உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆரம்பிச்சிட்டாங்கய்யா ஆரம்பிச்சிட்டாங்க: வினேஷ் போகத் ஹரியானாவில் போட்டி?

ஆரம்பிச்சிட்டாங்கய்யா ஆரம்பிச்சிட்டாங்க: வினேஷ் போகத் ஹரியானாவில் போட்டி?

சண்டிகர் : ஒலிம்பிக் போட்டியில் பதக்கத்தை தவறவிட்ட மல்யுத்த வீராங்கனை வினோத்போகத் ஹரியானா தேர்தலில் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.ஹரியானா பஞ்சாப் மாநில எல்லையான ஷாம்புவில் விவசாயிகள் கடந்த பிப்.,13-ம் தேதியில் டெல்லி சலோ என்ற பெயரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் 200 வது நாளை எட்டியதை நிலையில் வினோத் போகத் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் 'உங்கள் மகள் உங்களுடன் இருக்கிறார் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.' விவசாயிகளின் கோரிக்கைகள் 'சட்டவிரோதமானது' அல்ல என கூறி உள்ளார். விவசாயிகளின் கோரிக்கைகள் இன்னும் ஏற்கப்படாததால் அவர்கள் போராட்டம் நடத்துவதாக வும், அவர்களைப் பார்ப்பது வலிக்கிறது, சில சமயங்களில் அவர்களுக்காக எதுவும் செய்ய முடியாமல் திணறுகிறோம். சர்வதேச அளவில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம், ஆனால் சொந்தக் குடும்பத்துக்காக எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அரசாங்கம் அவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும்.நாட்டின் விவசாயிகள் வருத்தமடைந்துள்ளனர், அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதே அரசின் முன்னுரிமையாக இருக்க வேண்டும். அவர்களின் போராட்டம் வீண் போகாது என நான் உறுதியாக நம்புகிறேன்.என்றார். இதனிடையே மாநிலத்தில் வரும் அக்., 5-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. இந்த தேர்தலில் அவர் காங்., சார்பில் போட்டியிட கூடும் எனஉறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து அவர் கூறுகையில் எனக்கு அரசியல் பற்றி தெரியாது, அதைப் பற்றி எனக்கு எந்த அறிவும் இல்லை' என்று கூறி உள்ளார்.ஹரியானாவின் பலாலியைச் சேர்ந்த போகத், பாரிஸ் ஒலிம்பிக்கில் தனது 50 கிலோ எடைப்பிரிவின் இறுதிப் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் வெளியேற்றப்பட்டார். இருப்பினும் ஹரியானாவின் ரோஹ்தக்கில் உள்ள சர்வ்காப் பஞ்சாயத்தால் அவருக்கு பதக்கம் வழங்கப்பட்டது.கடந்த ஆண்டு பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அப்போதைய இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும் பாஜக தலைவருமான பிரிஜ்பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக மல்யுத்த வீரர்கள் நடத்திய போராட்டத்தில் அவர் ஒரு பகுதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

nagendhiran
செப் 01, 2024 13:47

தேர்தலில்"போட்டியிட கட்சிகள் வற்புறுத்துவாக சொன்னாங்க? அப்ப காங்கிரஸ்"சார்பில்"போட்டினா?


nv
செப் 01, 2024 09:24

நமது நாட்டில் மட்டுமே ஒரு தோல்வியை சந்தித்த வீரருக்கு இவ்வளவு அலப்பறை.. தோல்வி தொடரும் என்று எதிர்பார்க்கலாம்


Nandakumar Naidu.
செப் 01, 2024 08:17

இன்னொரு தேச விரோத தீய சக்தி உருவாகப்போகிறது. இவர்களெல்லாம் நம் நாட்டின் சாபகேடுகள்.


RAMESH
செப் 01, 2024 08:15

நாடகம் அம்பலம் ஆகி விட்டது


இளந்திரையன் வேலந்தாவளம்
செப் 01, 2024 07:37

பூனை வெளியே வந்துவிட்டது


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 01, 2024 07:13

இவரும் ஜார்ஜ் சோரஸ் இன் ஆளுதான் .... நன்றி கெட்டவர்கள் ......


Kasimani Baskaran
செப் 01, 2024 05:59

அதற்கு எடைக்கட்டுப்பாடு இல்லை என்றால் சிறப்பாக செய்வார். இராகுலுக்கு ஏற்ற ஜோடி.


முக்கிய வீடியோ