உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹத்ராஸ் சம்பவம்: தாமதிக்காமல் கூடுதல் இழப்பீடு வழங்க ராகுல் கோரிக்கை

ஹத்ராஸ் சம்பவம்: தாமதிக்காமல் கூடுதல் இழப்பீடு வழங்க ராகுல் கோரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹத்ராஸ்: ஹத்ராஸ் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், தாமதம் ஏற்பட்டால், அது யாருக்கும் பயனளிக்காது, விரைந்து வழங்க வேண்டும் எனவும் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு காங்., எம்.பி., ராகுல் கோரிக்கை விடுத்துள்ளார்.உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் போலே பாபா ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த ஜூலை 2ல் நடைபெற்றது. நிகழ்ச்சி முடிந்ததும் வெளியேறியபோது, போலே பாபாவின் காலை தொட்டு வணங்க கூட்டத்தினர் முண்டியடித்தனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலியாகினர், பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், பாதிக்கப்பட்டவர்களையும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் எம்.பி.,யுமான ராகுல் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ராகுல் கூறியதாவது: இது ஒரு சோகமான சம்பவம். பலர் இறந்துள்ளனர். இந்த சம்பவத்தை நான் அரசியலாக்க விரும்பவில்லை. ஆனால் நிர்வாகத்தின் தரப்பில் குறைபாடுகள் உள்ளன, முக்கியமான விஷயம் என்னவென்றால், பாதிக்கப்பட்டவர்கள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள். எனவே, அவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என உ.பி., முதல்வரை மனம் திறந்து கேட்டுக்கொள்கிறேன். இழப்பீடு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால், அது யாருக்கும் பயனளிக்காது. உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் நான் தனிப்பட்ட முறையில் பேசினேன். அவர்கள் என்னிடம் போலீஸ் ஏற்பாடு போதவில்லை என்று சொன்னார்கள். மேலும் அவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர், அவர்களின் நிலைமையை நான் புரிந்து கொள்ள விரும்பினேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

rao
ஜூலை 06, 2024 02:42

Why should tax payers money be given to people who attended the meeting and caught in the melee, the organisers are responsible and the govt of UP should hold them responsible, confiscate their assets and pay to the victims family.


Bye Pass
ஜூலை 05, 2024 19:08

தேர்தலில் ஜெயிக்கணும் ...


ram
ஜூலை 05, 2024 13:35

காங்கிரஸ் டிரஸ்ட் மூலம் கொடுக்கலாமே


கத்தரிக்காய் வியாபாரி
ஜூலை 05, 2024 13:16

121 பேர் பலி. பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்த வேண்டும். மக்களும் கொஞ்சம் திருந்தனும்.


Kumar Kumzi
ஜூலை 05, 2024 12:55

அதா தேர்தல் வாக்குறுதில மாதம் 8500 ஓவா தருவேன்னு சொன்னல்ல அத குடு


nisar ahmad
ஜூலை 05, 2024 17:06

யோகிய ராஜினாமா செய்ச்சொல்லு ஆட்சிய காங்கிரஸ்ட கொடுக்க சொல்லு அந்த 8500ஓவாவ தருவாரு.


Sivagiri
ஜூலை 05, 2024 12:30

ஹத்ராஸுக்கு போன பாப்பு , கள்ளக்குறிச்சிக்கு ஏன் வரல ? ? . . . வந்து கள்ளச்சாராயத்தால் செத்தவர்களின் குடும்பத்தினரை , பார்த்து பேசி , நிவாரணத்தை கொடுத்து , இதை பற்றி பார்லிமெண்ட்ல பேசுவேன்னு - சொல்லிரூக்கலாம்ல , , கள்ளக்குறிச்சி இருக்குன்னு தெரியலையா ?. . , ஏதாவது கரைவேட்டிகாரன்கிட்ட - கேட்டால் நேரா கொண்டு விட்ருவான்


Rpalnivelu
ஜூலை 05, 2024 18:51

சூப்பர்னா பப்புவுக்கு செருப்படி கேள்வி.


S.Bala
ஜூலை 05, 2024 12:26

ரூ 8500/- கொடுக்கலாமே . காங்கிரஸ் கட்சி சார்பாக நிதி கொடுக்கலாமே ? கொடுத்து பழக்கம் இல்லையோ ? அப்படியே தமிழகம் வந்து மெத்தனால் சாராயம் குடித்து இறந்து போன 69 பேர் குடும்பத்துக்கும் அதிக இழப்பீடு வழங்க சொல்லலாமே.


GoK
ஜூலை 05, 2024 12:20

அரசியலாக்க விரும்பவில்லை என்று அரசியல் செய்கிறார். கள்ளக்குறிச்சிக்கு இவர் வந்தாரா? தெருவோர ரௌடியை போல பேச்சுதான் மிச்சம். இவரெல்லாம் பிரதமரானால் நாடு உருப்பட்ட மாதிரிதான்.


M Ramachandran
ஜூலை 05, 2024 12:16

எங்கெங்க்கு சாவு விழுகிறதோ சாவு விழுகிறதோ அங்கு வின்ஞ்சியாய்ய்ய எதிர் பார்க்கலாம். ஒரு சந்தேகம் நிறைய விழுந்தும் அங்கு ஏன் அப்பால் பொண்ணு அண்ணண் குடும்பத்தோடு வந்து ஒப்பாரி வைக்கல


Nandakumar Naidu.
ஜூலை 05, 2024 12:01

வந்து விட்டார் பிண அரசியல் செய்ய. கள்ளக்குறுச்சிக்கு ஏன் வரவில்லை ராகுல் ? ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. இந்த 65 உயிர்கள் மனிதர்கள் இல்லையா? கேடுகெட்ட எதிர் கட்சிகள்.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி