உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கற்பழிப்பு வழக்கில் மலையாள நடிகர் எடவெலா பாபு கைது

கற்பழிப்பு வழக்கில் மலையாள நடிகர் எடவெலா பாபு கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொச்சி: மலையாள நடிகர் எடவெலா பாபு, கற்பழிப்பு வழக்கில் கைதாகி, பின்னர் ஜாமினில் வெளியே வந்தார்.மலையாள திரை உலகில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக விசாரித்த நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை கடந்த மாதம் வெளியானது. இதைத்தொடர்ந்து நடிகைகள் பலரும், தாங்கள் எவ்வாறு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டோம் என வெளிப்படையாக கூறி வருகின்றனர்.அதன் அடிப்படையில் வழக்குகள் பதியப்பட்டு வருகின்றன.இதன்படி புகாருக்கு ஆளான நடிகர் எடவெலா பாபு மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இவர் மலையாள திரைப்பட உலகில், 1982 முதல் நடித்து வருகிறார். 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கொச்சியை சேர்ந்த நடிகை கூறியிருந்த கற்பழிப்பு புகார் அடிப்படையில் பாபு மீது ஐபிசி பிரிவு 354( பாலியல் தொந்தரவு) 376 பிரிவு (கற்பழிப்பு) மற்றும் 509 பிரிவு(பெண்களை இழிவாக பேசுவது) ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டது. போலீசார் இன்று அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.கொச்சி கடலோர போலீஸ் தலைமையகத்தில்,3 மணி நேர நீண்ட விசாரணைக்கு பின் அவருக்கு ஜாமின் கிடைத்தது. இவர், முன் ஜாமின் பெற்றிருந்ததால் அவர் வெளிவந்துள்ளார்.விரைவில், பாபுவுக்கு எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில், மருத்துவ பரிசோதனை நடத்தப்பட இருக்கிறது. பாபு மீது புகார் அளித்த நடிகையே, நடிகர் முகேஷ், ஜெயசூர்யா, மணியன்பில்ல ராஜூ, வக்கீல் சந்திரசேகரன் மற்றும் படத்தயாரிப்பாளர்கள் நோபிள் மற்றம் விச்சு ஆகியோர் மீது வழக்கு தொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, இதேபோன்ற பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கொல்லம் மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ.,வும் நடிகருமான முகேஷ், கைதாகி ஜாமினில் வெளியே வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Kanns
செப் 26, 2024 12:37

Atleast 50% Cases are False. Here False Complainants are Extremely Greedy & Vested & AntiSocial Women Who Will Do Anything for Money & HiPay CineChances. Sack & Punish Judges Not Punishing Power-Misusing Rulers, their Biased Officials& Vested FalseComplainantGangs women, SCs, unions/ groups, advocates etc


Ramesh Sargam
செப் 25, 2024 20:05

இதுபோன்ற குற்றங்களுக்கெல்லாம் ஜாமீன் உடனே எப்படி கிடைக்கிறது. மார்க்கெட்டில் கொத்துமல்லி, கறிவேப்பிலை கூட கிடைப்பதில்லை. ஆனால் நமது நீதிமன்றங்களில் ஜாமீன் கொட்டிக்கிடக்கிறது. கேட்டவுடன் கொடுத்து விடுகிறார்கள். என்னவோ போங்க ...


Ramesh Sargam
செப் 25, 2024 20:03

மலையாள நடிகர்களில் ஒருவரும் யோக்கியன் இல்லையா? நாளுக்கு நாள் லிஸ்டில் ஒருவர் பெயர் வருகிறது.


Lion Drsekar
செப் 25, 2024 17:42

மனிதனின் உடலிலும் மூளையிலும் ஏற்படும் இரசாயன மாற்றங்களே இவைகளுக்கு காரணம் , இதை சிலர் காலம் என்று கூறுகிறார்கள், சிலர் பணம் பத்தும் செய்யும் என்கிறார்கள், குணம் என்பது கையிருப்பை பொருத்தித்து , அது குறைந்தாலும் நேரத்துக்கும், காலத்துக்கும் ஏற்ப விதி என்ற .பெயரில் விளையாட்டும் விளையாடும் விளையாடும், வீட்டுக்குள் அமைதியாக இருந்தாலும் எந்த சட்டமும் யார் மீதுவேண்டுமானாலும் பாயும் , ஒரே ஒரு உதாரணம், முன்பெல்லாம் வீட்டுக்கு வெளியே சென்றால்தான் நேர்மையானவர்களும் பல இன்னல்களுக்கு ஆளாகவேண்டிய ஒரு நிலை, தற்போது வீடு தேடி வரும்,, வீட்டு வாசல்களில் வாகனங்கள் நிறுத்த அனுமதி இல்லை என்ற போர்டு வைத்தால் சட்டப்படி நடவடிக்கை, இந்த .போர்டை ஒவ்வொரு வீட்டு வாசல் கேட்டுகளிலும் வைத்து பிரிக்க முடியாதபடி கட்டிவைப்பது விளம்பரதாரர்கள் , ஆனால் பாதிப்புக்கு உள்ளாக்கப்போவது வீட்டுக்குள் இருக்கும் வாயில்லா பூர்த்திகளான வீட்டில் குடியிருப்பவர்கள், இனி யார்வேண்டுமானாலும் யார்வீட்டு எந்த ஒரு வாகனத்தியும் நிறுத்தலாம், அவர்கள் எப்போது அவர்களது வண்டியை எடுக்கிறார்களோ அப்போதுதான் சொந்த வாகனங்கள் வைத்திருப்பவர்கள் தங்கள் வானங்களை வெளியே எடுக்கவேண்டிய ஒரு நிலை, அப்படியே எடுக்கவேண்டும் என்றால் ஒன்று ஆக்கிரமிப்பாளர்களிடம் கெஞ்சவேண்டும் அல்லது காவல் துறைக்கு புகார் அளித்து, அவர்கள் வந்தபின்பு ...... அந்த வாகனம் அப்புறப்படுத்தப்பட்ட பின்புதான் , வாகன உரிமையாளர்கள்தங்கள் தங்கள் வானங்களை எடுக்க வேண்டிய ஒரு கட்டாயம், ஆக எல்லோருக்குமே வீட்டில் இருந்தாலும் சட்டம் பாயும் , கைது கண்டிப்பாக இருக்கும், ஹிரண்யா நமஹ , வந்தே மாதரம்


G.Santhosh
செப் 25, 2024 17:17

இடைவேளை பாபு பெயரை சரியாக பதிவிடவும்


புதிய வீடியோ