உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இரவில் தூங்கவில்லை; போராட்டம் நடத்தும் டாக்டர்களை சந்தித்து மம்தா உருக்கம்

இரவில் தூங்கவில்லை; போராட்டம் நடத்தும் டாக்டர்களை சந்தித்து மம்தா உருக்கம்

கோல்கட்டா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்களை நேரில் சந்தித்துப் பேசினார்.மேற்குவங்கம், கோல்கட்டாவில் ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பயிற்சி டாக்டர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோல்கட்டாவில் போராட்டம் நடத்தும் டாக்டர்களை மம்தா பானர்ஜி சந்தித்தார்.

பதவி பெரிதல்ல

எங்களுக்கு நீதி வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பிய டாக்டர்களிடம், அவர் கூறியதாவது: உங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து யாரேனும் குற்றவாளிகள் என தெரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். 'திதி'யாக உங்களைச் சந்திக்க வந்தேன். முதல்வராக இல்லை. எனது பதவி பெரிதல்ல, மக்கள் பதவி பெரிது, நான் தூங்கவில்லை. நேற்றிரவு நீங்கள் அனைவரும் இந்த கனமழையில் போராட்டம் நடத்தினீர்கள். எனக்கு தூக்கமே வரவில்லை.

கடைசி முயற்சி

போராட்டம் காரணமாக அரசு நடத்தும் அனைத்து மருத்துவமனைகளின் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை பார்ப்பதற்கு கவலையாக உள்ளது. நெருக்கடியைத் தீர்க்க இது எனது கடைசி முயற்சி. இவ்வாறு அவர் கூறினார். முதல்வர் அங்கிருந்து வெளியேறிய பிறகு, போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள், பேச்சுவார்த்தை நடைபெறும் வரை தங்கள் கோரிக்கைகளில் சமரசம் செய்யத் தயாராக இல்லை என தெரிவித்தனர்.

ஆளும் கட்சி எம்.பி., குற்றச்சாட்டு

இது குறித்து, ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி குணால் கோஷ் கூறியதாவது: மாநில அரசுக்கு கெட்டபெயர் ஏற்படுத்த போாரட்டம் நடத்தும் டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்த சிலர் திட்டமிட்டுள்ளனர். பின்னர் அவர்கள் மாநில அரசு மீது குற்றம் சாட்டுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 14, 2024 22:16

இனி அங்கே ஆங்காங்கே குண்டு வெடிப்பு நிகழ வாய்ப்பு .....


என்றும் இந்தியன்
செப் 14, 2024 17:26

தேர்தலின் காலில் கட்டு, தள்ளுவண்டியில் தேர்தல் முடிந்தவுடன் கட்டு எடுத்து விட்டு சர்வ சாதாரணமாக நடந்து செல்லுதல்?????நாடகமே இந்த உலகம் ஆடுவதோ பொம்மலாட்டம் இப்போதும் அதே உருட்டு டப்பா தான்???ராஜினாமா நாடகம் தூக்கம் வரவில்லை நாடகம்


sankaranarayanan
செப் 14, 2024 17:26

இன்னுமா இவர் சொன்னதுபோன்று ராஜினாமா செய்ய வில்லை பிறகு இவருடைய பேச்சில் நம்பிக்கை இல்லாமல் போயிடிச்சே


Palanisamy Sekar
செப் 14, 2024 17:20

கோழைகளின் இறுதி ஆயுதமே கண்ணீர் தான். அதனை மம்தா சரியான நேரம் பார்த்து உதிர்த்து சென்றுள்ளார். பயம்வந்துவிட்டது. இனி பதவி போய்விடுமே என்கிற பயத்தில்தான் மம்தா திடீர் தரிசனத்தில் போராடுகின்ற மருத்துவர்களை சந்திக்க நேரில் வந்தார். பலே கில்லாடி. இதனை ஆரம்பத்திலேயே செய்திருக்கலாம். குண்டர்களை வைத்து தடயங்களை அழைக்கும்போது இந்த ஞானோதயம் எங்கே போனதாம் இந்த பதவி வெறி பிடித்த மம்தாவுக்கு. இதோ மம்தா வந்து சென்ற சில நிமிடங்களில் மம்தா கட்சியின் எம் பி மிரட்டல் தொனியில் பேசுவதை. எப்படியாயினும் மம்தாவுக்கு இது இறுதியான தேர்தலாகவே இருக்கும் என்கிறது செய்திகள். மம்தா மண்டையில் மணியோசை அடித்துவிட்டது. அவ்ளோதான் முடிஞ்..


M Ramachandran
செப் 14, 2024 16:46

மம்தா நம் சன் டிவி சீரியலில் நடிக்கலாம். நல்ல திறமையானா நடிகை.


P. VENKATESH RAJA
செப் 14, 2024 16:04

மம்தாவுக்கு எந்த நேரத்தில் என்னென்ன செய்ய வேண்டும் என அனைத்தும் தெரியும்


ஆரூர் ரங்
செப் 14, 2024 15:51

இரவில் தூங்கவில்லை. அதற்கு பதில் பகலில் நிம்மதியாக குறட்டை விட்டுத் தூங்கினேன். ( திருடர்கள் இரவில் உறங்கினால் பிழைப்பு கெட்டுவிடும்)


Kumar Kumzi
செப் 14, 2024 15:34

மருத்துவர்களே இந்த பதவி வெறி பிடித்த நம்பாதீங்க பதவிக்காக எல்லா விதமான நாடகமும் போடுவார்


Sankar Ramu
செப் 14, 2024 15:23

பதவி பயம். ஒரு டாக்டரை தூங்கும் போது சின்னாபிணமாக்கியவங்களை பாதுகாக்க தூங்கவில்லையோ.


Sck
செப் 14, 2024 15:21

நான் மம்தா தீதியின் அனுதாபி இல்லை. ஆனால் மருத்துவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த முதல்வர் 2மணி நேரம் காத்திருந்தாரா, இல்லையா? போராடும் மருத்துவ சங்கங்களின் பிரதிநிதிகள் ஏன் செல்லவில்லை. போராட்டம் அதிக அளவு இழுத்தால் பிசுபிசுத்து விடும்.


சமீபத்திய செய்தி