உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புர்கா அணியாதவர்களுக்கு நரகம்: பள்ளி சிறுமி கருத்தால் சர்ச்சை

புர்கா அணியாதவர்களுக்கு நரகம்: பள்ளி சிறுமி கருத்தால் சர்ச்சை

சாம்ராஜ் நகர்:'புர்கா அணிந்தவர்கள் இறந்த பின், அவர்கள் உடலுக்கு எதுவும் நடக்காது. ஆனால், குட்டையான உடை அணிந்தவர்களின் உடல்களை பாம்புகள், தேள்கள் தின்றுவிடும். அதுமட்டுமின்றி, அவர்கள் நரகத்திற்கு செல்வர்' என்ற நான்காம் வகுப்பு சிறுமியின் கருத்து, கர்நாடகாவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

4ம் வகுப்பு

கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. இதில், முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த 4ம் வகுப்பு சிறுமி கலந்து கொண்டார். அவர், கண்காட்சியில் இரண்டு பொம்மைகளை வைத்து இருந்தார். அதில், புர்கா உடை அணிந்த ஒரு பொம்மையும், மேற்கத்திய உடை அணிந்த பொம்மையும் வைக்கப்பட்டு இருந்தன.இந்த இரண்டு பொம்மைகளுக்கு பக்கவாட்டில், பொம்மை சவப்பெட்டிகளும் வைக்கப்பட்டிருந்தன. இதில், புர்கா உடை அணிந்த பொம்மையின் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியின் மீது பூக்கள் வைக்கப்பட்டு இருந்தன. மேற்கத்திய உடை அணிந்த பொம்மைக்கு அருகில் வைக்கப்பட்டு இருந்த சவப்பெட்டியின் மீது தேள், பாம்பு போன்ற உருவங்கள் வரையப்பட்டு இருந்தன.

தேள்கள் தின்றுவிடும்

இதற்கு விளக்கம் அளித்து, சிறுமி கூறியதாவது: புர்கா உடை அணிந்தவர்களின் உடலுக்கு இறந்த பின்பு எதுவும் நடக்காது. ஆனால், குட்டையான உடை அணிந்தவர்களின் உடல்களை பாம்புகள், தேள்கள் தின்றுவிடும். அதுமட்டுமின்றி, அவர்கள் நரகத்திற்கு செல்வர். புர்கா அணியாமல், தன் மனைவியை வெளியே நடமாட அனுமதிக்கும் கணவர், மிகவும் மோசமானவர். இவ்வாறு அவர் கூறினார்.

கண்டனம்

இது வீடியோவாக, நேற்று முன்தினம் இணையத்தில் பரவியது. இந்த வீடியோ கடந்த ஜனவரி 5ம் தேதி எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.சாம்ராஜ் நகர் பொதுக்கல்வி துணை இயக்குனர் ராஜேந்திர ராஜே அர்ஸ் கூறுகையில், ''இது குறித்து சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வட்டார கல்வி அலுவலரிடம் அறிக்கை சமர்ப்பிக்கும்படி கூறியுள்ளேன். விரைவில் முழுமையான பதில் அளிக்கப்படும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Jay
மார் 26, 2025 16:57

மும்மொழி கொண்டு வந்தால் தமிழ் அழியும் என்று போலியாக நாடகம் நடத்தும் திமுகவிடம் இதைக் கேட்க வேண்டும். ஒருவர் முகமதியர் ஆகிறார் என்றால் அவருடைய சொந்த மொழியை விட்டுவிடுவார், உடுத்தும் உடைகளை மாற்றிக் கொள்வார், சாப்பிடும் பழக்கத்தை மாற்றிக்கொள்வார். அதுவரை பக்கத்து வீட்டுக்காரர்களாக இருந்தவர்களை எதிரிகளாகவும், காபீர்களாக பார்க்க ஆரம்பிப்பார்.


Jay
மார் 26, 2025 12:13

எந்த மாநிலமாக இருந்தாலும், மார்க்கத்தின் வழியில்தான் பின்பற்றுபவர் இருப்பார்கள். குழந்தைகளாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் மார்க்கத்தின் புத்தகம் ஒன்றுதான்.


Karthik
மார் 26, 2025 10:37

அறிவியல் கண்காட்சியில் மதம் சார்ந்த நம்பிக்கைக்கு என்ன வேலை?? ஒருவேளை அந்த பள்ளியில் அறிவியல் என்று சொல்லி மதத்தை போதிக்கின்றனரோ..?? சுத்த அறிவு கெட்டத்தனமா இருக்கே??.


Kulandai kannan
மார் 26, 2025 10:16

அந்த வயதில், இந்து குழந்தகளுக்கு தாம் இந்து என்பதுகூட தெரிந்திருக்காது.


பேசும் தமிழன்
மார் 26, 2025 08:09

ஏண்.. அறிவியல் கண்காட்சிக்கும்.. சவப்பெட்டிக்கும் என்ன சம்பந்தம்? சரி சரி அங்கே நடப்பது இண்டி கூட்டணி இத்தாலி பப்பு கட்சி ஆட்சி அல்லவா.... அப்போ அப்படி தான் இருக்கும்.


பேசும் தமிழன்
மார் 26, 2025 08:03

அட இத்தாலி பப்பு... உன் கட்சி ஆட்சி செய்யும் இலட்சணம் இது தானா.. அடப்பாவிகளா அந்த பிஞ்சு குழந்தையின் மனத்தில் நஞ்சை விதைத்து இருக்கிறீர்களே !!!


RAJ
மார் 26, 2025 07:37

இப்டி பயமுறுத்தி பயமுறுத்திதான் இந்திய திருநாட்டில் இத்தனை கோடி மக்களை மாற்றி இருக்கிறார்கள். ஒரு தலைமுறையை மாற்றினால் போதும் பணம் குடுத்தோ, பயமுறுத்தியோ, பெண்களை கவர்ந்தோ, அடித்து துன்புறுத்தியோ,, இப்படி பல யுக்திகளை கையாள்வார்கள்..


tamil king
மார் 26, 2025 07:06

இன்றைய கால சூழ்நிலையில் அனைத்து பெண்களும் புர்க அணிந்துகொள்வது நல்லதே.


பேசும் தமிழன்
மார் 26, 2025 08:05

ஏன் ஆண்கள் கூட அணியலாம்.... அதை முதலில் நீயே செயல்படுத்து.


Vijay
மார் 26, 2025 06:40

காங்கிரஸ் ஆட்சியில் வேறு என்ன எதிர் பார்க்க முடியும்


D.Ambujavalli
மார் 26, 2025 06:05

நாலாம் வகுப்புக் குழந்தை இவ்வளவு வியாக்கியானம் செய்யுமா? பெற்றோர்கள் அல்லது ஆசிரியர்களின் வக்கிர புத்தியை மாணவி மூலம் வெளிப்படுத்தியுள்ளனர் புதுக் கழகத்துக்கு விதை போட்டிருக்கிறார்கள்