உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெப்ப அலை: உ.பி.யில் 6 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழப்பு

வெப்ப அலை: உ.பி.யில் 6 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழப்பு

லக்னோ: கடுமையான வெப்ப அலை தாக்கியதால் உ.பி. மாநிலத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படை வீரர்கள் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் கவலைக்கிடமாக இருக்கின்றனர். வெப்ப அலை தாக்கியதில் 6 பாதுகாப்பு படை வீரர்களின் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு அதிகரித்ததால் அவர்கள் உயிரிழந்தனர்.

பீஹாரில் உயிரிழப்பு 20 ஆக உயர்வு

வட மாநிலங்களை கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், வெயில் தொடர்பான சம்பவங்களில் பீஹாரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.பீஹாரில், அதிகபட்சமாக வெப்பநிலை 48.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் அவுரங்காபாத்தில் பதிவானது. இதனால், மாணவர்கள், முதியவர்கள், நோயாளிகள் என பலர் அவதியடைந்து வருகின்றனர். ஷேக்புரா பகுதியில் ஏராளமான பள்ளி மாணவர்கள் மயக்கமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இதனிடையே, மாநிலத்தில் வெப்பம் தாங்க முடியாமல் அவுரங்காபாத்தில் 13 பேரும், கைமூர் மாவட்டத்தில் 4 பேரும், போஜ்பூர் மாவட்டத்தில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் 132.8 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியதால் மக்கள் தவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்புசாமி
ஜூன் 01, 2024 15:48

.. சூரியனைப் பார்ர்து தியானம் பண்ணி வெப்பத்தைக்.குறைக்க ஆணையிட்டிருக்காராம். நவம்பருக்கு குறைந்து விடும்.


kulandai kannan
ஜூன் 01, 2024 14:17

இம் மரணங்களுக்கு தேர்தல் ஆணையமே பொறுப்பு. FIR பதிவு செய்ய வேண்டும்.


அப்புசாமி
ஜூன் 01, 2024 08:41

ஏ.சி ரூமில் உக்காந்துக்.கிட்டு எலக்ஷன் தேதி குறிக்கிறவர்களுக்கு இதெல்லாம் எங்கே புரியப்.போகுது? கொளுத்தும் வெயில்லயும் கோட், சூட், டை போட்டுக்கிட்டு பேட்டி குடுக்கறவங்க.


GMM
மே 31, 2024 20:14

வெப்ப அலை வீசி உத்தர பிரதேசத்தில் உயிர் இழப்பு. உஷ்ணம் 100 டிகிரி F வரும் வரை மாநிலங்களில் தனியார் காலி நிலத்தில் கட்டாயம் மரம் வளர்ப்பு. இல்லாவிட்டால் அரசு எடுத்து நீண்ட கால ஏல / குலுக்கல் முறையில் குத்தகை. மாநில நதிகள் இணைப்பு. குடும்ப கட்டுப்பாடு கட்டாயம். பறவை, விலங்கு உணவிற்கு தடை. பிளாஸ்டிக் தடை. எரிபொருள் வாங்கும் விலைக்கு விற்பனை. அதிக வெப்பம் / கதிர் வீச்சு உருவாக்கும் தொழில் / பொருளுக்கு விற்பனை, பகுதி நேர கட்டுப்பாடு. லாரி போக்குவரத்து 10 முதல் 6 மணி வரை இரவில் மட்டும். ஆக்கிரமிப்பு அகற்றம். கட்டடம் 10 சதம் ஜன்னல். நகரில் பத்து சதவீத திறந்த வெளி கட்டாயம். மழை நீர் பூமிக்குள் செலுத்த வேண்டும். பாதுகாப்பு இல்லை என்றால் வாழ முடியாது.


Ramesh Sargam
மே 31, 2024 19:58

பாதுகாப்பு படைவீரர்கள் உயிரிழப்பு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. நாட்டிற்கே பாதுகாப்பு அளிப்பவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. அவர்கள் ஆன்மா சாந்தியடையட்டும். வெய்யிலின் தாக்கத்திலிருந்து அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும். அது மத்திய அரசின் கடமை.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை