உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராபர்ட் வாத்ராவின் 43 அசையா சொத்துகளை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை

ராபர்ட் வாத்ராவின் 43 அசையா சொத்துகளை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: காங்கிரஸ் எம்.பி., பிரியங்காவின் கணவர் ராபர்ட் வாத்ரா தொடர்புடைய ரூ.37.64 கோடி மதிப்பிலான 43 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. மேலும் அவர் மற்றும் 10 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.கடந்த 2008ம் ஆண்டு பிப்., 12ல் குருகிராமின் ஆன்கரேஸ்வர் நிறுவனத்திடம் இருந்து வத்ராவுக்கு சொந்தமான நிறுவனம் 3.53 ஏக்கர் நிலத்தை வாங்கியது. இதில் மோசடி நடந்ததாக கடந்த 2018ம் ஆண்டு செப்., 1ம் தேதி குருகிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலம் தவறான வாக்குறுதிஅளித்து வாங்கப்பட்டு பிறகு, வாத்ராவின் தனிப்பட்ட செல்வாக்கு காரணமாக வணிக ரீதியிலான லைசென்ஸ் பெறப்பட்டதாக அதிகாரிகள் குற்றம்சாட்டினர்.இந்த வழக்கு விசாரணையின் அடிப்படையில், சொத்துகளை முடக்க நேற்று( ஜூலை 16) உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனடிப்படையில் வாத்ராவுக்கு சொந்தமான ஸ்கை லைட் ஹாஸ்பிட்டாலிட்டி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சொந்தமான 43 அசையா சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.37.64 கோடியாகும்.மேலும், இந்த வழக்கில், ரோஸ் அவென்யூ., நீதிமன்றத்தில் வாத்ராவுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் வாத்ரா உள்ளிட்ட11 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

ராஜா
ஜூலை 18, 2025 00:19

அ1 மற்றும் அ2 அ3 இன்னும் நிரவ்। லலித் கிங் பிக்ஷர் எல்லாம் சொந்த மாநிலத்து மக்களுக்கு மட்டுமே கருணையால் கிடைக்கும். மற்றவர்கள் விரோதிகள். என்ற அடிப்படையில் ஆட்சி நடக்கிறது.


V Venkatachalam
ஜூலை 17, 2025 21:10

அமலாக்க துறையை மிரட்ட சொல்லி அபிஷேக் மனு சிங்வி, கபில் சிபல் இவர்களுக்கு மிரட்டல் மெஸேஜ் போயிருக்கும். அவிங்க கிட்டேயிருந்து இந்த கேஸை விசாரிக்கிற நீதி மகான்களுக்கும் செல்லமா ஒரு மிரட்டல் போகும். அப்புறம் என்னன்னு நமக்கு நல்லாவே தெரியும். அவ்வளவுதான். புஸ்.... ‌


Iyer
ஜூலை 17, 2025 20:21

 நமது நாட்டின் நீதிமன்றங்கள் செயலற்றுவிட்டன.  நமது நாட்டின் நீதிபதிகளில் பெரும்பான்மையோர் அரசியல்வாதிகளை விட ஊழல் பெருச்சாளி ஆகி விட்டார்கள்.  20-30 வருடங்கள் கழித்தும் ஊழல் அரசியல்வாதிகளுக்கு தண்டனை கிடைப்பதில்லை.


Ramesh Sargam
ஜூலை 17, 2025 20:54

உங்களது இரண்டாவது பாயிண்ட் மிக மிக உண்மை.


Nagarajan D
ஜூலை 17, 2025 19:26

நாளை காலை இந்த உத்தரவுக்கு ஒரு இடைக்கால தடை கொடுக்கமலா இருக்கபோறானுங்க இந்த கருப்பு அங்கி போட்டவனுங்க


தாமரை மலர்கிறது
ஜூலை 17, 2025 19:04

காங்கிரஸ் தலைவராக அனைத்தும் தகுதிகளும் ராபர்ட்டுக்கு உள்ளது.


ராஜு
ஜூலை 17, 2025 18:53

37 கோடி எல்லாம் அவருடைய pocket money


பேசும் தமிழன்
ஜூலை 17, 2025 18:32

எல்லாம் நாட்டை ஆட்டையை போட்டு சேர்த்ததாக தான் இருக்கும்..... அத்தனையும் பறிமுதல் செய்து.... அரசு கருவூலத்தில் ஒப்படைக்க வேண்டும்.


spr
ஜூலை 17, 2025 18:22

"வாத்ராவுக்கு சொந்தமான ஸ்கை லைட் ஹாஸ்பிட்டாலிட்டி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சொந்தமான 43 அசையா சொத்துகள் பறிமுதல் செய்யப் பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.37.64 கோடியாகும்." - "ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்" நாளையே கபில் சிபில் வாதாட, அரசுத்தரப்பு வழக்கறிஞர் ஒப்புக்கு வாதாட நீதிமன்றம் அமுலாக்கத்துறைக்கு இந்த அதிகாரம் இல்லை என்று தள்ளுபடி செய்வதோடு இனி ஜென்மத்திற்கும் அமுலாக்கத்துறைக்கு இந்த அதிகாரம் இல்லை என்றொரு தீர்ப்பை வழங்கும் வழக்கமான ஒன்றுதானே. மோடி அரசும் அதோடு இதை மறந்து போகும்


A viswanathan
ஜூலை 17, 2025 19:26

காயலான்‌ கடை நடத்தி வந்தவனுக்கு இத்தனை சொத்தா.அனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை