2024 05:22

Gst வந்து எந்த வரியையும் உயர்தலை சேர்க்கல பெயர் மாற்றி ஒழுங்கு படுத்தினங்க. முன்னாடி ஏமாத்துன மாதிரி இப்போ ஏமாத்த முடில. தெற்கான்ஸ் வரி போடுறாங்க னு குறை சொல்றது அப்பறம் எங்க காசு னு பிச்சை கேட்குறது


Hari
ஜன 17, 2024 10:26

உலகமே அதலபாதாளத்திற்குள் சென்றுகொண்டுதான் இருக்கிறது கொரோனாவிற்கு காரணமான சீனாவை யாரும் குறைசொல்வதில்லை ஏன் ? உங்கள் கருத்து ஏற்புடையது அல்ல


g.s,rajan
ஜன 16, 2024 22:42

இந்தியாவில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வயிற்றில் அடித்து அம்பானி மற்றும் அதானி போன்ற கோடீஸ்வரர்களுக்குச் சாதகமாக நடப்பதுதான் பி.ஜே.பி யின் நீண்ட நாள் கொள்கை (கொள்ளை ).....


g.s,rajan
ஜன 16, 2024 22:37

எல்லாம் சரி,மத்தியில் இருந்து தமிழகத்துக்குத் தர வேண்டிய நிவாரணம் எப்போ மக்களுக்குக் கிடைக்கும் ....???


g.s,rajan
ஜன 16, 2024 20:58

வரிகள் எல்லாமே மக்கள் தலையில் தானே விடிகிறது,இந்தியாவில் மத்திய அரசும் மாநில அரசும் போட்டி போட்டுக்கொண்டு வரியை விதிப்பதால் அடிக்கடி உயர்த்துவதால் மக்களுக்கு விலைவாசி உயர்ந்தது தான் மிச்சம்,மக்களின் பொருளாதாரம் பூட்ட கேஸ் ....


தமிழன்
ஜன 16, 2024 20:54

வரி....வட்டி...கிஸ்தி... யாரைக் கேட்கிறாய் வரி எதற்கு கொடுக்க வேண்டும் கிஸ்தி எங்களோடு வயலுக்கு வந்தாயா நாற்று நட்டாயா களை பறித்தாயா ஏற்றம் இறைத்து நெடுவயல் பாயக்கண்டாயா அல்லது அங்கே கொஞ்சி விளையாடும் எம் குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்துப் பணிபுரிந்தாயா மாமனா மச்சானா மானங்கெட்டவனே//// இது வீரபாண்டிய கட்ட பொம்மன் படத்தின் வசனம்.


தமிழன்
ஜன 16, 2024 20:53

வரி வசூலில் சாதனை இல்லை.. இது மக்களுக்கு தரும் வேதனை..


Gopal,Sendurai
ஜன 17, 2024 11:15

அறிவாலயத்துக்கு முட்டு கொடுக்கிறதோட நிப்பாட்டிக்க இதையெல்லாம் புரியிற அளவுக்கு உனக்கு மூளை பத்தாது அதனால....


g.s,rajan
ஜன 16, 2024 20:23

இந்தியாவில் மக்களிடம் கஷ்டப்படுத்தி வாங்கிய வரிப் பணத்தை ,வங்கிகளிடம் இருப்பில் உள்ள மக்களின் சேமிப்புப் பணத்தை மிகப் பெரும் கோடீஸ்வரர்களுக்கு கோடிக்கணக்கில் கடனையும் கொடுத்து அதை வாராக் கடனில் வைத்து பிறகு அவர்களால் கட்டமுடியவில்லை என்று கூறி அதனைத் தள்ளுபடியும் செய்கிறீர்களே....???ரிசர்வ் வங்கியில் நாட்டின் அவசரத் தேவைக்காக வைக்கப்பட்டு இருந்த ஒரு லட்சத்து அறுபதாயிரம் கோடி ரூபாய் பணத்தை சும்மாத்தானே இருக்கிறது என்று கூறிப் பல பிரபல தனியார் நிறுவனங்களின் வாராக்கடனைத் தள்ளுபடி செய்தீர்களே...???இது சரியா ..???


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ