உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தலையின்றி நிர்வாணமாக கால்வாயில் கிடந்த பெண் சடலம்

தலையின்றி நிர்வாணமாக கால்வாயில் கிடந்த பெண் சடலம்

நொய்டா: உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் உள்ள கால்வாயில் தலை, கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் நிர்வாணமாக கிடந்த பெண் சடலத்தை போலீசார் மீட்டனர். உ.பி.,யின் நொய்டா நகரின் செக்டர் 108ல், தலையில்லாமல் பெண் சடலம் கால்வாயில் கிடப்பதாக துப்புரவு பணியாளர் ஒருவர் போலீசுக்கு தகவல் அளித்தார். உடனடியாக விரைந்து வந்த போலீசார், கைகள் மற்றும் தலை துண்டிக்கப்பட்டு நிர்வாண நிலையில் கிடந்த பெண் சடலத்தை மீட்டனர். அதை, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண் யார் என்பதற்கான ஆவணங்களோ, அடையாளங்களோ இல்லாததால் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்து வருகின்றனர். வேறு பகுதியில் கொலை செய்து விட்டு, நள்ளிரவில் ஆள் நடமாட்டம் இல்லாதபோது உடலை கொண்டு வந்து கால்வாயில் வீசியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த கொலையை செய்தது யார், கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து அறிய, தனிப்படை அமைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி