உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஷிகாவி இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு தலைவலி: மாஜி எம்.எல்.ஏ., சுயேச்சையாக மனுத்தாக்கல்

ஷிகாவி இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு தலைவலி: மாஜி எம்.எல்.ஏ., சுயேச்சையாக மனுத்தாக்கல்

ஹாவேரி: ஷிகாவியில் தனக்கு சீட் தராததால் கோபமடைந்த காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ., அஜம் பிர் கத்ரி, அதிருப்தி வேட்பாளராக நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.கர்நாடகாவில் காலியாக உள்ள சென்னப்பட்டணா, ஷிகாவி, சண்டூர் - தனி தொகுதிகளுக்கு நவ., 13ல் இடைத்தேர்தல் நடக்கிறது.ஷிகாவியில் காங்கிரஸ் வேட்பாளராக முதலில் வைஷாலி என்பவரின் பெயர் அறிவிக்கப்பட்டது. ஆனால் அது உத்தேச பட்டியல் என காங்கிரஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டது. இத்தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ., அஜம்பிர் கத்ரி, யாசிர்கான் பதான் உட்பட பலரின் பெயர் பரிசீலிக்கப்பட்டது. கடைசியில், யாசிர் கான் பதான் போட்டியிடுவார் என காங்கிரஸ் அறிவித்தது.

ஆலோசனை

இதனால் அதிர்ச்சியடைந்த அஜ்ஜம்பிர் கத்ரி, தனது ஆதரவாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவரது ஆதரவாளர்கள், 'கட்சி மேலிடம் ஏமாற்றி உள்ளது; சுயேச்சையாக போட்டியிடுங்கள். நாங்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம். நீங்கள் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை என்றால், உங்களுக்கு எதிராகவே போராட்டம் நடத்துவோம்' என்றனர்.இதையடுத்து, சுயேச்சையாக போட்டியிடுவதாக அஜ்ஜம்பிர் கத்ரி அறிவித்தார். வேட்புமனுத் தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால், காரில் சென்றால் போக்குவரத்து நெரிசலில் சிக்க நேரிடும் என கருதி, தனது ஆதரவாளருடன் இரு சக்கர வாகனத்தில் சென்றார்.வேட்புமனுத் தாக்கல் செய்ய 13 நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில், தாலுகா அலுவலக நுழைவு வாயிலில் இருந்து வேட்புமனுவுடன் வேகமாக ஓடிச் சென்று தாக்கல் செய்தார்.

புலம்பல்

பின், அவர் கூறுகையில், ''சுயேச்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளேன். காங்கிரஸ், பா.ஜ., வேட்பாளரை தோற்கடிக்க வேண்டும் என்பது தான் எனது நோக்கம். நான் இத்தாலுகாவின் மகன். என்னை போட்டி வேட்பாளராக களமிறக்க யாரும் நெருக்கடி கொடுக்கவில்லை.''எங்கள் தர்காவுக்கு வந்த அமைச்சர் ஜமிர் அகமது கானிடம், காங்கிரஸ் வேட்பாளர் பதான், ஹனகல்லைச் சேர்ந்தவர். பாரத், ஹூப்பள்ளியை சேர்ந்தவர். இவர்களை தொகுதி மக்கள் புறக்கணித்துவிடுவர் என்று கூறினேன். ஆனால், எனக்கு கட்சி வாய்ப்பு தரவில்லை,'' என்றார்.முன்னதாக வேட்புமனுத் தாக்கல் செய்த காங்கிரஸ் வேட்பாளர் யாசிர் கான் பதான் கூறியதாவது:எங்கள் கட்சியில் எந்த குழப்பமும் இல்லை. யாருக்கு சீட் கிடைத்தாலும், ஒற்றுமையாக பணியாற்றுவோம் என்று ஏற்கனவே கட்சி தலைமையிடம் கூறியிருந்தோம். தொகுதியில் காங்கிரசுக்கு நல்ல பெயர் உள்ளது. இதை தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.கடந்த நான்கு மாதங்களாக தொகுதி முழுதும் பயணம் மேற்கொண்டு, மக்களின் குறைகளை கேட்டுள்ளேன். சமூக நீதியின் கீழ் கட்சி மேலிடம் எனக்கு சீட் கொடுத்துள்ளது.அஜ்ஜம்பிர் கத்ரி மூத்த தலைவர். அவர் என்ன கூறினார் என்று தெரியவில்லை. அவரிடம் கட்சி தலைவர்கள் பேசுவர்.இவ்வாறு அவர் கூறினார்.இதுபோன்று மற்றொரு முன்னாள் எம்.எல்.ஏ., மஞ்சுநாத் கன்னுாரும், தனது மகன் ராஜு கன்னுாருக்கு சீட் கேட்டிருந்தார். அவருக்கும் சீட் வழங்காததால், மஞ்சுநாத் கன்னுார், சுயேச்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.� ஷிகாவி தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்த யாசிர் கான் பதான். � வேட்புமனு தாக்கல் செய்ய இரு சக்கர வாகனத்தில் வந்த அஜம்பிர் கத்ரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை