உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாரணாசியில் பிரியங்காவை நிறுத்தியிருந்தால் மோடி தோல்வி அடைந்திருப்பார்; ராகுல்

வாரணாசியில் பிரியங்காவை நிறுத்தியிருந்தால் மோடி தோல்வி அடைந்திருப்பார்; ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ரேபரேலி: வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து பிரியங்காவை நிறுத்தியிருந்தால் மோடி தோல்வி அடைந்திருப்பார் என காங்., எம்.பி.ராகுல் தெரிவித்தார்.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் உபி. மாநிலம் ரேபரேலி தொகுதியில் ராகுல், அமேதி தொகுதியில் கே,எல். ஷர்மா ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதையடுத்து ராகுல், பிரியங்கா ஆகியோர் இன்று ரேபரேலி, அமேதி தொகுதிகளில் வாக்காளர்களை சந்தித்து வாக்களித்தமைக்கு நன்றி தெரிவித்தனர். ரேபரேலி தொகுதி காங். எம்.பியான ராகுல் கூறியது, கடந்த 2014 மற்றும் 2019 ஆகிய தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் 2024 தேர்தலில் பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் குறைந்த ஓட்டில் வெற்றி பெற்றுள்ளார்.இத்தொகுதியில் மோடியை எதிர்த்து எனது தங்கை பிரியங்காவை நிறுத்தியிருந்தால் மோடி நிச்சயம் தோல்வி அடைந்திருப்பார். பிரியங்கா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மோடியை வீழ்த்தியிருப்பார் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 70 )

Sridhar
ஜூன் 14, 2024 17:01

இவிங்களுக்கு இருக்கற அசாத்திய நம்பிக்கை வியக்க வைக்கிறது வெறும் 8500 ரூபாய்க்கு மக்களை திருப்பிவிடலாம்னு கணக்கு போட்டு, அதை கூச்சமே இல்லாம, சட்ட விதிமுறைகளுக்கு மீறின விஷயம்னு தெரிஞ்சும், செயல்படுத்தினானுங்க பாருங்க அதுல ஓரளவு வெற்றியும் கண்டிருக்காங்க. மோடி அலையின் ஆழம் வெறும் 8500 ரூபாய்தான்னு இந்த தேர்தல் நிரூபிச்சுருக்கறதால, இதே டெக்னீக்கை விரிவு படுத்தி இன்னும் விலாவரியா வரும் தேர்தல்களில் செய்யப்போறாங்க. மக்களும் பாவம் இவுனுங்க சொல்றத நம்பி தமிழக மக்கள் திருட்டு திமுகவுக்கு வோட்டுப்போட்ட மாதிரி, ராகுலுக்கு போடப்போறாங்க. நாடும் வளர்ச்சி இல்லாவிட்டாலும் எதோ வழியில் செல்லும். மக்கள் தங்கள் கஷ்டங்களுக்கு தாங்களே பொறுப்பு என்று உணர்ந்துகொண்டு அன்றாட வாழக்கையை தொடர்வார்கள். மன்மோகன் சிங்க் ராசா போன்ற ஆட்களையே பார்த்து பழகிவிட்ட அவர்களுக்கு, வரும் காலங்களில் ராவுல் ஸ்டாலின் போன்றோர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தமாட்டார்கள்.


SIVA
ஜூன் 14, 2024 15:25

உபி எலக்ஷனில் யாதவ மற்றும் சிறுபான்மை ஓட்டுக்கள் இணைந்ததால் இந்த வெற்றி, ஆனால் அடுத்த முறை சமாஜ்வாதி அல்லது மாயாவதி யாராவது பிஜேபி உடன் கூட்டணி வைப்பார்கள் அப்போது உபி எலெக்ஷனில் வழக்கம் காங்கிரஸ் கோவிந்தா தான் .....


SIVA
ஜூன் 14, 2024 15:21

எங்க தல ராகுல் சென்ற ஐந்து ஆண்டுகளில் இருநூற்று நாற்பது ஏழு முறை வெளி நாடு சென்று வந்து உள்ளார் , சுமார் மாதம் ஒரு முறை சென்று உள்ளார் , பிரதமர் வெளி நாடு சென்றால் விமர்சிக்கும் மீடியாக்கள் , இது பற்றி பக்குவமாய் கூட எழுதுவது இல்லை .... சந்தேகம் உள்ளவர்கள் கோகுலில் கூகுளில் செக் செய்து கொள்ளவும் .....


Tetra
ஜூன் 14, 2024 12:39

ஆஹா தெரியாம போயிருச்சே. ஹூம். பப்பு இல்ல இல்ல ராஹூ ஏன் நீங்க தமிழ் நாட்ல தனியா போட்டி போடக்கூடாது. சூப்பரா ஜயிக்கலாம்


Tetra
ஜூன் 14, 2024 12:38

ஆஹா தெரியாம போயிருச்சே. ஹூம். பப்பு இல்ல இல்ல ராஹூ ஏன் நீங்க தமிழ் நாட்ல தனியா போட்டி போடக்கூடாது. சூப்பரா ஜயிக்கலாம்


K V Ramadoss
ஜூன் 13, 2024 21:44

சரியான ஜோக்...ராகுல் ஒரு ஜோக் திலகம். எதிர் கட்சி தலைவராகப்போகிறார்....மேலும் நிறைய ஹாஸ்யங்கள் எதிர் பார்க்கலாம்.


Mohan
ஜூன் 13, 2024 18:42

ஐயா ராகுல்ஜி அவர்களே, வேட்பு மனு தாக்கல் நாள் கடைசி நேரம் வரை ரேபரேலி, அமேதியில் யார் நிறுத்தப்படுவார் என காங்கிரஸ் சொல்லவில்லை. இப்போது உங்க அக்கா வாரணாசியில் ஜெயித்திருப்பார் என, நாலாம் வகுப்பு மாணவன் போல ஏன் பீலா விடவேண்டும்?? ஒரு சாரார் மனத்தைத் தான் உங்களது 1 லட்சரூபா , கடா,கட்,கட் டோக்கன் மாற்றியுள்ளது. எனவே சூழ்நிலையை கருத்தில் கொள்ளாமல்,மனதில் தோன்றியதை பேசாமல், மெளனம் காத்தால் 2028 லாவது ஆட்சியில் அமர வாய்ப்பு கிடைக்கும். தங்கள் மெளனம் பலரை பயமுறுத்த வாய்ப்புள்ளது. முயற்சி திருவினையாக்கும்.


Gokul Krishnan
ஜூன் 13, 2024 16:33

அவ்வளவு பேசும் ராகுல் அல்லது தன் தங்கை பிரியங்காவை நிறுத்தி இருக்கலாமே ராஜ்ய சபா மூலம் எம் பி ஆக வேண்டாமே


sethu
ஜூன் 13, 2024 14:34

இந்தியாவை ஆக்கிரமிக்க நினைக்கும் கூட்டத்திற்கு துணை நிற்கும் உங்கள் குடும்பம் எங்களுக்கு தேவை இல்லை .


Ganesun Iyer
ஜூன் 13, 2024 14:14

சரி,சரி .... உங்க குடும்ப சொத்து, பத்து கணக்க லிஸ்ட்டு எடுத்து வர போராறாங்களே....


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை